Published:Updated:

இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள CBSE பொதுத்தேர்வுகள்; தமிழக அரசுப் பள்ளிகளும் இதைப் பின்பற்றலாமா?

சி.பி.எஸ்.இ தேர்வுகளை இரண்டாகப் பிரித்து, நவம்பர், டிசம்பரில் ஒரு செமஸ்டர், மார்ச் மாதத்தில் இன்னொரு செமஸ்டர் என நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை கொரோனா மூன்றாம் அலை வந்தால் இவற்றை அடிப்படையாக வைத்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகளை இரண்டாகப் பிரித்து, நவம்பர், டிசம்பரில் ஒரு செமஸ்டர், மார்ச் மாதத்தில் இன்னொரு செமஸ்டர் என நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா மூன்றாம் அலை வந்தால் இவற்றை அடிப்படையாக வைத்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த செமஸ்டர் முறை பள்ளி மாணவர்களுக்கு செளகர்யமாக இருக்குமா, தமிழகத்திலுள்ள சி.பி.எஸ்.இ பாடத்திட்டமல்லாத மற்ற பள்ளிக்கூடங்களிலும் இந்த முறையைப் பின்பற்றலாமா எனக் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் கேட்டோம்.

ஜெயப்பிரகாஷ் காந்தி
ஜெயப்பிரகாஷ் காந்தி

``வருடத்துக்கு இரண்டு செமஸ்டர் கல்லூரி மாணவர்களுக்கு ஓகே. ஆனால், 10, 11 மற்றும் 12 வகுப்பு படிக்கிற பள்ளிக்கூட மாணவர்களுக்கு இது சரியாக இருக்க முடியாது. இப்படிச் செய்யும்போது அவர்களால் கல்ச்சுரல்ஸ் செயல்பாடுகள் மற்றும் ஸ்போர்ட்ஸில் ஈடுபட முடியாமலே போய்விடலாம். இதனால், பள்ளிக்கூடங்கள் கிட்டத்தட்ட டியூஷன் சென்டர் மாதிரி இயங்க ஆரம்பித்துவிடும். செமஸ்டருக்கு ஒரு மாதத்துக்கு முன்னாடியே மாடல் எக்ஸாம், ஸ்டடி ஹாலிடேஸ், பள்ளி நாள்களிலும் அதிகமான படிப்பு பளு என மாணவர்கள் அசெளகர்யமாக உணர்வதற்கே வாய்ப்புகள் அதிகம். தவிர, இரண்டு செமஸ்டர்களின்போதும் மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். காய்ச்சல் வந்து தேர்வு எழுத முடியாமல் போகக்கூடும்.

முழு ஆண்டுத் தேர்வில் ஃபெயினாலாலும் சப்ளிமென்ட்ரி எக்ஸாம் எழுதித் தேர்வாகிவிடலாம். செமஸ்டர் எக்ஸாம் எழுதும்போது சப்ளிமென்ட்ரி எக்ஸாம் எழுத கால அவகாசமிருக்குமா என்பதையும் யோசிக்க வேண்டும். சாதகமே இல்லையா என்று கேட்டீர்களென்றால், இரண்டு செமஸ்டருக்கு சிலபஸை இரண்டாகப் பிரித்துப் படிக்கிற வசதியைக் குறிப்பிடலாம்.

அடுத்து கல்வியாளர் சோமசுந்தரத்திடம் கருத்து கேட்டோம். ``என்னைப் பொறுத்தவரை இதைச் சாதகமாகவே பார்க்கிறேன். பாடத்திட்டத்தை இரண்டாகப் பிரிப்பதால் பாடப் பளு குறையும். அனைத்துப் பாடங்களையும் படித்து கல்வியாண்டின் முடிவில் தேர்வு எழுதும்போது, நன்கு படித்த பாடங்களையே மாணவர்கள் மறந்துவிடுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படிப் பிரித்துத் தேர்வு எழுதும்போது மறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால், சராசரியாகப் படிக்கிற மாணவர்களும் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

டாக்டர். எஸ். சோமசுந்தரம்
டாக்டர். எஸ். சோமசுந்தரம்

அதேநேரம், இந்த இரண்டு செமஸ்டர் முறை ஆசிரியர்களுக்கு அதிக வேலைப்பளுவைக் கொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், ஒரு வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இருந்த தேர்வு நடத்துவதற்கான பணிகளையும், தேர்வுத்தாள் திருத்துதல் பணிகளையும் இந்த முறையால் வருடத்துக்கு இரண்டு முறை செய்ய வேண்டி வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளிக்கல்வியில் இரண்டு செமஸ்டர் முறை என்று அரசு முடிவெடுத்துவிட்டால், அதை சிபிஎஸ்இ-யில் படிக்கிற மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மாநில அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கிற மாணவர்களுக்கும் கொண்டு வரலாம். கல்வியும், தேர்வு முறைகளும் இந்தியா முழுக்க ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து" என்கிறார்.

செமஸ்டர் முறையை அமல்படுத்தியே ஆக வேண்டுமென்றால், பரிசோதனை முயற்சியாகப் பதினோறாம் வகுப்புக்கு மட்டும் செய்துபார்க்கலாம். மாணவர்கள் அசெளகர்யமாக உணர்ந்தால் இந்த முயற்சியைக் கைவிட்டுவிடலாம். பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது படிக்கும் மாணவர்களுக்குப் பழையபடி ஒரே தேர்வு இருப்பதே சரி. சி.பி.எஸ்.இ-க்கே இது அவசரமான முடிவு என்று கல்வியாளர்கள் கருதுவதால், தமிழ்நாடு அரசு பள்ளிக்கூடங்களில் செமஸ்டர் முறை இப்போதைக்குத் தேவையில்லை'' என்கிறார்.

School students (Representational Image)
School students (Representational Image)
பள்ளி மாணவர்களுக்கான இந்திய தேசிய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வுகள்... விண்ணப்பிப்பது எப்படி?

சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களில் அரசுத் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தியிருப்பதுபோல, தமிழக அரசு பள்ளிக்கூடங்களிலும் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறதா என தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரிடம் கேட்டோம். ``தமிழக அரசுப்பள்ளிக்கூடங்களில் இந்த செமஸ்டர் முறை தற்போது இல்லை. இதை நடைமுறைப்படுத்துகிற எண்ணமும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு இல்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு