Published:Updated:

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப்படிப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்புகள்
கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்புகள்

கால்நடைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் இளநிலைப் பட்டப்படிப்புகளில், 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 08-10-2021

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamilnadu Veterinary and Animal Sciences University) கீழ் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசுக் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கால்நடைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் இளநிலைப் பட்டப்படிப்புகளில், 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இளநிலைப் பட்டப்படிப்புகள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் (Veterinary College and Research Institute) சென்னை – 120, நாமக்கல் - 80, திருநெல்வேலி - 80, ஒரத்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம்) – 80, தலைவாசல் கூட்டு ரோடு (சேலம் மாவட்டம்) - 40, வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 40, பண்ணைக்கிணறு (உடுமலைப்பேட்டை) – 40 என்று ஏழு இடங்களில் ஐந்தரை ஆண்டுகள் (4½ ஆண்டுகள் + 1 வருட உள்ளிருப்புப் பயிற்சி) எனும் கால அளவிலான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடைப் பராமரிப்புப் பட்டப்படிப்பில் (B.V.Sc & A.H) மொத்தம் 480 இடங்கள் இருக்கின்றன.

கால்நடை மருத்துவக் கல்லூரி
கால்நடை மருத்துவக் கல்லூரி

மேற்காணும் இடங்களில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருக்கும் இடங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியக் கால்நடை மருத்துவக் குழுமத்தின் ஆணைக்கேற்பவும், தலைவாசல் கூட்டு ரோடு (சேலம் மாவட்டம்), வீரபாண்டி (தேனி மாவட்டம்), பண்ணைக்கிணறு (உடுமலைப்பேட்டை) கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இடங்களும் இந்தியக் கால்நடை மருத்துவக் குழுமத்தின் ஆணைக்கேற்பவும் மாற்றத்திற்குட்பட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

சென்னை, கோடுவெளியில் செயல்பட்டு வரும் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் (College of Food and Dairy Technology) நான்கு ஆண்டு கால அளவிலான உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (B.Tech Food Technology) – 40 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (B.Tech Dairy Technology) – 40 இடங்கள் என்று மொத்தம் 80 இடங்கள் இருக்கின்றன. ஓசூரில் செயல்பட்டு வரும் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் (College of Poultry Production Management) நான்கு ஆண்டு கால அளவிலான கோழியினத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (B.Tech - Poultry Technology) - 40 இடங்கள் இருக்கின்றன.

கல்வி மற்றும் வயதுத் தகுதிகள்

இக்கல்லூரிகளில் சேர்க்கை பெற விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராக இருக்க வேண்டும். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்புக்கு +2வில் கலையியற் பிரிவில் (Academic Stream) படித்தவர்கள் உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடங்களில் (1) பொதுப்பிரிவினர் (OC), பிற்பட்ட வகுப்பினர் (BC) மற்றும் பிற்பட்ட வகுப்பினர் (இசுலாமியர்) (BC(M)) 60% மதிப்பெண்களும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) 55% மதிப்பெண்களும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் சேர்த்தும் (2) பொதுப்பிரிவினர், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினர் (இசுலாமியர்) 60% மதிப்பெண்களும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 55% மதிப்பெண்களும் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

படிப்பு
படிப்பு

இரண்டு பாடங்களிலும் சேர்த்துப் (1+2) பொதுப்பிரிவினர் 70% மதிப்பெண்களும், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினர் (இசுலாமியர்) 65% மதிப்பெண்களும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். அனைத்துப் பட்டப்படிப்புகளுக்கும் எஸ்சி எஸ்டி பிரிவினர் +2 தேர்வில் மேற்காணும் பாடப்பிரிவுகளுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

இப்படிப்புகளில் சேர்பவர்கள் இரு அமர்வுகளுக்குள்ளும் (Attempt), எஸ்சி, எஸ்டி பிரிவினர் மூன்று அமர்வுகளுக்குள்ளும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் சேர்பவர்களுக்கு 31-12-2021 அன்று 17 வயது ஆகியிருக்க வேண்டும். இதே போன்று, 1-7-2021 அன்று 21 வயது நிரம்பியிருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு ஏதுமில்லை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதன்படி தற்போது பணி வழங்கப்படுகிறதா? | Doubt of Common Man

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இட ஒதுக்கீடு

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடைப் பராமரிப்புப் பட்டப்படிப்புக்கான (B.V.Sc & A.H) மொத்த இடங்களில் 15% இடங்கள், இந்திய கால்நடை மருத்துவக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இப்படிப்பில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தவருக்கான பிரதமர் சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கான (B.Tech Food Technology) மொத்த இடங்களில் 15% இடங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளநிலைப் படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோருக்கு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடைப் பராமரிப்புப் பட்டப்படிப்புக்கான (B.V.Sc & A.H) – 9 இடங்கள், உணவுத் தொழில்நுட்பம் (B.Tech - Food Technology) – 2 இடங்கள் என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்காணும் ஒதுக்கீடு தவிர்த்த, பிற இடங்களுக்குப் பொதுப்பிரிவு – 31%, பிசி – 26.5%, பிசிஎம் – 3.5%, எம்பிசி (வி) – 10.5, எம்.பி.சி & டிஎன்சி – 7%, எம்.பி.சி – 2.5%, எஸ்சி – 15%, எஸ்சிஏ – 3%, எஸ்டி - 1% என்கிற தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர் குழந்தைகள் போன்ற பிரிவினருக்கும் குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

LLB Law Degree: மூன்றாண்டு கால இளநிலைச் சட்டப்படிப்பு... விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!

விண்ணப்பம்

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திற்குச் சென்று, இணையம் வழியில் (Online Application) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். ஒன்றிற்கு மேற்பட்ட பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரே விண்ணப்பத்தில் தேவையான பாடப்பிரிவைத் தேர்வு செய்து கொண்டு. விண்ணப்பிக்க முடியும். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடைப் பராமரிப்புப் பட்டப்படிப்புக்கு (B.V.Sc & A.H) விண்ணப்பக் கட்டணமாக, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.350/-, பிற பிரிவினர்கள் ரூ.700/- என்றும், உணவுத் தொழில்நுட்பம் (Food Technology), பால்வளத் தொழில்நுட்பம் (Dairy Technology) மற்றும் கோழியினத் தொழில்நுட்பம் (Poultry Technology) பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.600/-, பிற பிரிவினர்கள் ரூ.1200/- என்றும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தை இணையத்தில் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 8-10-2021, மாலை 6.00 மணி வரை.

மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறையினைப் பின்பற்றி, மாணவர்கள் +2 தேர்வில் மேற்காணும் பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தமிழ்நாடு கால்நடைத்துறை பல்கலைக்கழக இணையதளம்
தமிழ்நாடு கால்நடைத்துறை பல்கலைக்கழக இணையதளம்

கட்டணங்கள்

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடைப் பராமரிப்புப் பட்டப்படிப்புக்கு முதல் வருடம் ரூ.21915/-, இரண்டாம் வருடம் ரூ.17590/- மூன்றாம் வருடம் ரூ.17590/- நான்கு மற்றும் நான்கரை வருடம் சேர்த்து ரூ.26860/- உள்ளகப்பயிற்சி – ரூ.12000/- என்று கட்டணத்தி ஆண்டுக்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

உணவுத் தொழில்நுட்பம் (Food Technology), பால்வளத் தொழில்நுட்பம் (Dairy Technology) மற்றும் கோழியினத் தொழில்நுட்பம் (Poultry Technology) பட்டப்படிப்புகளுக்கு முதல் பருவத்திற்கு ரூ.13595/-, இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் பருவங்களுக்கு ரூ.8320/-, மூன்று, ஐந்து மற்றும் ஏழாம் பருவங்களுக்கு ரூ.9270/-, தொழிற்சாலைப் பயிற்சிக்கு ரூ.6000/- என்று பருவ (Semester) முறையில் கல்விக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

கூடுதல் தகவல்கள்

இப்படிப்புகளில் சேர்வதற்கான மேலும் கூடுதல் தகவல்களை அறிய பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது அலுவலக வேலைநாட்களில் 044 – 25551586 / 87, 25554555 / 56 எனும் அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது admission@tanuvas.org.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டோத் தெரிந்து கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு