Published:Updated:

“முக்கியப் பதவிகளுக்கு முழு நேர அதிகாரிகளை நியமிப்பது எப்போது?”

பாரதியார் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
பாரதியார் பல்கலைக்கழகம்

‘இன்சார்ஜ்’ இம்சையில் பாரதியார் பல்கலைக்கழகம்

“முக்கியப் பதவிகளுக்கு முழு நேர அதிகாரிகளை நியமிப்பது எப்போது?”

‘இன்சார்ஜ்’ இம்சையில் பாரதியார் பல்கலைக்கழகம்

Published:Updated:
பாரதியார் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
பாரதியார் பல்கலைக்கழகம்
கடந்த 2018-ம் ஆண்டு, லஞ்சம் வாங்கியதற்காகக் கையும் களவுமாகப் பிடிபட்டார் அப்போதைய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தவர் கணபதி. அதைத் தொடர்ந்து துணைவேந்தர் பதவியிலிருந்து கணபதி நீக்கப்பட்டார். ‘கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுத்தம் செய்ய வேண்டியது சாலைகளை அல்ல; பல்கலைக்கழகங்களைத்தான்’ என்பதை உணர்த்திய சம்பவம் அது.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக காளிராஜ் நியமிக்கப்பட்டார். காளிராஜ் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாகிவிட்டன. ஆனால், ‘பழைய பிரச்னைகள் எதுவுமே மாறவில்லை’ என்று குமுறுகின்றனர் பல்கலைக்கழக ஊழியர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள், ‘‘கணபதி துணைவேந்தராக இருந்த காலகட்டத்திலிருந்தே பல்கலைக்கழகத்தின் முக்கியப் பதவிகளுக்கு பிரத்யேகமாக அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. வேறு ஒரு துறையில் பணியில் இருப்பவர்களையே முக்கியப் பதவிகளுக்கும் இன்சார்ஜ் ஆக நியமித்துவிடுகின்றனர்.

“முக்கியப் பதவிகளுக்கு முழு நேர அதிகாரிகளை நியமிப்பது எப்போது?”

கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பதிவாளர் பதவி இன்சார்ஜ் அடிப்படையிலேயே இருக்கிறது. தற்போது பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளராக இருக்கும் முருகன், திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர். இப்போது விலங்கியல்துறைத் தலைவராக உள்ளவர், இன்சார்ஜ் அடிப்படையில் பதிவாளர் பதவியை ஒன்றரை ஆண்டுகளாக வகித்து வருகிறார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்றுவருகிறது.

கணபதிக்கு உதவியாக இருந்ததற்காக அப்போது தொலைதூரக் கல்வி இயக்குநர் இன்சார்ஜ் ஆக இருந்த மதிவாணன் நீக்கப்பட்டார். இப்போது, சிண்டிகேட் உறுப்பினர் தாமஸ், தொலைதூரக் கல்வி இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கிறார். புள்ளியியல்துறை தலைவர் விஜயராகவன், பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியாக ரமேஷ் என்ற உதவிப் பேராசிரியர் நியமிக்கப் பட்டுள்ளார். கணபதியால் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர்தான் ரமேஷ். `உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இவருக்கு எதற்காக மக்கள் தொடர்பு அதிகாரி பதவி கொடுக்கப்பட வேண்டும்’ என்ற கேள்வியும் எழுகிறது.

“முக்கியப் பதவிகளுக்கு முழு நேர அதிகாரிகளை நியமிப்பது எப்போது?”

என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கும் இன்சார்ஜ் அடிப்படையிலேயே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி முக்கியப் பதவிகளை இன்சார்ஜ் அடிப்படையில் நியமிப்பதால், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் பின்னடைவைச் சந்திக்கின்றன.

ஏற்கெனவே கணபதி செய்த தவறுகளால், பல்கலைக்கழகத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதையெல்லாம் சரிசெய்யாமல், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இன்சார்ஜ் போஸ்ட்டிங் கொடுத்து, வேண்டாதவர்களைத் துறை மாற்றும் நடவடிக்கைகளில்தான் காளிராஜ் ஈடுபட்டுள்ளார். அத்துடன், பல்கலைக் கழகத்திலுள்ள சங்கங்களின் செயல்பாடுகளையும் முடக்கிக்கொண்டிருக்கிறார்’’ என்று குமுறினர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க துணை வேந்தர் காளிராஜைத் தொடர்பு கொண்டோம். ‘‘கொரோனா காலகட்டம் என்பதால், இன்சார்ஜ் பதவிகளுக்கு முழு நேர அதிகாரிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த மாதத்துக்குள் இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிடும். பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பதவிகளுக்குக் குறைந்தபட்ச வயது 55 என்றும், பணி ஓய்வு வயது 58 என்றும் இருந்தது. தற்போது, பணி ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக மாற்றிவிட்டனர். எனவே, அந்தப் பதவிகளுக்கான தகுதி போன்றவை குறித்து ஆலோசிக்க வேண்டும்.

காளிராஜ்
காளிராஜ்

சுவாமிநாதன், ஜேம்ஸ் பிச்சை, கணபதி ஆகிய மூன்று துணைவேந்தர் காலகட்டங்களில் நடைபெற்ற பணியிடங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்று பவர்களில் பலர் அந்த காலகட்டங்களில்தான் நியமிக்கப்பட்டுள்ளனர், குற்றம் உறுதியாகும் வரை, நான் அதில் தலையிட மாட்டேன். அது வரை அவர்களிடம் வேலை வாங்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதில் நான் பாரபட்சம் பார்ப்பதில்லை.

பணிக்கு வர வேண்டிய நேரத்தில் வராமல் இருப்பது போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை மட்டுமே எச்சரித்துவருகிறேன். மற்றபடி, அனைத்துச் சங்கங்கள், பணியாளர்களிடம் நல்லுறவைத் தொடர்கிறேன். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் வழங்கி வருகிறேன். பல்கலைக்கழகத்திலுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்’’ என்றார்.

இன்சார்ஜ் இம்சை எப்போது முடிவுக்கு வருமோ என்பதே பல்கலைக் கழக ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism