Published:Updated:

ஊக்கமளிக்கும் உதவித்தொகைகள்! - கற்கை நன்றே! - 2

கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

ஒரே தேர்வு... ப்ளஸ் ஒன் முதல் பி.ஹெச்டி வரை நீளும் உதவித்தொகை!

ஊக்கமளிக்கும் உதவித்தொகைகள்! - கற்கை நன்றே! - 2

ஒரே தேர்வு... ப்ளஸ் ஒன் முதல் பி.ஹெச்டி வரை நீளும் உதவித்தொகை!

Published:Updated:
கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

‘ஒரேயொரு தேர்வு எழுதினால், ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை கிடைக்கும். அது, ‘தேசிய திறன் தேடல் தேர்வு’ (National Talent Search Examination - NTSE)’’ என்கிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும் கல்வியாளருமான ராஜம்மாள். இந்த உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் குறித்து விளக்குகிறார் அவர்.

``இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ‘மாநில அளவிலான தேசிய திறன் தேடல் தேர்வு’ நடைபெறும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, உறைவிட பள்ளி என இந்தியாவிலிருக்கிற அனைத்து பள்ளிக் கூடங்களிலும், பத்தாம் வகுப்பு படிக்கிற அனைத்து மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் நடைபெறும் இந்தத் தேர்வு, ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும். விண்ணப்பத்தை தபால் மூலம்தான் அனுப்பவேண்டும். தேர்வு நேரடியாகத்தான் நடத்தப்படும்.

மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதோடு இந்தத் திறன் தேடல் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி 9-ம் வகுப்பில் 40 (அ) 55 (அ) 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றால்தான் திறன் தேடல் தேர்வை எழுத முடியும் என்கிற விதி இருக்கிறது. தமிழ்நாட்டில், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 55% மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 60% மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும்.

ஊக்கமளிக்கும் உதவித்தொகைகள்! - கற்கை நன்றே! - 2

யாருக்கு, எத்தனை சதவிகிதம்?

இந்த உதவித்தொகைத் திட்டத்தில், 4% மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், 27% ஓ.பி.சி மாணவர்களுக்கும், 15% எஸ்.சி மாணவர்களுக்கும், 7.5% எஸ்.டி மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு (ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள்) 10 சதவிகித மும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவினர் என்பதற்கான சான்றிதழை (மருத்துவச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் அல்லது வருமானச் சான்றிதழ்) கட்டாயம் இணைக்க வேண்டும்.

விதிமுறைகள்...

மாணவர்கள் படிக்கிற பள்ளிக்கூடம் மாநில அல்லது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.

சம்பந்தப்பட்ட மாணவர், முதல்முறையாக பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுபவராக இருக்க வேண்டும்.

தனித்தேர்வர்களும் எழுதலாம். ஆனால், அவர்களும் முதன்முறையாக பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுபவராக இருக்க வேண்டும்

தவிர, அவர்கள் எந்த நிறுவனத்திலும் வேலை பார்க்கக் கூடாது.

ப்ளஸ் ஒன்னில் அறிவியல் பாடங்கள் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் படிக்கவிருக்கிற மாணவர்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்கான தேர்வை எழுத வேண்டும்.

உதவித்தொகை மெரிட் அடிப்படையில் தான் வழங்கப்படும்.

இரண்டு நிலைத் தேர்வுகள்...

இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் MAT (Mental Ability Test) வகை கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 100 கேள்விகள், 100 மதிப்பெண்கள், இரண்டு மணி நேரம் கால அவகாசம். பார்வை குறை பாடுள்ள மாணவர்களுக்கு அரைமணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். முதல் நிலையில் பிரிவு மற்றும் வகை வாரியாக, மாணவர்கள் எத்தனை கட் ஆஃப் மதிப்பெண்கள் வாங்க வேண்டுமென்பதை அந்தந்த மாநிலங்கள் வெளியிடும். அதன் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இரண்டாம் நிலைத் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வில் SAT (Scholastic Ability Test) வகை கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதிலும் 100 கேள்விகள், 100 மதிப்பெண்கள், 2 மணி நேர கால அவகாசம்தான். பார்வை குறைபாடுள்ள வர்களுக்கு 30 நிமிடங்கள் கூடுதல். இந்தத் தேர்வின் கேள்விகள், 9 மற்றும் 10-வகுப்பின் கணிதம் (20 மதிப்பெண்கள்), அறி வியல் (40 மதிப்பெண்கள்), சமூக அறிவியல் (40 மதிப் பெண்கள்) ஆகிய பாடங் களிலிருந்தே கேட்கப் படும். கேள்விகளில், மாநில அரசு பாடத் திட்டத்தில் ஆரம்பித்து சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி என அனைத்துப் பாடத்திட்டங் களும் கலந்து இருக்கும்.

எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இரண்டு கேள்வித்தாள்களிலும் தனித்தனியாகக் குறைந்தபட்சம் 32% மதிப் பெண்கள் எடுக்க வேண்டும். மற்ற மாணவர்கள் இரண்டு கேள்வித்தாள்களிலும் தனித்தனியாகக் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

விண்ணப்பம் 50 ரூபாய். மாணவர்கள் தங்கள் பள்ளிக்கூடத்தின் தலைமை யாசிரியரின் கையொப்பம் பெற்று, பள்ளிக் கூடம் வழியாகத்தான் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும்?

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவ தோடு, மாநில அளவிலான தேசிய திறன் தேடல் தேர்வின் இரண்டு நிலைத் தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்று விட்டால், ‘ப்ளஸ் ஒன்’ படிக்கையில் மாதந்தோறும் ரூ.1,250 உதவித்தொகை வழங்கப்படும். ப்ளஸ் டூ-வில் இந்த உதவித் தொகை தொடர வேண்டுமென்றால், இந்த உதவித்தொகை தொடர்வதற்கு நிர்ணயிக்கப் பட்ட கட் ஆஃப் மதிப்பெண்களை ப்ளஸ் ஒன்-னில் மாணவர்கள் பெற வேண்டும். ப்ளஸ் டூ-விலும் மாதம் ஒன்றுக்கு ரூ 1,250 உதவித்தொகையே தொடரும்.

இளங்கலை படிக்கும்போது மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். இது கிடைக்க வேண்டுமென்றால், ப்ளஸ் டூ-வில் இந்த உதவித்தொகைக்கான கட் ஆஃப் மதிப் பெண்களைப் பெற வேண்டும். இப்படியே முதுகலை மற்றும் ஆராய்ச்சிப்படிப்பு படிப்பு வரை உதவித் தொகை கிடைத்துக் கொண்டே இருக்கும். அதே நேரம் துறை சார்ந்து தரப்படுகிற உதவித்தொகை வேறுபடும்.

மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு தேசிய திறன் தேடல் தேர்வு நிர்ணயித்துள்ள கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பதால், இந்தத் தகவல்களைப் பள்ளிக்கூடங்களும் கல்லூரி களும்தான் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான், ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும்’’ என்கிறார் கல்வியாளர் ராஜம்மாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism