Published:Updated:

என் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா? கல்வியாளர் விளக்கம் #DoubtOfCommonMan

மாணவர்கள்
News
மாணவர்கள்

புதிய கற்பித்தல் முறை பற்றிய கேள்விக்கு கல்வியாளர் விளக்கம் அளிக்கிறார்.

Published:Updated:

என் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா? கல்வியாளர் விளக்கம் #DoubtOfCommonMan

புதிய கற்பித்தல் முறை பற்றிய கேள்விக்கு கல்வியாளர் விளக்கம் அளிக்கிறார்.

மாணவர்கள்
News
மாணவர்கள்

இன்றைய பெற்றோர் அதிக நேரம் சிந்திப்பது தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பது குறித்துதான். எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்பது தொடங்கி, எந்தெந்த சிறப்பு வகுப்புகளிலெல்லாம் சேர்க்கலாம் என்பது வரை பெற்றோர்களின் தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கும். தனியார் பள்ளிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், பாடத்திட்டங்களும் வேறு வேறாக இருக்கின்றன. எது சிறந்த பாடத்திட்டம் என்பதில் பல பெற்றோருக்குக் குழப்பம் நிலவுகிறது.

மாணவர்கள்
மாணவர்கள்
ரூபிணி என்ற வாசகி, விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் ஒரு கேள்வியெழுப்பியிருக்கிறார். "என் மகள் தனியார் பள்ளியொன்றில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அங்கு istream என்ற புதுவிதமான கல்வித்திட்டம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கல்வித்திட்டத்தில் என் மகள் தொடர்ந்து படித்தால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் அவளுடைய மதிப்பெண் அங்கீகரிக்கப்படுமா? மேல்படிப்புக்கு இந்தக் கல்வித்திட்டம் உதவுமா..?" என்பதே அவருடைய கேள்வி.

இந்தக் கேள்வியை மேட்டூரைச் சேர்ந்த கல்வியாளர் ராஜாவின் முன்வைத்து விளக்கம் கேட்டோம். "முதலில் அந்த வாசகிக்கு வாழ்த்துகள்! மகள் படிக்கும் கல்வி முறையைப் பற்றித் தெரிந்துகொண்டிருப்பதோடு, அது உயர்கல்விக்கு உதவியாக இருக்குமா என்பதுவரை யோசித்திருக்கிறார். பல பெற்றோர்களுக்கு பிள்ளை பள்ளியில் என்ன படிக்கிறார்கள் என்பதுகூடத் தெரிவதில்லை. பிள்ளைகள் என்ன படித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதைப் போலவே எப்படிப் படித்தார்கள் என்பதையும் பெற்றோர் அறிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் பிள்ளைகளின் கற்றலில் வளர்ச்சியோ தளர்ச்சியோ ஏற்பட்டால் காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியும். இல்லையெனில் பிள்ளையின் மனப்பாடத் திறனை மட்டுமே அளவாகக் கொண்டிருப்போம்.

மாணவர்கள்
மாணவர்கள்

இந்தியாவில் எந்தப் பாடத்திட்டமாக இருந்தாலும், தேசிய அளவில் வகுக்கப்பட்டுள்ள 'நேஷனல் கரிக்குலம் ஃப்ரேம்வொர்க்' (National Curriculum Framework) என்ற வழிகாட்டுதல் அடிப்படையில்தான் பாடங்களை உருவாக்கமுடியும். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்வது நல்லது. அப்படி உருவாக்கப்பட்ட பாடங்களைக் கற்பிக்கும் முறைகள் பள்ளிக்குப் பள்ளி வேறுபடலாம். அப்படியான கற்பிக்கும் முறைகளில் ஒன்றுதான், நீங்கள் குறிப்பிடும் 'Istream' முறை. செயல்வழியாகப் பாடங்களைக் கற்பிக்கும் முறை இது. பாடங்களை எளிதாகப் புரிந்துகொண்டு, மனதில் நிறுத்த இந்த முறை பயன்படும். ஆங்கிலம் பேசவும் எழுதவும் இந்தக் கற்பிக்கும் முறை உதவும்.

சில தனியார் பயிற்சி நிறுவனங்களில் Istream முறையைப் பின்பற்றி கற்பித்து வருகிறார்கள். இந்தக் கற்பித்தல் முறை சிறந்ததா, சிறந்ததில்லையா என்று போகிறபோக்கில் சொல்லமுடியாது. ஏனெனில், ஒரு கற்பிக்கும் வழிமுறையைப் பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரேமாதிரி பயன்படுத்துவதில்லை. சில பள்ளிகளில் அந்த வழிமுறையை முழுமையாகப் புரிந்துகொண்டு கற்பிப்பதுண்டு. சில பள்ளிகளில் தங்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்துகொள்வார்கள். அதனால், நாம் கவனிக்கவேண்டியது, 'நேஷனல் கரிக்குலம் ஃப்ரேம்வொர்க்' வரையறுத்திருக்கும் பாடங்களைக் கற்பிக்கிறார்களா என்பதைத்தான். அதுபோலவே இந்த Istream முறை பாடங்களை எப்படிக் கற்பிக்கிறார்கள் என்பதையும் பார்த்தே முடிவெடுக்கமுடியும்.

மாணவர்கள்
மாணவர்கள்

அதுமாதிரியான ஒரு கற்பித்தல் முறைதான் Istream. நீங்கள் உங்கள் பள்ளிக்குச் சென்று, 'நேஷனல் கரிக்குலம் ஃப்ரேம்வொர்க்' அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடங்கள்தான் நடத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் உங்கள் பிள்ளையின் உயர்கல்வி குறித்தோ, எதிர்காலம் குறித்தோ அச்சப்படத் தேவையில்லை..." என்கிறார் ராஜா.

Doubt Of Common Man
Doubt Of Common Man

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.