Published:Updated:

ஆசிரியர்களிடம் அத்துமீறும் மாணவர்கள்; என்னவாகும் எதிர்காலம்? அவள் விகடன் முன்னெடுத்த கலந்துரையாடல்!

கலந்துரையாடல்

பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரோடு, காவல் துறையினர், வழக்கறிஞர், உளவியல் ஆலோசகர், சமூக செயற்பாட்டாளர் என பலதரப்பட்டவர்களும் இப்பிரச்னை குறித்து உரையாடும் விதமாகக் கலந்துரையாடல் ஒன்றை அவள் விகடன் சார்பாக நடத்தினோம்.

ஆசிரியர்களிடம் அத்துமீறும் மாணவர்கள்; என்னவாகும் எதிர்காலம்? அவள் விகடன் முன்னெடுத்த கலந்துரையாடல்!

பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரோடு, காவல் துறையினர், வழக்கறிஞர், உளவியல் ஆலோசகர், சமூக செயற்பாட்டாளர் என பலதரப்பட்டவர்களும் இப்பிரச்னை குறித்து உரையாடும் விதமாகக் கலந்துரையாடல் ஒன்றை அவள் விகடன் சார்பாக நடத்தினோம்.

Published:Updated:
கலந்துரையாடல்

கல்விக்கூடங்களிலிருந்துதான் வளமான தலைமுறை உருவாகிறது என்கிற கூற்று, சமீப நாள்களில் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட சில வீடியோக்களால் சுக்குநூறாக உடைந்திருக்கிறது. ஆசிரியரை அடிக்கக் கை ஓங்கும் மாணவன், ஆசிரியரை சுற்றி வட்டமிட்டு கைதட்டி கேலி செய்யும் மாணவர்கள், சீருடையில் மது அருந்தும் மாணவிகள், இரும்பு டெஸ்கை உடைக்கும் மாணவன் என்பது போன்று வெளியான வீடியோக்கள் பார்க்கிறவர்கள் அனைவருக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. யார் மீதும் எந்த பயமும் இன்றி, நமது சமூக மதிப்பீடுகள் குறித்த எந்த அக்கறையும் இன்றி அவர்கள் வன்மையாக நடந்துகொள்ளும் போக்கு எதிர்காலம் குறித்து எப்படி இருக்கும் என்கிற கேள்வியை உண்டாக்கியிருக்கிறது.

இப்பிரச்னை குறித்து பலவிதப்பட்ட கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் பல தரப்பினரோடு உரையாடல் வழியாக இதற்கான காரணிகளைக் கண்டறிந்து தீர்வை எட்டுவதற்கான செயல்பாட்டை முன்னெடுக்கவிருக்கிறது `அவள் விகடன்.' முதல்கட்டமாகப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரோடு, காவல் துறையினர், வழக்கறிஞர், உளவியல் ஆலோசகர், சமூக செயற்பாட்டாளர் எனப் பலதரப்பட்டவர்களும் இப்பிரச்னை குறித்து உரையாடும் விதமாகக் கலந்துரையாடல் ஒன்றை அவள் விகடன் சார்பாக நடத்தினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 30-ம் தேதி) விகடன் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் பகலவன், வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சமூக செயற்பாட்டாளர் கீதா நாராயணன், உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தி.பரமேசுவரி, அரசுப் பள்ளி ஆசிரியர் வேலு மற்றும் சென்னையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் மாணவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

அவள் விகடன் கலந்துரையாடல்
அவள் விகடன் கலந்துரையாடல்

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தி.பரமேசுவரி, ஆசிரியர் வேலு ஆகியோர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பேசினர். மாணவர்களை அடிக்கக் கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கையில் எந்தக் கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை என வேலு தெரிவித்தார். ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது கூடாது என்பதை ஏற்றுக்கொண்டாலும், வேறெந்த வகையிலும் அவர்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் ஆசிரியர்கள் இல்லை என தி.பரமேசுவரி தெரிவித்தார். இதற்கு பதில் கூறும் விதமாக பேசிய துணை ஆணையர் பகலவன், காவல் துறையினரே தற்போது கைதிகளை அடிப்பதில்லை. அடிப்பது போன்ற தண்டனைகள் மூலமாகவெல்லாம் மாணவர்களைத் திருத்த முடியாது. ஆசிரியர்களின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூகமே குற்றமயமாகிவிட்டது என்கிறபோது பள்ளி மாணவர்களிடமும் அதுதான் வெளிப்படும் என்றும், போதைப் பழக்கங்களுக்கு அவர்கள் எளிதில் அடிமையாகும் சூழல் முக்கிய காரணி எனவும் கீதா நாராயணன் கூறினார்.

சமூகம் மற்றும் குடும்ப சூழல்களிலிருந்தே அவர்களின் மன அமைப்பு உருவாகிறது என்பதால் மாணவர்களை மட்டுமே இதற்கு முழுமுதல்காரணியாகக் கூற முடியாது என்று உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த் தெரிவித்தார். சிறார் குற்றங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கிறது என்று வழக்கறிஞர் ஆதிலட்சுமி விரிவாகப் பேசினார்.

கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் செல்கையில் தங்களால் முழுமையாகப் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறிய மாணவர்கள், வெகுசில மாணவர்கள் மட்டுமே இதுபோன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.

பள்ளி தவிர மற்ற நேரங்களில் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் இருப்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இக்கலந்தாய்வு ஒரு தொடக்கம்தான். தொடர்ச்சியாக இப்பிரச்னைகள் குறித்து உரையாடி, செயல்முறையில் தீர்வை நோக்கி களம் இறங்கவிருக்கிறது `அவள் விகடன்'.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism