Published:Updated:

ஒரு டி.டி-க்காக இவ்வளவு அக்கப்போரா? உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உலகமகா இம்சை!

DD (Representational Image)
News
DD (Representational Image)

நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும், மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல், தினம்தோறும் சேர் டேபிளைத் தேய்ப்பதை மட்டுமே பிழைப்பாக வைத்திருக்கும் இவர்களையெல்லாம் நினைத்தால்... நெஞ்சு பொறுக்குதில்லையே!

முன்குறிப்பு: ஒழுங்காக வேலை செய்யும் அரசு ஊழியர்கள் மன்னிக்கவும்.

`டிஜிட்டல்️ இந்தியா... டி️ஜிட்டல்️ இந்தியா...' என்று ஒரே கூப்பாடாக இருக்கிறது. தமிழக முதலமைச்சரும்கூட டேஷ்போர்டு என்று கலக்குகிறார். ஆனால்️, அரசாங்கத்தின் பல்️வேறு துறைகளும் இன்னமும் கல்️வெட்டு காலத்திலேயேதான் இருக்கின்றன.

இதோ... தமிழக அரசின் உலகத் தமிழராயச்சி நிறுவனத்தின் சார்பில்️, கல்️வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு பட்டய வகுப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்️, Director, International Institute of Tamil Studies என்ற பெயருக்கு வரைவோலை 3,100 ரூபாய்க்கு எடுத்து, தபால்️ வழியாக விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்கவும் என்று கூறியுள்ளனர். அதிலும், பெட்ரோமேக்ஸ் லைட்டே வேண்டும் என்பதுபோல தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வரைவோலை மட்டுமே அனுப்ப வேண்டும் என்கிற விதிமுறை வேறு.

Application / Representational Image
Application / Representational Image

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த விண்ணப்பத்தை முதலில்️ பிரின்ட் செய்ய வேண்டும். பிறகு, டி️.டி️ எடுக்க வேண்டும். அதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்றால்️, அவர்கள் கொடுக்கும் `முதல்️ மரியாதை' பற்றிச் சொல்️லவே தேவையில்️லை. ஏதோ பிச்சை எடுக்க வந்தவன் போல ஒரு ஓரமாக நிறுத்தி வைத்து, எதற்காக இந்த வங்கிக்கு வந்தாய்? உன்னுடைய வீடு இருப்பது எந்த இடத்தில்️? அங்கே வங்கி இல்️லையா? நீ எந்த வங்கியில்️ அக்கவுன்ட்? பிறகு எதற்காக எங்கள் வங்கிக்கு வந்தாய்? தனியார் வங்கியில்️ அக்கவுன்ட் வைத்திருப்பீர்கள், டி️டி️க்கு மட்டும் நாங்களா என்று ஆரம்பித்து, விஜய்மல்️லையாவிடம் கேட்க மறந்த கேள்விகளையெல்️லாம் ஒரு அப்பாவி மாணவனிடம், அதிலும் அப்போதுதான் ப்ளஸ் டூ முடி️த்துவிட்டு, இந்தக் கண்றாவி உலகத்தைப் பற்றி என்னவென்றே தெரியாமல்️ கல்️லூரிக்கு விண்ணப்பிக்க வருபவனை படுத்தி எடுத்துவிடுவார்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்️. காரணம், அவர்களுக்குத் தேசிய அளவில்️ அதிகாரம் இருக்கிறதே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடைசியில்️, அவன் எடுக்கும் மூவாயிரம் ரூபாய் டி️டி️க்கு 50, 100 கமிஷனாக வேறு கறந்துகொண்டுதான் அனுப்புவார்கள். இதில்️ ஆயிரத்தெட்டு கேள்விகள்.

இந்தத் தொல்️லையெல்️லாம் இல்️லாமல்️ ஆன்லைன் வழியாகவே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ஆன்லைன் வழியாகவே கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை பல்️வேறு கல்️வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எல்️லாம் மடைமாறி பல ஆண்டுகளாகின்றன. ஆனால்️, அரதப்பழசாக டி️டி️ எடு, போஸ்டல்️ ஆர்டர் எடு என்று கீழடி️க்கு முந்தைய கால விஷயங்களையெல்️லாம் இன்னமும் கட்டி️ அழுது கொண்டி️ருக்கின்றன அரசாங்க நிறுவனங்கள் பலவும்.

ஒருவேளை கல்️வெட்டி️யல்️ படி️ப்பு என்பதால்️, பாரம்பர்யம் மாறாமல்️ இருப்பதற்காக இப்படி️ அறிவிப்புகளை வெளியிட்டு, அப்ளிகேஷனில்️ இருந்தே பாடத்தை ஆரம்பிக்கிறார்களோ என்னவோ?

Money (Representational Image)
Money (Representational Image)

இன்னமும்கூட டி️ஜிட்டல்️ பரிவர்த்தனைக்குப் பழக்கப்படாத மாணவர்களும் பெற்றோர்களும் இருக்கக்கூடும். அந்த வகையில்️ பார்த்தால்️, அவர்களையும் எளிமையான டி️ஜிட்டல்️ பரிவர்த்தனைகளுக்குப் பழக்கப்படுத்துவதைத்தான் முதலில்️ செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, அரசாங்க நிறுவனங்கள் இதை முன்னெடுக்க வேண்டும். ஆனால்️ , அரசாங்க ஊழியர்களுக்கும் சரி, அரசாங்க அதிகாரிகளுக்கும் சரி, அரசியல்️வாதிகளுக்கும் சரி, டி️ஜிட்டல்️ என்றாலே பயமாகத்தான் இருக்கிறது. ஆதாரங்கள் அச்சு அசலாக உருவாகிவிடுமே!

சரி, இப்படி️ அனைவரையும் டி️ஜிட்டலுக்குப் பழக்கப்படுத்த முன்வராவிட்டாலும், ஏற்கெனவே பரிச்சயமாகி இருப்பவர்களையாவது ஊக்கப்படுத்தலாமே... தொல்️லை கொடுக்காமல்️ இருக்கலாமே.

அதாவது, பணப்பரிவர்த்தனைக்கான அனைத்து வாய்ப்புகளை வழங்க வேண்டி️யதுதானே. கார்டு, ஆன்லைன் பேங்கிங், யுபிஐ எனப்படும் வாலட் போன்ற வழிகளிலும் கட்டணத் தொகையைச் செலுத்தலாம்... ஆன்லைன் வாயிலாகவும் அப்ளிகேஷன் போடலாம் என்று வாய்ப்புகளை விரிவாக்க வேண்டி️யதுதானே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் இப்படி கேட்கிறார்கள் என்பது சாம்பிள்தான். அரசாங்கத்தின் பற்பல நிறுவனங்களிலும் இந்தச் சோகக்கதை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தூசு படிந்த சேர், ஒட்டடை படிந்த ஃபைல்கள் என்கிற காலத்தைக் கடந்து கம்ப்யூட்டர் காலத்துக்கு இந்த அலுவலகங்கள் எல்லாம் மாறிவிட்டன. ஆனால், நடைமுறையில் மட்டும் டிடி போன்ற அரதப்பழசான விஷயங்களைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.... மக்களையும் அழவைக்கிறார்கள்.

உலகம் மாறிவிட்டது. நாமும் மாற வேண்டும். அனைத்தையும் எளிமைப்படுத்த வேண்டும். நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும், மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல், தினம்தோறும் சேர் டேபிளைத் தேய்ப்பதை மட்டுமே பிழைப்பாக வைத்திருக்கும் இவர்களையெல்லாம் நினைத்தால்... நெஞ்சு பொறுக்குதில்லையே!

Bank (Representational Image)
Bank (Representational Image)

அரசாங்கம் என்பது மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்று எல்️லோரும் நினைத்தால்️, இதுபோன்ற பிரச்னைகளே இருக்காது. ஆனால்️ , அரசாங்கம் என்பதே எங்களுக்காகத்தான் என்று அரசு ஊழியர்கள், அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், தபால்️ நிலைய ஊழியர்கள் உள்ளிட்டோர் நினைத்துக் கொண்டி️ருக்கிறார்கள். வங்கிகள் தனியார்மயம், தபால் துறை தனியார் மயம், தொலைத்தொடர்புத்துறை தனியார் மயம் என்றெல்லாம் பேசப்படுகிற சூழலிம்கூட, இந்த `அரசாங்க எந்திரன்கள்' திருந்தவில்லை என்பதுதான் வேதனை...

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில்️ வடி️வேலு சொல்️வதுதான் நினைவுக்கு வருகிறது.

``காலையில்️ ஒன்பது, பத்துக்கு வேலைக்கு வருவது; ஈட்டி️யை நீட்டி️ப்பிடி️த்தபடி️ சுவரோடு சுவராகப் பல்️லியைப்போல ஒட்டி️யிருந்துவிட்டு, மாலை 5 மணி ஆனவுடன் வீட்டுக்கு ஓடி️விடுவது; இடையில்️ ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு; ஐந்தறிவு ஜீவன் போல உங்களுக்கெல்️லாம் ஒரு வாழ்க்கை;

கேட்டால்️, `அரசாங்க உத்தியோகம்' என்று வெளியில்️ பீற்றிக்கொள்வது; அல்️லக்கை முண்டமே... ஒழுங்காய் வேலை பார்ப்பவர்கள்கூட உன்னைப் பார்த்து கெட்டுவிடுவார்களடா; மாதம் பிறந்தால்️ சம்பளம் வாங்குகிறாய் அல்️லவா?''

சம்பளம் வாங்குவதற்காக மட்டுமே அலுவலகங்களுக்கு வரும் பழக்கத்தை விட்டுத்தொலைத்துவிட்டு, வாங்குகிற சம்பளத்துக்காக வேலை பார்க்கும் மனநிலையுடன் எப்போதுதான் வரப்போகிறார்களோ?!

Rupees
Rupees
Photo by Syed Hussaini on Unsplash

பின்குறிப்பு: ஒரு வழியாக மனதைத் தேற்றிக்கொண்டு, டிடி எடுப்பதற்காக சென்னையிலிருக்கும் இந்தியன் வங்கிக் கிளை ஒன்றுக்குச் சென்றேன். மேலே சொன்ன அத்தனை கேள்விகளைக் கேட்டுக் கேட்டு காத்திருக்க வைத்தார்கள். சில மணி நேரக் காத்திருப்புக்கு பிறகு... உங்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு இருந்தால் மட்டுமே டிடி எடுக்க முடியும். எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக்குச் செல்லுங்கள். இதுதான் விதிமுறை' என்று வீதியை நோக்கிக் கையைக் காட்டினார்கள்.

எனக்கு இருப்பதோ ஒரே ஒரு அக்கவுன்ட்... அதுவும் மத்திய அரசு அங்கீகரித்திருக்கும் தனியார் வங்கியின் அக்கவுன்ட். சரி, ஒரு டிடி எடுப்பதற்காக புதிதாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அக்கவுன்ட் தொடங்கிவிடலாம் என்றுகூட யோசித்தேன். ஆனால், குறைந்தபட்ச இருப்பு என்கிற வகையில் கணக்கில் 5,000 அல்லது 10,000 ரூபாயைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று ஆரம்பித்து, அதன் விதிமுறைகளையெல்லாம் யோசித்தபோது...

`ஆணியே புடுங்க வேணாம்... பேசாம கல்வெட்டு காலத்துக்கே போயிடலாம்' என்று நொந்தபடியே வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன்.

- பூநீ