2023-ம் ஆண்டு இளங்கலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) இரண்டு முறை நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தங்கள் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ள, இரண்டு முறை தேர்வு நடத்தப்படுவது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வுகளும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்த 45 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு நடத்தப்படும் என கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேர்வுக்கான வினாக்கள் பன்னிரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டாலும், ஒவ்வோர் ஆண்டும் கேள்வி முறைகள் மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஆண்டு பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 6-ம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அட்டவணை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனத் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 2 லட்ச மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வுக்காக இதுவரையில் விண்ணப்பித்துள்ளனர்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனவும், 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் சேர விரும்பும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படும் கணினிமயமாக்கப்பட்ட பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவித்திருந்தது.