Published:Updated:

படிக்கக் கூடாது... கற்றுக்கொள்ள வேண்டும்!

ENGLIஷ் VINGLIஷ்
பிரீமியம் ஸ்டோரி
ENGLIஷ் VINGLIஷ்

ENGLIஷ் VINGLIஷ்

படிக்கக் கூடாது... கற்றுக்கொள்ள வேண்டும்!

ENGLIஷ் VINGLIஷ்

Published:Updated:
ENGLIஷ் VINGLIஷ்
பிரீமியம் ஸ்டோரி
ENGLIஷ் VINGLIஷ்

தீபா ராம்

‘லேட் ஆகிடுச்சி’, ‘லெட்டர் வந்துச்சா’, ‘கிரைண்டர்’ ‘வாட்ச்,’ ‘டிரைவர்’ - இப்படி நிறைய வார்த்தைகளைப் படிக்காத பாமர மக்களும் பேசுவது வழக்கம். ஆங்கிலப் புலமை (English fluency) என்பது இப்படி தினம்தினம் ஆங்கிலச் சொற்களை உரையாடல்களில் புகுத்தி கற்றுக்கொள்வதுதான். ஆங்கிலத்தில் புலமை பெற உதவும் புத்தகங்கள் கொண்டு தேர்வுக்காகப் படிப்பது போல தயார்செய்ய வேண்டிய அவசியமில்லை. அதில் உள்ள நுணுக்கங்களைக் கவனிக்கவும், புது வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளவும் தொடங்கினாலே போதும்!

நல்லதாக எதையோ தேட, அதைவிட சிறந்ததாக ஒன்று கிடைப்பது எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும்! ஒற்றை வார்த்தையில் இதை Serendipity என்று சொல்லலாம். புதிதாக வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதற்கான நம் தேடலில் நம்முடைய மொழிப் புலமை வளர்வதும் Serendipity வகையில் சேர்த்தியே! உதாரணமாக... It was a moment of serendipity when I heard the temple bell ringing while leaving home for the interview.

படிக்கக் கூடாது... கற்றுக்கொள்ள வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்றலுக்கு வயதில்லை... காலம் கடந்தாலும் ஆர்வத்துடன் ஒருவர் எதையாவது கற்றுக்கொள்ள ஆரம்பித்தால், அவர் opsimath ஆகிவிடுவார். பணிநிறைவுக்குப் பிறகு கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டு முகநூல், ட்விட்டர், வலைதளம் பயன்படுத்துவோரும் opsimath ஆவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`சோர்வா இருக்கு... ஊசி போட்டால்தான் குணமாகும்' என்று நினைக்கும் ஒருவருக்கு, டாக்டர் வேறு வழியே இல்லாமல் ஒரு வைட்டமின் ஊசியையாவது (placebo) போட்டு விருப்பத்தைப் பூர்த்திசெய்வதை பார்த்திருப்போம். placebo என்பது மன நிறைவைத் தருவதற்கான ஒரு போலி நிவாரணி. எடுத்துக்காட்டாக The doctor prescribed a placebo to his patient who had pretend illnesses.

`விருமாண்டி' கமல் வைத்திருக்கும் மீசை போல வேண்டும் (I wish to have a burnside moustache styling) என்று சலூனில் சொன்னால், சிகை அலங்கார நிபுணருக்கு எளிதாகப் புரியும். ஆனால், விருமாண்டி ஸ்டைல் தெரியாத ஒருவரிடம் அதை எப்படிச் சொல்ல? அங்குதான் burnsides வரும். burnsides என்ற வகை மீசை, ஸ்டைலிங் Ambrose Everett Burnside என்ற அமெரிக்க அரசியல்வாதி / செனட்டரால் உருவாக்கப்பட்டது. அதனால் அவர் பெயரின் பின்பாதி காரணப் பெயரானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு ஒன்று கண்டிப்பாக உண்டு. அந்த இறுதித் தீர்வுக்கு Panacea என்ற வார்த்தை பொருத்தமானது. எடுத்துக்காட்டாக... பணம் ஒன்றே எல்லாவற்றுக்கும் தீர்வு என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. ஏனென்றால், பணத்தைக்கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது! (If you believe money is the panacea for all difficulties, you will be shocked to learn you cannot purchase happiness with cash!)

எளிமையாக Epiphany (எபிபானி) என்ற வார்த்தைக்குத் தமிழாக்கம் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், ‘ஞானோதயம்’ என்கிற பதத்தை உபயோகப்படுத்தலாம். கண நேரத்தில் கிடைக்கும் இந்த ஞானோதயத்தை உபயோகித்து ஒரு ஆங்கில சொற்றொடர் உங்களுக்காக... Going to jail for something which I did not do was an epiphany which caused me to rethink my choice of friends.

உணவின் அலாதி சுவையை அறிய ரசித்து ருசித்து மெதுவாகச் சாப்பிடுவது degust. `degustation menu' என்றே ஒரு தனி உணவுப் பட்டியலை பல ஹோட்டல்கள் விளம்பரம் செய்வர். உதாரணமாக... The restaurant is a highlight, with degustation menus offering mud pot fish curry and pan roasted chicken.

Emacity is his habit ... எதைப் பார்த்தாலும் வாங்கும் ஆசை கொண்ட ஒருவர் emacity கொண்டவர். அவருக்கு, கண்ணில் பார்க்கும் பொருள்களையெல்லாம் வாங்குவதில் பிரியம் அதிகம் (fondness for buying things).

படிக்கக் கூடாது... கற்றுக்கொள்ள வேண்டும்!

ஆங்கில அறிவு (English knowledge) என்று பலர் சொல்ல வருவதும் ஆங்கிலத்தில் புலமை (English fluency) என்பதைத்தான். ஒரு குறிப்பிட்ட மொழியில் புலமை பெற அந்த மொழியைப் படிக்கக்கூடாது... கற்றுக்கொள்ள வேண்டும்! புத்தகங்கள் கொண்டு தேர்வுக்காகப் படிப்பது போல படிக்காமல், கவனிக்கவும் பேசவும் தொடங்குங்கள். வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism