Published:Updated:

சென்னை ஐ.ஐ.டியில் எம்.ஏ படிக்க விருப்பமா? +2 படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (The Indian Institute of Technology Madras), +2 முடித்த மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளாக, இரு வகையான படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது.

சென்னை
சென்னை

சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (The Indian Institute of Technology Madras), பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகளாக, M.A. Development Studies, M.A English Studies என இரு வகையான படிப்புகளை நடத்துகிறது. இந்தப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத் தேர்வுக்கு (Humanities and Social Sciences Entrance Examinations – HSEE 2020) விண்ணப்பிக்கும் நேரம் இது.

கல்வி மற்றும் வயது:

இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான தேர்வில், முதல் முயற்சியிலேயே (First Attempt) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 55% மதிப்பெண்களுடனும் தேர்ச்சிபெற்றிருப்பது அவசியம். புள்ளிக்கணக்கில் (Grade) மதிப்பெண்கள் இருப்பின், மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையானதாக இருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

மாணவர் சேர்க்கையின்போது, மேற்காணும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 01-10-1995 தேதிக்குப் பின்னரும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 1-10-1990 தேதிக்குப் பின்னரும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

சென்னை
சென்னை
pixabay

விண்ணப்பம்:

இந்த நுழைவுத் தேர்வுக்கு http://hsee.iitm.ac.in/ என்கிற இணையதளத்துக்குச் சென்று, இணைய வழியில் 11-12-2019 முதல் விண்ணப்பிக்கலாம்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினர், ரூ. 2,400, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூபாய் 1,200 விண்ணப்பக் கட்டணத்தை Credit Card, Debit Card, Net Banking போன்ற இணைய வழிமுறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும்போது, இந்தியன் வங்கிக் கிளை சலான் உருவாக்கம் செய்து, அதன் வழியாகவும் பணம் செலுத்த முடியும். விண்ணப்பிக்கவும், விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும் கடைசி நாள்: 22-1-2020. இந்தியன் வங்கிக் கிளை சலான் வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 23-1-2020.

நுழைவுத் தேர்வு

விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை (Application Status) 17-2-2020 முதல் அறிந்துகொள்ள முடியும். பிறகு, 18-3-2020 முதல் 19-4-2020 வரை நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அனுமதி அட்டை பெற்றவர்கள் அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், கௌகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, புதுடெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 16 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில், 19-4-2020 அன்று நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

diploma
diploma
pixabay

மாணவர் சேர்க்கை:

15-5-2020 அன்று நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்தத் தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களைக் கொண்டு பொதுத் தரவரிசைப் பட்டியலும், ஈடபிள்யூஎஸ், ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரவரிசைப்பட்டியலும் தனித்தனியாக வெளியிடப்படும்.

16-5-2020 முதல் தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அனுமதிக் கடிதத்தை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கூடுதல் தகவல்கள்:

நுழைவுத்தேர்வு குறித்த தகவல்கள், பாடத்திட்டங்கள் மற்றும் சேர்க்கை குறித்த பல விவரங்களை அறிய http://hsee.iitm.ac.in/ என்கிற இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது `The Chairman, HSEE-2020, JEE Office, IIT Madras, Chennai–600036' என்கிற முகவரிக்கு நேரில் சென்று அறியலாம். அல்லது 044 – 22578220 தொலைபேசி எண்ணிலோ, hsee@iitm.ac.in மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பெறலாம்.