Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 2

நாளை என்ன வேலை?
பிரீமியம் ஸ்டோரி
நாளை என்ன வேலை?

கல்வியாளர் ரமேஷ் பிரபா

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 2

கல்வியாளர் ரமேஷ் பிரபா

Published:Updated:
நாளை என்ன வேலை?
பிரீமியம் ஸ்டோரி
நாளை என்ன வேலை?

நம்மில் பல லட்சம் பேர் சேரக்கூடிய இன்ஜினீயரிங் படிப்பைப் பற்றியும், அதைச் சுற்றி சமீப ஆண்டுகளில் சுழன்றடிக்கும் சர்ச்சை பற்றியும் முதலில் பேசுவோம். கொஞ்ச காலத்துக்கு முன் வந்த ‘வேலையில்லா பட்டதாரி' தொடங்கி சமீபத்திய ‘செல்ஃபி' வரை பல்வேறு திரைப்படங்களிலும் இன்ஜினீயரிங் படிப்பைச் சிறுமைப்படுத்தும் வசனங்களும் கிண்டலடிக்கும் காட்சிகளும் தொடர்கதையாகிவிட்டன. இன்ஜினீயரிங் படிப்பைக் கேவலப்படுத்தும் வகையில் விதவிதமான மீம்ஸ் வேறு!

இதில், சமீபகாலமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு விளம்பரம் மற்றும் அது சார்ந்த மீம்ஸ்தான் ஹாட் டாபிக். ஒரு தினசரியில், சாப்ட்வேர் இன்ஜினீயர் தேவை என்கிற விளம்பரமும் புரோட்டா மாஸ்டர் தேவை என்கிற விளம்பரமும் அருகருகே இருக்கும். இன்ஜினீயருக்கு 7,000 முதல் 10,000 ரூபாய் சம்பளமும், புரோட்டா மாஸ்டருக்கு 18,000 முதல் 20,000 ரூபாய் சம்பளமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுதான் இன்ஜினீயரிங் படிப்பைக் கிண்டலடிக்க உதவும் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியிருக்கிறது. மேலோட்டமாக இது ரசிக்கக்கூடிய கிண்டலாகத் தோன்றினாலும், கொஞ்சம் உள்ளார்ந்து ஆராய்ந்தால் இன்ஜினீயர்களுக்கு வேலை கிடைக்காததற்கான காரணமும் யதார்த்தமும் இந்த விளம்பரங்களிலேயே அடங்கி யிருக்கின்றன என்பதுதான் உண்மை.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 2

ஹோட்டல் கொடுத்திருக்கும் விளம்பரம் பொதுவாக சமையல்காரர் தேவை என்பதற்கான விளம்பரம் அல்ல. அந்தத் துறையில் ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் வாய்ந்த புரோட்டா மாஸ்டர்தான் தேவைப்படுகிறார். சமையல் துறையில் புரோட்டா போடத் தெரிவது என்பது ஒரு தனித்திறமை. அது கேட்டரிங் டிகிரி, டிப்ளமோ படித்திருந்தால்கூட எல்லோராலும் சாத்தியமானதல்ல. இதை அப்படியே இன்ஜினீயரிங் படிப்புக்கும் பொருத்திப் பார்ப்போம். எத்தனை லட்சம் பேர் இன்ஜினீயரிங் படித்தாலும், இண்டஸ்ட்ரி எதிர்பார்க்கும் Employability Skills என்னவென்று அறிந்துகொள்வது ஒவ்வொருவருக்கும் முக்கியம். அவற்றை வளர்த்துக்கொண்டு தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளாதவரை வேலையில்லாப் பட்டதாரிகளாகவும் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்குப் போக வேண்டியவர்களாகவும் மட்டுமே இருக்க முடியும்.

நம் அன்றாட வாழ்க்கையின் உதாரணங்களையே எடுத்துக் கொள்வோம். எலக்ட்ரிகல் துறையில் வல்லுநராக ஆகப்போகிற ஒரு EEE மாணவன் வீட்டில் ஃப்யூஸ் போய் விட்டால் உடனே எலக்ட்ரீஷியனைத் தேடுவதைத்தான் பார்க்க முடிகிறது. சிவில் முடித்த எல்லாருமே உடனே வீடு கட்டத் தெரிந்தவர்களாக இருப்பதில்லை. ஆனால், இன்ஜினீயரிங் பட்டமோ டிப்ளோமாவோ படிக்காத நம்ம கிராமத்து மேஸ்திரி, தானே வடிவமைத்து ஒரு அருமையான வீட்டை எந்தக் குறைபாடும் இல்லாமல் கட்டி முடித்துவிடுவார். இதுதான் ஸ்கில் எனப்படுவது. நமது இன்ஜினீயரிங் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது, இண்டஸ்ட்ரி எதிர்பார்க்கிற வேலைக்குப் பொருத்தமான Employability Skills மட்டுமே. கூடவே இன்றைய இண்டஸ்ட்ரி எதிர்பார்க்கிற புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம். இதுகுறித்து AICTE தலைவர் சமீபத்தில் பேசியுள்ளார். ‘‘நமது பொறியியல் பாடத்திட்டம் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். முடிந்தால் ஒவ்வொரு செமஸ்டருக்கும்கூட மாற்றினால் நல்லது. அப்போதுதான் படித்து வெளியேறும் நம் மாணவர்கள் இண்டஸ்ட்ரி எதிர்பார்க்கிற லேட்டஸ்ட் தொழில்நுட்பம் கற்றவர்களாகச் செல்வார்கள்'' என்கிறார் அவர். இது காலத்தின் கட்டாயம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 2

தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இதில் படிப்பின் முடிவில் பல பேப்பர்களில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் பாதிக்கு மேல் என்பது அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம்.

இத்தனை ஆயிரம் பேர் இன்ஜினீயரிங் படிப்பை முடிக்காததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். +2 வரை கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மார்க் வாங்கி அதன் மூலம் இன்ஜினீயரிங் சேர்ந்த பல மாணவர்கள் அங்கு சென்ற பிறகு படிப்பில் அக்கறை காட்டாமல் கோட்டை விட்டது ஒரு பகுதி. படிப்பின் சுமை தாங்க முடியாமல் அரியர்ஸ் வாங்கியவர்கள்தான் பெரும்பகுதி. காரணம், இன்ஜினீயரிங் படிப்பில் கணிதம் ஒரு முக்கியமான பாடமாக உள்ளது. ஆனால், நம் ஊரில் விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கிடைக்கும் நிலை உள்ளதால் கணிதத்தில் 40 மார்க் வாங்கியவர்களும் இன்ஜினீயரிங் சேர்ந்துவிடுகிறார்கள். உள்ளே போனபிறகு அங்கு எல்லா மேத்ஸ் பேப்பர்களிலும் அரியர்ஸ் வாங்கி, அதனால் மற்ற சில பேப்பர்களிலும் சேர்த்து அரியர்ஸ் வாங்குகிற நிலை ஏற்படுகிறது. எனவே, தனக்குக் கணிதம் சரியாக வரும் என்கிற மாணவர்கள் மட்டுமே இன்ஜினீயரிங்கைத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு சில இன்ஜினீயரிங் படிப்புகளுக்குக் கணிதப் பாடமே தேவையில்லை என்று இந்த ஆண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE) எடுத்திருக்கிற முடிவு பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்து, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிக அதிகம். 500 கல்லூரிகள் தேவைதானா என்கிற ஒரு விமர்சனம் தொடர்ந்து இருந்துவருகிறது. இது தவறான கண்ணோட்டம். ஏனென்றால், நாம் தமிழகத்திற்கு மட்டும் தேவையான இன்ஜினீயர்களை உருவாக்குவதில்லை. இந்தியா முழுமைக்குமான தேவை, அதைத் தாண்டி உலக நாடுகளுக்கான இன்ஜினீயர்கள் தேவையில் பெரும்பகுதியைத் தமிழகம் உருவாக்குகிறது என்று பெருமையாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கல்லூரிகள் சரிவர நடத்தப்படுவதில்லை என்பது ஒருபுறம் உண்மைதான் என்றாலும் மறுபுறம் மாணவர்களிடம் ஒரு தவறான கருத்தும் நிலவிவருகிறது. அது என்னவென்றால், சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரிகள் மட்டும்தான் சிறந்தவை என்பது போன்ற ஒரு மாயையால் மற்ற மாவட்டங்களில் நிறைய தரமான கல்லூரிகள் இருந்தும்கூட அவற்றைத் தேர்ந்தெடுக்க மறுக்கிறார்கள். எனவேதான் அதிக இடங்கள் காலியாக உள்ள கல்லூரிகள் மற்றும் மூடப்படும் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை எடுத்தால் சென்னையைத் தாண்டி மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையே அதிகம் இருக்கும்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 2

இதையெல்லாம் மனதில் கொண்டு ஒரு முக்கியமான கொள்கை முடிவை AICTE எடுத்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவில் புதிதாக தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது என்பதுதான் அந்த அதிரடி முடிவு.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங்கில் ஏராளமான சீட்கள் காலியாக உள்ளன என சமீப ஆண்டுகளில் சொல்லப்பட்டாலும், அவை அனைத்தும் வேறு திசை நோக்கிப் போகின்றன என்பதுதான் உண்மை. ஆம், Deemed Universities எனப்படும் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையும் அவற்றில் உள்ள பொறியியல் இடங்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகிக்கொண்டே போகின்றன. ஏராளமான மாணவர்கள் அந்த திசை நோக்கிப் போவது அதிகரித்துவிட்டதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் இடங்கள் காலியாக உள்ளதற்குக் காரணம்.

எனவே ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இன்ஜினீயரிங் படிப்புக்கான மவுசு எந்த விதத்திலும் குறையவில்லை என்பதுதான் உண்மை.

- படிப்பு தொடரும்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒளிமயமான எதிர்காலம்!

Covid சூழலில் கடந்த ஆண்டுகளில் அதிகம் பேர் புதிதாக வேலைக்கு எடுக்கப்படாத நிலையில், இந்த ஆண்டிலும் எதிர்வரும் ஆண்டுகளிலும் பல லட்சம் புதிய பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என்கின்றன சமீபத்திய ஆய்வறிக்கைகள். Taggd என்கிற வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் டிஜிட்டல் நிறுவனமும் இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய சர்வே பல பயனுள்ள தகவல்களைத் தருகிறது.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 2

ஜாப் மார்க்கெட்டை ஆளப்போகும் ஐ.டி துறை!

இந்த ஆண்டு படிப்பை முடித்து வெளிவரும் (Freshers) பொறியியல் பட்டதாரிகளை அதிக அளவில் வேலைக்கு எடுக்கும் துறையாக ஐ.டி திகழ்கிறது. உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் சுமார் 3,60,000 புதிய பட்டதாரிகளை இந்த வருடம் வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். சில முன்னணி ஐ.டி நிறுவனங்கள் இந்த வருடம் வேலைக்கு எடுக்க உத்தேசித்திருக்கிற எண்ணிக்கை இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 2

இந்தக் கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/3vEihHU

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism