Published:Updated:

தேசிய விருது பெற்ற தமிழகத்தின் மூன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! #ICT_Award

இந்திய தலைநகரில் மாநில அமைச்சர் சஞ்சய் ஷாம்ராவ் தொட்டிரி விருதுகளை அளித்து மூவரையும் பெருமைபடுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் உபயோகித்து மாணவர்களுக்கு கற்றல் முறையை எளிதாக்கும், புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெறும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஐ.சி.டி விருது 2010-ம் ஆண்டு முதல் அளிக்கப்படுகிறது. இவ்விருது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையால் வழங்கப்படுகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களே பங்குபெற முடியும். இந்த ஆண்டுகான ஐ.சி.டி தேசிய விருதை, தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

விருது விழாவில் ஆசிரியர்கள் - லாசர் ரமேஷ்
விருது விழாவில் ஆசிரியர்கள் - லாசர் ரமேஷ்

திண்டிவனம் மாவட்டம், ஓமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணினி ஆசிரியராகப் பணிபுரிபவர் லாசர் ரமேஷ். இவர் 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தம் சுய முயற்சியில் கணினி உபயோகிக்கக் கற்பிக்கிறார். தம்முடைய நண்பர்கள் உபயோகித்த 8 கணினிகளை வாங்கி பள்ளியில் கணினி ஆய்வகம் உருவாக்கியுள்ளார். மேலும், பாடத்துக்கு ஏற்ற, இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்குக் கற்பிக்கிறார். பள்ளியில் தட்டச்சு, ஸ்மாட் போர்டு என மாணவர்களின் மேம்பாட்டுக்காகப் பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் அனைத்துப் பாடங்களும் தொகுத்து 'செயலி' உருவாக்கப்பட்டுள்ளது. அதை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையிலும் வடிவமைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு ஆசிரியர் ஒருவரின் நட்பு கிடைக்க, இருநாட்டுப் பள்ளிகளும் இணைந்து `இமேஜ் ஆஃப் தி அதர்ஸ்' (Image of the Others) திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இரு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கிடையே உரையாடல் நிகழ்த்தவும் ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டுக் கலாசாரத்தைப் பற்றி செய்தி பரிமாற்றம் செய்துகொள்ளவும் வழிவகுத்துள்ளார். ஸ்கூல் என்டர்பிரைஸ் எனப்படும் பள்ளி மாணவர்களுக்காக இங்கிலாந்து நாடு நடத்திய போட்டியில் மாணவர்கள் பங்குபெற உருதுணையாக இருந்துள்ளார். சமூக வலைதளம் மூலம் தொடர்புகொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஒருங்கிணைந்த தமிழ் அறக்கட்டளைகள் சார்பில் 1,000 மரக்கன்றுகளை பள்ளிக்கு வழங்கியுள்ளனர். மாணவர்கள் மட்டும் அல்லாது ஆசிரியர்களும் தங்களை மேம்படுத்திகொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் பல சான்றிதழ் பாடநெறிகளை முடித்துள்ளார்.

`டிஜிட்டல் வகுப்பு; நல்லொழுக்கக் கல்வி'-தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் குருவிமலை அரசுப் பள்ளி!
எங்களிடம் உள்ள வளத்தை வைத்து மாணவர்களுக்கு சிறந்ததைத் தர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
ஆசிரியர் செல்வகுமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புக்குழி, ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் செல்வகுமார். தான் படித்த பள்ளியிலே இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தொடக்கப்பள்ளிகளில் கணினி பயன்பாடில்லை என்றபோதிலும் 2 பழைய கணினிகளைத் தயார் செய்து மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தந்துள்ளார். 2010-ம் ஆண்டிலிருந்து படிபடியாகப் பள்ளியின் தரம் கூட மாணவர்களின் எண்ணிக்கையும் கூடியது. தற்போது 354 மாணவர்களோடு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளிகளில் அதிகம் மாணவர்களைக் கொண்ட பள்ளியாக உள்ளது. பாடங்கள் அனைத்தையும் க்யூ ஆர் (QR) கோடாக மாற்றி மாணவனுடைய பாடப் புத்தகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

விருது விழாவில் ஆசிரியர்கள் - ஆசிரியர் செல்வகுமார்
விருது விழாவில் ஆசிரியர்கள் - ஆசிரியர் செல்வகுமார்

தற்போது 16 கணினியுள்ள வகுப்பறையில், மாணவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களும் இ-லெசன் மூலம் பாடம் நடத்த வழிவகுத்துள்ளார். மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு பரிசுகளும் உதவித் தொகையும் வழங்குகிறார் செல்வகுமார். மாணவர்களின் மேம்பாட்டுக்காகப் பல தொழில்நூட்ப முன்னேற்றத்தைக் கொண்டுவந்துள்ளார். புதுவித முயற்சியாக வீடியோ அழைப்புகளைப் பெற்றோருடன் இணைத்து மாணவர்களின் கற்றல் திறன் வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். மேலும், மாணவர்களுக்கு ஸ்மாட் ஐடி தயார் செய்துள்ளார். இணையத்தில் திருப்புக்குழி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் செயலி உள்ளது. "எங்களிடம் உள்ள வளத்தை வைத்து மாணவர்களுக்கு சிறந்ததைத் தர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்" என்கிறார் செல்வகுமார்.

என் மாணவன் ஜெயகுமார் வெற்றியின்போது தந்த பேட்டியில், 'என் ஆசிரியருக்கு நான் என் வீட்டின் முன்னால் ஒரு சிலை வைப்பேன்' என்றபோது மிகவும் பெருமையாக இருந்தது.
ஆசிரியர் கருணைதாஸ்
விருது விழாவில் ஆசிரியர்கள் - ஆசிரியர் கருணைதாஸ்
விருது விழாவில் ஆசிரியர்கள் - ஆசிரியர் கருணைதாஸ்
`அரசுப் பள்ளிகளில் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பம்!' 
-சிட்னி மாநாட்டுக்குத் தேர்வான கரூர் ஆசிரியர்

நார்னாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றும் கருணைதாஸ் விளக்கக் காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி வருகிறார். கணித ஆசிரியர் என்றாலும் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். அதனால், யூடியூபில் அறிவியல் சார்ந்த வீடியோ பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் பாடம் நடத்துகிறார். 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' நடத்திய அறிவியல் போட்டியில் இவரின் மாணவன் ஜெயகுமார் வென்று அவருக்கு இப்போது மாஸ்கோ செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், மற்றொரு மாணவன் தென்னிந்தியாவில் பல திறமைகளைக் கொண்டவர் என்னும் விருதைப் பெற்றுள்ளார். தன் தனி முயற்சியால் மாணவர்களைப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தேர்ந்தெடுத்த உலகளாவிய ஆசிரியர்களில் ஒருவராக கருணைதாஸ் சிங்கப்பூர் சென்றுள்ளார். வெளிநாடு சென்றுள்ளதின் பயனாக அறிமுகமான ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு ஸ்கைப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. "நெகிழ்ச்சியான தருணம் எதுவென்றால், என் மாணவன் ஜெயகுமார் வெற்றியின்போது தந்த பேட்டியில், 'என் ஆசிரியருக்கு நான் என் வீட்டின் முன்னால் ஒரு சிலை வைப்பேன்' என்றது. அது மிகவும் பெருமையாக இருந்தது" என்று கூறுகிறார் கருணைதாஸ்.

இந்திய தலைநகரில் மாநில அமைச்சர் சஞ்சய் ஷாம்ராவ் தொட்டிரி விருதுகளை அளித்து மூவரையும் பெருமைபடுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு