Published:Updated:

கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், பாதிக்கப்பட்ட 24.7 கோடி இந்திய குழந்தைள்... யுனிசெப் சொல்வது என்ன?

online class

கொரோனா பரவலுக்கு முன்பு வரை இந்தியாவில் வெறும் 24% குடும்பங்கள் மட்டுமே இணைய வசதியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களும் பெண் குழந்தைகளும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வில்லை என UNICEF தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், பாதிக்கப்பட்ட 24.7 கோடி இந்திய குழந்தைள்... யுனிசெப் சொல்வது என்ன?

கொரோனா பரவலுக்கு முன்பு வரை இந்தியாவில் வெறும் 24% குடும்பங்கள் மட்டுமே இணைய வசதியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களும் பெண் குழந்தைகளும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வில்லை என UNICEF தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published:Updated:
online class

கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலைகளால் குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (3.3.2021) UNICEF வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியா முழுவதும் 15 லட்சம் பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டன. இதனால் சுமார் 24.7 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தின. ஆனால், நான்கில் ஒரு குழந்தை மட்டுமே இணையவழி வகுப்பில் பங்கேற்கும் தொழில் நுட்ப மற்றும் இணைய வசதியை பெற்றுள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு வரை இந்தியாவில் வெறும் 24% குடும்பங்கள் மட்டுமே இணைய வசதியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களும் பெண் குழந்தைகளும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவில்லை என UNICEF தகவல்கள் தெரிவிக்கின்றன.

UNICEF
UNICEF

மேலும், பள்ளிகள் திறந்த பின்பு அதிக அளவிலான மாணவர்கள் பள்ளி திரும்பவில்லை என UNICEF கூறியுள்ளது. உலக அளவில் 8 கோடியே 88 லட்சம் மாணவர்களின் கல்வி கொரோனா பரவல் காரணமாகப் பாதிப்படைந்துள்ளது. ஏறத்தாழ ஓராண்டில் 14 நாடுகளில் கல்வி பெரும் பாதிப்பை கண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளும் அதிகம் பாதிப்படைந்துள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகள் மீண்டும் படிப்பைத் தொடர்வதில் சிக்கல்கள் உள்ளன. எனவே, எல்லா மாணவர்களும் குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளை அணுக இயலாத மாணவர்கள் மற்றும் மீண்டும் பள்ளிக்கு திரும்பாத மாணவர்கள் தங்கள் கல்வியை விட்ட இடத்திலிருந்து தொடர உதவுவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம்" என ஐக்கிய குழந்தைகள் நல அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டர். யாஸ்மின் அலி ஹாக் தெரிவித்துள்ளார்.

மேலும், மீண்டும் பள்ளி சூழலுக்கு திரும்பும் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பேண பெற்றோரும் ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய கல்வி அமைச்சகம் பாதுகாப்பாக பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காகத் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் திட்டமிட்டுள்ள வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை முன்னிலை படுத்துவதோடு கல்வி நிலையங்களை பாதுகாப்பாகப் பேண பள்ளி நிற்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.

Online class
Online class
representational image

இந்தியாவில் 8 மாநிலங்களில் மட்டுமே பள்ளிகளில் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. 11 மாநிலங்களில் 6-ம் முதல் 12-ம் வகுப்புகளும், 15 மாநிலங்களில் 9-ம் முதல் 12-ம் வகுப்புகளும், 3 மாநிலங்களில் மட்டும் அங்கன்வாடி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் இப்போது வரை எவ்வித கல்வி ஆதாரமும் இல்லாதிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்கள் அனைவரையும் வகுப்பறைக்கு அழைத்து வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.