Published:Updated:

படிக்கும்போதே போட்டித் தேர்வுக்குத் தயார் செய்யும் `வேதிக் மேத்ஸ்' பயிற்சி - எப்படிக் கலந்துகொள்வது?

மேத்ஸ் பயிற்சி
News
மேத்ஸ் பயிற்சி

எத்தனை பெரிய கணக்கென்றாலும் நொடிப் பொழுதில் விடைகளைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுக்கிற இந்த நிகழ்ச்சியில் 4 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சி ஆங்கில வழியில்.

அரசு வேலை என்பது எப்போதுமே எல்லோருக்கும் ஒரு கனவுதான். படிப்பு முடிந்ததும், மத்திய, மாநில அரசுப் பணிகளைப் பெற விரும்புபவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. யு.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, ரயில்வே ஆகிய தேர்வுகள்தான் ஒரே வழி. இந்தத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெல்கிறவர்கள் உடனடியாக அரசுப்பணியில் சேரலாம்.

மேற்கண்ட தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வுகளில் 'பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங் கடைசியாக நியூமெரிகல் எபிலிடி ஆகியவைதான் சிலபஸ்.

பொதுத்தமிழ், பொது ஆங்கிலத்துக்கு பள்ளி, கல்லூரி வரை படித்ததே போதுமானது. பொது அறிவுக்கு டிவி, பத்திரிகை மூலம், செய்தி பார்ப்பது, நாட்டு நடப்புகளைத் தெரிந்து வைத்திருந்தால் சமாளித்துவிடலாம்.

கொஞ்சம் யோசித்தால் 'ரீசனிங்'கையும் எதிர்கொண்டு விடலாம். ரீசனிங் கேள்விக்கு ஒரு உதாரணம்... 'உங்கள் உடன் பிறந்த தங்கையின் அம்மாவுடைய கணவர் உங்களுக்கு என்ன உறவு?' ஈஸிதானே?
போட்டித் தேர்வுகள்
போட்டித் தேர்வுகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரி, கடைசியாக இருப்பது நியூமெரிகல் எபிலிட்டி. இதில்தான் பலரும் திணறுவார்கள். காரணம் கணக்கு. பலரும் நேரத்தை விரயமாக்குவது இதில்தான்.

ஆனால் 'மேத்ஸ் என்பதே ஒரு மேஜிக்தான்; பள்ளிப் பருவத்திலேயே அந்த வித்தையைத் தெரிந்துகொண்டால் போட்டித் தேர்வையெல்லாம் இடது கையில் டீல் செய்யலாம்' என்கிறார்கள் கணித நிபுணர்கள்.

அந்த கணித சூட்சமத்தை மாணவர்களுக்குச் சொல்லித் தரும் ஒரு நிகழ்ச்சியைத்தான் ஆனந்த விகடன் முன்னெடுத்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வேதிக் மேத்ஸ் முறையை பயன்படுத்தி எளிமையாக கணிதம் கற்க உதவும் 'பிரைன்கார்வ்' நிறுவனமும் ஆனந்த விகடனும் இணைந்து நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாள்கள் நடக்க இருக்கின்றன.
நேரம் மாலை 6 முதல் 7 மணி வரை | பயிற்சிக்கான கட்டணம் ரூ.500 மட்டுமே.

விளையாட்டாக, சுவாரஸ்யத்துடன் எத்தனை பெரிய கணக்கென்றாலும் நொடிப் பொழுதில் விடைகளைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுக்கிற இந்த நிகழ்ச்சியில் 4 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சி ஆங்கில வழியில்.

வேதிக் மேத்ஸ்
வேதிக் மேத்ஸ்

’நொடிப் பொழுதில் கூட்டிக் கழித்து விடை காணும் உத்திகள்’, ’நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி’, ’மனப்பாடம் செய்யாமல் ஒரு விஷயத்தை மனதில் நிறுத்த உதவும் மெமரி டெக்னிக்ஸ்’ போன்றவை இந்தப் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்கிறார் பிரைன்கார்வ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பரமேஷ்வரி.

பள்ளி நாள்களிலேயே கணிதத்தை வேகமாகத் துல்லியமாகக் கணிக்க முடிகிற திறமை நம் குழந்தைகளுக்குக் கிடைக்க‌ச் செய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமையும் கூட‌!

பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவுசெய்ய இங்கே க்ளிக் செய்யவும்.