நமது பொருளாதார நிலை குறித்து வெளியாகும் செய்திகளில் பெரும்பாலானவை மகிழ்ச்சியடையும்படி இல்லை. சில்லறைப் பணவீக்க விகிதம் அதாவது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்வது கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகியிருக்கிறது. `இது 4 சதவிகிதத்துக்குள் இருந்தால் நல்லது’ என்று ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், 2019 செப்டம்பரில் 3.99 சதவிகிதமாக இருந்த சில்லறைப் பணவீக்க விகிதம், அக்டோபரில் 4.62 சதவிகிதம் என்ற அளவைத் தொட்டிருக்கிறது. இது இன்னும் கொஞ்சம் உயர்ந்து, 5 சதவிகிதத்துக்குமேல் சென்றால், அன்றாடம் தேவைப்படும் பொருள்களையே மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்படும்.

இது ஒருபுறமிருக்க, கிராமப்புற மக்கள் செலவழிப்பது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. கடந்த 2009-10-ம் ஆண்டில் கிராமத்தில் வசிப்பவர்களில் ஒருவர், ஒரு மாதத்துக்குச் செலவு செய்யும் தொகை ரூ.1,053-ஆக இருந்தது. இது 2011-12-ம் ஆண்டில் ரூ.1,216-ஆக உயர்ந்தது. ஆனால், கடந்த 2017-18-ம் ஆண்டில் இது ரூ.1,109-ஆகக் குறைந்திருக்கிறது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் மாதந்தோறும் செலவழிக்கும் தொகை 2 சதவிகித அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. கிராம மக்கள் செலவு செய்வது தொடர்பான இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டது.

`ஜி.எஸ்.டி-யினாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையினாலும் கிராமப்புற மக்கள் செலவழிப்பது குறைவாக இருந்தது’ என்று இப்போது சொல்லலாம். அந்த நிலைமை இப்போது மாறியிருக்கிறதா, கிராமப்புற மக்கள் செலவழிக்கும் தொகை கடந்த ஓராண்டுக்காலத்தில் உயர்ந்திருக்கிறதா அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையைவிடக் குறைந்திருக்கிறதா என்பது குறித்து மத்திய அரசு உடனடியாகக் கண்டறிந்து சொல்ல வேண்டும்.

மேலும், கடந்த வாரத்தில் நம் பொருளாதார நிலையைத் தரமிறக்கிய மூடிஸ் நிறுவனம், தற்போது நம் ஜி.டி.பி வளர்ச்சியையும் குறைத்திருக்கிறது. அதாவது, `இந்த நிதியாண்டில் நம் பொருளாதாரம் 6.2% என்ற அளவில் இருக்கும்’ என்று கணித்திருந்த மூடிஸ் நிறுவனம், தற்போது `5.6 சதவிகிதமாக மட்டுமே இருக்கும்’ என்று மாற்றியிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, `நம் பொருளாதார நிலையைச் சரிசெய்ய மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா... அப்படி எடுக்கப்படும் நடவடிக்கையால் ஏதாவது பலன் கிடைக்கிறதா?’ போன்ற கேள்விகளெல்லாம் எழவே செய்கின்றன.

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி, மக்களிடம் அதிக அளவில் பணம் புழங்கினால் மட்டுமே நம் பொருளாதாரம் மீண்டும் உயரும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்காவிட்டால், மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டியிருக்கும் என்பது நிச்சயம்!

-ஆசிரியர்