Published:Updated:

சாதாரணமானவை அல்ல சாதிக்கயிறுகள்!

சாதிக்கயிறு
பிரீமியம் ஸ்டோரி
சாதிக்கயிறு

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாடப்புத்தகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் கைகளில் சாதிக்கயிறு என்றால் அது எவ்வளவு பெரிய அவமானம்!

சாதாரணமானவை அல்ல சாதிக்கயிறுகள்!

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாடப்புத்தகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் கைகளில் சாதிக்கயிறு என்றால் அது எவ்வளவு பெரிய அவமானம்!

Published:Updated:
சாதிக்கயிறு
பிரீமியம் ஸ்டோரி
சாதிக்கயிறு

பள்ளி முழுதும் ஒரே சீருடை. ஆனால் பள்ளி மாணவர்களின் கைகளில் வெவ்வேறு வண்ணங்களில் சாதிக்கயிறுகள் என்றால் அது சமத்துவத்துக்கு விழுந்த சம்மட்டி அடி அல்லவா? குறிப்பாகத் தென்மாவட்டங்களில்தான் இந்த நிலைமை வலுவாக இருக்கிறது. சாதி என்னும் நஞ்சைப் பள்ளி மாணவர்கள் மனதில் விதைத்து, அதை உரம் போட்டு வளர்க்கின்றன சாதிச்சங்கங்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுபோன்று சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்ளும் வகையில் கயிறு கட்டிச் செல்வதும், அதன் மூலம் சாதிச்சண்டைகள் உருவாவதும் வழக்கமானது. இடையில் அரசு எடுத்த சில நடவடிக்கைகளால் இப்பிரச்னை தடுக்கப்பட்டது. ஆனால், சமீபகாலங்களில் சாதிப்பிரச்னைகளின் பரிமாணங்களாக சாதிக்கயிறுகள் விளங்குகின்றன என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஆண்டு நெல்லையில் சாதிமாறிக் காதலித்ததற்காக இசக்கிசங்கர் என்பவர் கொல்லப்பட்டார். கொலையாளிகளில் ஒருவன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன். பள்ளியிலேயே சாதிப்பாகுபாடு ஊட்டி வளர்க்கப்பட்ட தால் அக்காவைக் காதலித்த இசக்கியைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றிருக்கிறான். பள்ளி மாணவர்களிடம் நிலவும் இந்த மோசமான சாதி மனநிலை குறித்து சமூக ஆர்வலர்களும் சாதி எதிர்ப்பு இயக்கங்களுமே பேசிக்கொண்டி ருந்தன. ஆனால் முதன்முறையாகப் பள்ளிக்கல்வித்துறையே இதை வெளிப்படையாகப் பேசி முற்றுப்புள்ளி வைக்கவும் முனைந்தது.

‘தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சாதிப்பிரிவுகளைக் குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளைக் கட்டி வரும் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்குத் தலைமை ஆசிரியர்கள் அறிவுரை கூற வேண்டும். பாகுபாடுகள் காட்டுவோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் குறிப்பிட்ட வண்ணக் கயிறுகள், வளையங்களை அணிந்து வரக் கூடாது.

அதுபோல் சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் நெற்றியில் திலகமிட்டு வர அனுமதிக்கக் கூடாது’ என்று, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பினார். அதுவும் இத்தகைய சாதிக்கயிறுகள் மாணவர்களிடம் சாதி மோதல்களை ஏற்படுத்துவதாகப் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையை முன்வைத்தே, பள்ளிக்கல்வித்துறை இந்தச் சுற்றறிக்கை யைப் பள்ளிகளுக்கு அனுப்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூகநலனில் அக்கறையுள்ள அத்தனை பேரும் இதைப் பாராட்டினார்கள். ஆனால் வழக்கம்போல், சர்ச்சையைக் கிளப்பினார் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. ‘கைகளில் கயிறு அணிவதும் நெற்றியில் திலகம் இடுவதும் இந்துக்களின் மத நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் பள்ளிக்கல்வித்துறை தலையிடுவது தவறு’ என்று ட்விட்டரில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார் ஹெச்.ராஜா. இந்துமுன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் போன்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ‘கறுப்பு அல்லது சிவப்பு வண்ணங்களில் கயிறு கட்டுவதுதான் மத நம்பிக்கையின் அடிப்படையி லான கயிறுகள். தர்காக்களில் ஓதி வழங்கப்படும் தாயத்துக் கயிறுகளைக் கட்டிக்கொள்ளும் முஸ்லிம்களும் உண்டு. ஆனால் இந்தக் கயிறுகளுக்கும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் கட்டப்படும் கயிறுகளுக்கும் வித்தியாசம் உண்டு. இவை மதநம்பிக்கை அடிப்படையிலான கயிறுகள் அல்ல; சாதிக்கயிறுகளே. ‘கயிறுகளை அவிழ்க்கக்கூடாது’ என்று குரல் எழுப்பும் ஹெச்.ராஜாவும் ராம கோபாலனும் இந்துக்கள் என்று சொல்லப்படு பவர்கள் மத்தியில் சாதிக்கயிறுகளால் நடக்கப்படும் மோதல்களைத் தடுக்க என்ன செய்திருக்கிறார்கள்?’ என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சாதாரணமானவை அல்ல சாதிக்கயிறுகள்!

ஏற்கெனவே பா.ஜ.க ஆட்டும் கயிற்றுக்கு ஏற்ப ஆடும் தமிழக அரசும் கயிற்று விஷயத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றி விமர்சனங்களுக்கு ஆளானது. ஹெச்.ராஜாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘என் கவனத்துக்கு வராமலே பள்ளிக்கல்வித்துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் பழைய நிலையே தொடரும்’ என்றார். ‘பழைய நிலை தொடரும்’ என்றால் ‘பள்ளிகளில் சாதி பேதம் தொடரும்’ என்றுதான் அர்த்தம். உரத்த குரலில் செங்கோட்டையனுக்கு எதிராக விமர்சனங்கள் எழ, மறுபடியும் தடாலடி பல்டி அடித்தார் செங்கோட்டையன். “தமிழகப் பள்ளிகளில் சாதிப்பாகுபாடு இல்லை, அப்படி சாதிப்பாகுபாட்டைக் குறிக்கும் வகையில் கயிறு கட்டி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மீண்டும் குழப்பியுள்ளார். தமிழக அரசுக்கு இதுகுறித்துத் தெளிவான நிலைப்பாடு இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் ‘அரசுப்பள்ளிகளில் சாதிப்பாகுபாடு இல்லை’ என்பது முழுச்சோற்றில் பூசணிக்காயை அல்ல, ஒரு காட்டையே மறைக்கும் முயற்சி.

இப்போதும் தென்மாவட்டங்களில் சாதிச்சங்க விழாக்களுக்குப் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று வெறி ஏற்றி விடுவதும், வாகனங்களில் செல்லும்போது பிற சாதியினருக்கு எதிராக கோஷமிட வைப்பதும், சாதி அமைப்புகளின் பிளெக்ஸ்களில் மாணவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவதும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. தருமபுரி, விழுப்புரம், கடலூர், கரூர், நாகை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் சாதிரீதியாக சண்டையிட்டுக் கொண்ட சம்பவங்களும் சமீபத்தில் நடந்துள்ளன. சாதி ரீதியாக மாணவர்கள் மோதிக்கொண்டதாக இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன், “தென் மாவட்டங்களில் பள்ளிப்பருவத்திலேயே தங்களை சாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளும் பழக்கம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, விருதுநகர் மாவட்டங்கள், அதிலும் மதுரை மாவட்டத்தில் மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கானூரணி வட்டாரங்களில் இது அதிகம். நான் மேலூரில் பள்ளியில் படித்த காலத்தில் இக்கொடுமையை நேரில் பார்த்திருக்கிறேன்.

மணி அமுதன்
மணி அமுதன்

ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பு, மஞ்சள், வண்ணங்களில் கயிறு கட்டி வருவார்கள். மற்ற சாதி மாணவர்களுடன், அதிலும் பட்டியலின மாணவர்களுடன் அவர்கள் கலந்துவிடக் கூடாது, ஒன்றாகச் சாப்பிட்டுவிடக்கூடாது, விளையாடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் பெற்றோர்களே இப்படிக் கயிறுகளைக் கட்டி விடுகிறார்கள். இப்போது பட்டியலின மாணவர்களும் நீலம், பச்சை, சிவப்பு வண்ணக் கயிறுகளை அணிகிறார்கள். பள்ளிகளில் இந்த அடையாளத்தைப் பார்த்துதான் சக மாணவர்களுடன் அமர்வார்கள். அவர்களுடன்தான் பழகுவார்கள். மாணவர்கள் மட்டுமல்ல, சாதிப்பாகுபாடு பார்க்கும் ஆசிரியர்களும் உண்டு. இவர்கள் மற்ற சாதி மாணவர்களிடம் பேதம் காட்டவும் இந்த சாதிக்கயிறு உதவுகிறது.

பத்து வயதுப் பையனுக்கு எதற்காக நம் கையில் கயிறு காட்டுகிறார்கள் என்பது தெரியாது. ஆனால், அவன் பத்தாம் வகுப்புக்கு வரும்போது சாதிவெறி அவன் மூளையில் ஏற்றப்பட்டு சாதிப்பெருமை பேசும் மாணவனாக முழுமையாக மாறிவிடுகிறான். தனியார்ப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது அரசுப்பள்ளிகளில்தான் இந்த அவலம் அதிகம். ஊர்த் திருவிழாக்களில் சாதிக்கயிறு கட்டியவர்கள் குழுவாகச் சேர்ந்து சுற்றும்போது கலவரம் ஏற்படுகிறது. பேருந்துகளில் மாணவர்கள் செல்லும்போது சாதி ரீதியாக வாசகங்களை எழுதி அதனால் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அதனால் சாதிக் குறியீடாகக் கட்டப்படும் கயிறுகளைப் பள்ளியில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் தடைசெய்ய வேண்டும்” என்கிறார்.

மதுரை சோக்கோ அறக்கட்டளை நிர்வாகியும் வழக்கறிஞருமான செல்வகோமதி, “மாணவர்கள் மத்தியில் பாகுபாடு இருக்கக் கூடாது என்றுதான் சீருடை அணியச் சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது இப்படி ஒவ்வொரு சாதி மாணவர்களும் சாதி அடையாளத்துடன் பள்ளிக்குச் செல்வது மோசமான சிந்தனை கொண்ட தலைமுறையை உருவாக்கி விடும். சாமிக்கோ, கோயில் திருவிழாவுக்கு வேண்டிக்கொண்டோ கயிறு கட்டுவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் சாதிப் பெருமிதத்துக்காகக் கயிறு கட்டுவதைக் கண்டிப்பாக அரசு தடுக்க வேண்டும்’’ என்றார்.

செல்வகோமதி
செல்வகோமதி

நம்மிடம் பேசிய ஆசிரியர் ஒருவர், “பச்சிளம் குழந்தைகள் உள்ள அங்கன்வாடியிலேயே சாதிப்பாகுபாடு பார்த்து சமையல் செய்பவரை மாற்றச் சொல்கிறார்கள். கலெக்டரும் உடனே மாற்றுகிறார். சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளே சாதிரீதியாகச் சிந்திக்கும்போது, சாதிப்பெருமை யிலேயே உழன்று கொண்டிருக்கும் மக்களை என்ன சொல்வது? வகுப்பறையில் சாதிபார்த்து அமர வைக்கும் ஆசிரியர்களும் இருக்கி றார்கள். இதைவிடக் கொடுமை சாதிச் சங்கங்களில் செயல்பட்டு வரும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு சாதிச் சங்கங்கள் சார்பில் வாழ்த்து விளம்பரங்கள் வருகின்றன. சாதியுணர்வு உள்ள ஆசிரியர் எப்படி நல்லாசிரியர் ஆவார்? சாதி அடை யாளங்களைத் தங்கள் வாகனங்களில் ஒட்டிக்கொண்டு திரியும் காவல்துறை யினரும் தென்மாவட்டத்தில் உள்ளனர். இவர்கள்மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இணைப்பதற்காக உருவான கயிறுகள் மனிதர்களைப் பிரிப்பதற்குத்தான் உதவும் என்றால், அதை அகற்றுவதுதான் ஆகச்சிறந்த வழி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism