Published:Updated:

"UPSC என்றால் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது மிக முக்கியம்!"- திவ்யா IRS

திவ்யா IRS

"கல்லூரியில் படிக்கும் பாடத்தில் இருந்தே இத்தேர்விற்கான விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கான வேலைகளை கல்லூரி நாள்களிலேயே தொடங்கிவிடுவது இன்னும் சிறப்பு."- திவ்யா IRS

"UPSC என்றால் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது மிக முக்கியம்!"- திவ்யா IRS

"கல்லூரியில் படிக்கும் பாடத்தில் இருந்தே இத்தேர்விற்கான விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கான வேலைகளை கல்லூரி நாள்களிலேயே தொடங்கிவிடுவது இன்னும் சிறப்பு."- திவ்யா IRS

Published:Updated:
திவ்யா IRS

“சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என் இளங்கலை படிப்பை முடித்திருந்த நேரம். ECE பிரிவில் பொறியியல் படித்திருந்த எனக்கு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலையும் தயாராக இருந்தது. அப்போது என் அப்பா UPSC என்னும் ஒற்றை தேர்வை நீ தேர்ச்சி பெற்றுவிட்டால் 21 வெவ்வேறு மத்திய அரசு பணிகளுக்கு நீ செல்லலாம் என்று கூறி என்னை யோசிக்கச் சொன்னார். அப்போதிலிருந்து என் ஆர்வம் முழுவதும் UPSC பக்கம் திரும்பவே, அத்தேர்விற்காக முழுமையாகத் தயாராக தொடங்கினேன்” என்று கூறும் திவ்யா IRS சென்னை மாநகரின் தற்போதைய மத்திய சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி-யின் துணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.

திவ்யா IRS
திவ்யா IRS

“தேர்வுக்காக படித்துவந்த எனக்கு, தொடக்கத்தில் எந்த பேக்-அப் திட்டமும் இல்லை. ஆனால் தேர்வில் இருமுறை தேர்ச்சி அடைய முடியாமல் போகவே, பொருளாதார ரீதியாக என்னை நிலைநிறுத்தி கொள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் வேலைக்குச் சேர்ந்து என் படிப்பை தொடர்ந்தேன். நான் UPSC தேர்வில் தேர்ச்சி பெறும் வரையில் அங்கேதான் பணியில் இருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடக்கக் காலத்தில் நான் சந்தித்த தோல்விகளால் துவண்டு போகாமல் இருக்க என் குடும்பத்தினர்தான் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தனர். என் அப்பாதான் எனக்கு முதல் வழிகாட்டி. அதே நேரத்தில் ஒரு பெண்ணாக பொருளாதார ரீதியாக என்னை நிலைநிறுத்தி கொள்வதன் முக்கியத்துவத்தையும், என் சுதந்திரத்தையும் உணர்த்தியவர் அம்மா. தேர்வுக்குத் தயாராகும் இந்த நீண்ட பயணம் நிறைய நேரங்களில் மிகக் கடினமானதாக அமையும். அதுவும் பெண்கள் அனைவரும் கூடிய விரைவில் தங்கள் வாழ்வில் செட்டிலாகிவிட வேண்டும் என்று கூறும் இந்தச் சமூகத்தில் கூடுதல் அழுத்தங்களும் ஏற்படும். ஆனால் என் குடும்பத்தினர் அந்த மாதிரியான எந்த ஒரு நிபந்தைகளையும் என் மீது திணிக்கவில்லை.

தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்
தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்

நம் நம்பிக்கையை குறையவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் இப்பயணத்தில் மிக சவாலான ஒன்றாக நான் கூறுவேன். இந்தப் பயணம் நம் வாழ்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல போகிறது என்பதும் நாட்டுக்குச் சேவையாற்ற போகிறோம் என்பதும்தான் என் நம்பிக்கையை குறையாமல் பார்த்துக்கொண்டது. பயிற்சி காலத்தில் எனக்குப் பிடித்தமான விஷயங்கள் செய்வதையும் நான் தவறவிடவில்லை. அது எனக்கான மன அமைதியை அளித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னை பொறுத்தவரை முதல் சுற்றான preliminary தேர்வே கடினமான ஒன்றுதான். அதிக அளவிலான போட்டி இருப்பதே அதற்கான காரணம். இதே objective type-இல் இருந்து descriptive தேர்வாக மாறும் அடுத்த சுற்றில் அதன் கடினத்தன்மையும் அடுத்த கட்டத்திற்கு செல்லும். Static மற்றும் Current சிலபஸை சரியாக புரிந்து கொள்வதில் இருந்துதான் prelims மற்றும் mains ஆகிய இரண்டிற்கும் சரியாகத் தயாராக முடியும். சிலபஸின் நகல் ஒன்றை நம்முடன் எப்போதும் வைத்திருப்பது நல்லது.

கல்லூரியில் படிக்கும் பாடத்தில் இருந்தே இத்தேர்விற்கான விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கான வேலைகளை கல்லூரி நாள்களிலேயே தொடங்கிவிடுவது இன்னும் சிறப்பு. தொடக்கத்தில் NCERT பாடங்கள், தினந்தோறும் நாளிதழ்கள் போன்றவற்றை படிப்பதில் இருந்தே மெல்லமாக UPSC-யின் பாடங்களுக்குச் செல்லலாம். தேர்விற்காக எவ்வளவு சிறப்பாகத் தயாராகி இருந்தாலும், ஒரு நாள் முன்பு இருக்கும் பயமும் அன்றிரவு தூக்கம் வராமல் தவிப்பதும் யாருக்காக இருந்தாலும் ஏற்படுவதுதான். ஆனால், தேர்வு அறைக்குள் நுழைந்த மறுநொடியில் என் மனதை எவ்வளவு நிதானம் ஆக்கிக்கொள்ள முடியுமா, அதை முயற்சி செய்து தேர்வின் முடிவை நினைக்காமல் அப்போதைக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை முழுமையாக செய்ய நினைத்தேன். இந்த நேர்மறை எண்ணம் personality test-இன் போது நம் மனநிலையை சமநிலையில் வைத்துக் கொள்ள கூடுதலாக உதவும்” இவ்வாறு தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் திவ்யா IRS.

சிவில் சர்வீஸ்
சிவில் சர்வீஸ்
தேர்வுக்கு தயாராவதிலிருந்து, எவ்வாறெல்லாம் திட்டமிட வேண்டும், நாம் அதிகம் செய்யக்கூடிய தவறுகள் என்ன, சவால்களை எதிர்கொள்ள கூடிய வழிகள் என்ன ஆகியவற்றை பற்றி வரும் ஏப்ரல் 17 அன்று எத்திராஜ் கல்லூரியில் விகடன் நடத்தும் UPSC/TNPSC பயிற்சி முகாமில் இன்னும் விரிவாக பேச இருக்கிறார் திவ்யா IRS.

குடிமை பணியில் சேவையாற்றி வரும் இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றும் அப்பயிற்சி முகாமில் பங்குபெற கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism