Published:Updated:

ஆன்லைன் வழி B.Sc பட்டப்படிப்பு; நோ’ நுழைவுத்தேர்வு! - சென்னை ஐஐடி அறிமுகம்

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

இந்த ஆன்லைன் படிப்பில் பயிலும் சிறந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் சென்னை ஐஐடி தரப்பில் உதவிகள் செய்யப்படும்.

உலகிலேயே முதல்முறையாகச் சென்னை ஐஐடி ஆன்லைன் வழியாகப் பயிலும் B.Sc பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. மனிதவள மேம்மாட்டுத்துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் இதனைத் தொடங்கி வைத்தார். இந்தப் பட்டப்படிப்பில், வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடக்கும் என்றும் தேர்வுகள் வழக்கம்போல எழுத்து தேர்வாக நடத்தப்படும் என்றும் சென்னை ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

ஆன்லைன் பாடத்திட்டம்
ஆன்லைன் பாடத்திட்டம்
freepik

நுழைவுத்தேர்வு கிடையாது!

இந்தப் படிப்பில் சேர எந்த ஒரு நுழைவுத்தேர்வை எழுத வேண்டிய அவசியமில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்தே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோகிராமிங் மற்றும் டேட்டா சைன்ஸ் பிரிவில் மட்டும் இந்த இளநிலை பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. இதில் சேர ஆர்வம் உள்ளவர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் இருந்து இந்த படிப்பைப் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தகுதி

பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது அறிவியலில் இளநிலை கல்வி பயின்று வருபவர்களும் ஏற்கெனவே இளநிலை படிப்பை முடித்தவர்களும் இந்த ஆன்லைன் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இளநிலை படிப்பை முழுவதுமாக முடிக்காமல் இடைநின்றவர்களும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழிக் கல்வி
ஆன்லைன் வழிக் கல்வி

இந்த படிப்பில் ஆன்லைன் வகுப்புகள், க்விஸ் மற்றும் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுகளை மட்டும் நேரில் சென்று எழுத வேண்டியிருக்கும்.

வேலைவாய்ப்பு

இந்த ஆன்லைன் படிப்பில் பயிலும் சிறந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் சென்னை ஐஐடி தரப்பில் உதவிகள் செய்யப்படும். மேலும், ஐஐடியின் ஆராய்ச்சிகளிலும் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பின் வெவ்வேறு நிலைகளில் மாணவர்கள் சான்றிதழ் அல்லது டிப்ளோமாவோடு விலகியும் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

இந்த ஆன்லைன் பட்டப்படிப்பை பொது வகுப்பைச் சேர்ந்த ஒருவர் படித்து முடிக்க மொத்த கட்டணம் 3.55 லட்சம் வரை ஆகலாம். மற்ற பிரிவினருக்கு கட்டணத் தள்ளுபடியும் அளிக்கப்படும். இந்தப் படிப்பு குறித்த விரிவான தகவல்கள் சென்னை ஐஐடியின் onlinedegree.iitm.ac.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு