Published:Updated:

தமிழ்த்துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இருக்கின்றனவா? | Doubt of Common Man

தமிழ்க் கல்வெட்டு
News
தமிழ்க் கல்வெட்டு

கடந்த 30, 40 வருடங்களுக்கு முன் தமிழ்த்துறையில் படிக்கிறேன் என்று கூறினாலே கிண்டலாகப் பேசும் அளவிற்கு தமிழ் குறித்த படிப்புகள் மோசமான நிலைமையில் இருந்தன. ஆனால் தற்போது அது மாறியுள்ளது.

Published:Updated:

தமிழ்த்துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இருக்கின்றனவா? | Doubt of Common Man

கடந்த 30, 40 வருடங்களுக்கு முன் தமிழ்த்துறையில் படிக்கிறேன் என்று கூறினாலே கிண்டலாகப் பேசும் அளவிற்கு தமிழ் குறித்த படிப்புகள் மோசமான நிலைமையில் இருந்தன. ஆனால் தற்போது அது மாறியுள்ளது.

தமிழ்க் கல்வெட்டு
News
தமிழ்க் கல்வெட்டு
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் கதிர் என்ற வாசகர், "தமிழ்த்துறை மாணவர்கள் சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்கள் என்ன, அவர்களுக்கு உண்மையில் வேலைக்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா? தமிழ்த்துறையில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!

வாசகரின் இந்தக் கேள்வியைக் கல்வியாளர் ரமேஷ் பிரபாவிடம் முன்வைத்தோம். தமிழ்த் துறையின் தற்போதைய நிலைமை குறித்து அவர் கூறியதாவது, "கடந்த 30, 40 வருடங்களுக்கு முன் தமிழ்த்துறையில் படிக்கிறேன் என்று கூறினாலே கிண்டலாகப் பேசும் அளவிற்கு தமிழ்த்துறை மோசமான நிலைமையில் இருந்தது. ஆனால், தற்போது அது மாறியுள்ளது. தற்போது தமிழ்த்துறைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தமிழ் மொழி
தமிழ் மொழி

அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படி பொறியியல் கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் (single window counseling) நடத்தப்படுகிறதோ, அதைப் போலவே கடந்த வருடம் முதல் தமிழ்நாடு அரசுக் கலைக் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதில் இளங்கலை தமிழ் இலக்கியத்திற்கு, பன்னிரண்டாம் வகுப்பில் மற்ற பாடங்களைத் தவிர்த்துவிட்டு தமிழ்ப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கட் ஆஃபாக எடுத்துக்கொள்கிறார்கள். இது நம் தமிழ் இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய நன்மையைக் கொடுத்துள்ளது. இந்த வருடம் தமிழகத்தில் உள்ள அரசுக் கலைக் கல்லூரிகளில் நிரப்பப்பட வேண்டிய 1.1 லட்சம் அளவிலான இடங்களுக்கு இதுவரை 3.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுவே போதும் தமிழ்த்துறையின் தற்போதைய நிலைமையை எடுத்துச்சொல்ல!

தமிழ் இலக்கியம் படிப்பவர்களுக்கு தற்போது வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஊடகத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 20-க்கும் அதிகமான செய்திச் சேனல்கள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள அளவிற்கு எங்கும் பிரிண்ட் மீடியாக்கள் இல்லை. ஒவ்வொரு நகரத்திலும் 8-க்கும் அதிகமான எஃப்.எம் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தமிழ் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வரவேற்பும் உள்ளது. தொடர்ந்து தமிழ் இலக்கியம் படிக்கும்போது, கூடவே டெக்னாலஜி தொடர்பான விஷயங்களையும் கொஞ்சம் கற்றுக் கொண்டால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. குறிப்பாக டிஜிட்டல் மீடியா மிகப்பெரிய தளமாகத் தற்போது மாறியிருக்கிறது. ஊடகத் துறையில், திரையில் நாம் பார்ப்பதைவிடத் திரைக்குப் பின்னால் வேலை செய்பவர்கள் அதிகம். தமிழ் படிப்பது என்றால் இலக்கியங்களுடன் நின்றுவிடாமல் கணிணியில் தமிழ், செல்போனில் தமிழ் ஆப், தமிழில் விளம்பரம் டிசைன் செய்தல், புத்தகம் பதிப்பித்தல் துறையில் எடிட்டிங், புரூப் ரீடிங் என அப்ளிகேஷன் ஓரியண்டட் துறைகளில் கவனம் செலுத்தினால் வேலைவாய்ப்பு அதிகம். அவ்வாறான பல வேலைகளுக்குத் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்

கல்வியாளர் ரமேஷ் பிரபா
கல்வியாளர் ரமேஷ் பிரபா

கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு படைப்புத் திறன் சார்ந்த கலைத்துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கான திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் முழுமையான அறிவை வளர்த்தல், வேலைவாய்ப்புக்கான பண்பு, திறனை வளர்த்துக்கொள்வது, பழக்க வழக்கங்கள் இவைதான் வாழ்க்கைப்பணியைப் பெறுவதற்கு அடிப்படை ஆகும். மேலும், இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலத்தைக் கடந்து பிராந்திய மொழிகளிலும் விளம்பரம் செய்யவும் தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழை முதன்மையாகப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன. எனவே, தமிழுடன் சேர்த்து கொஞ்சம் மற்ற துறைகள் சார்ந்த அறிவையும் வளர்த்துக்கொண்டால் அந்தத் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை எளிதில் பெறலாம்.

தற்போது தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பற்றி அவர் கூறுகையில், "புதிதாக வகுப்புகள் சேர்க்கும் அளவிற்குத் தமிழ்த் துறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்றால், இல்லை. ஆனால் முன்பு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருந்த தமிழ்த்துறை இருக்கைகள் இன்று முழுவதும் நிரப்பப்படும் அளவிற்குக் கணிசமான அளவில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது" என்றார்.

இதேபோல உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man