Election bannerElection banner
Published:Updated:

அதிகரிக்கும் சம்மர் கேம்ப் விளம்பரங்கள்... பெற்றோர்களே அலெர்ட்!

School Student
School Student ( Church of the King on Unsplash )

கோடைக்காலம் வருவதை வெயில் மட்டும் அறிவிப்பதில்லை. கூடவே பத்திரிகைகளில் வெளியாகும் குழந்தைகளுக்கான சம்மர் கேம்ப் அறிவிப்புகளும்தான். குழந்தைகளுக்குத்தான் கோடை விடுமுறை. பெற்றோர்களுக்கு அல்ல.

கோடைக்காலம் வருவதை வெயில் மட்டும் அறிவிப்பதில்லை. கூடவே பத்திரிகைகளில் வெளியாகும் குழந்தைகளுக்கான சம்மர் கேம்ப் அறிவிப்புகளும்தான். காரணம் குழந்தைகளுக்குத்தான் கோடை விடுமுறை. பெற்றோர்களுக்கு அல்ல. வேலைக்குச் செல்லும் கணவன் மனைவி உள்ள குடும்பத்தில் இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய கவலைக்கு சம்மர் கேம்ப்புகள்தான் தீர்வாக அமைகின்றன்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக சம்மர் கேம்ப்புகள் செயல்படவில்லை. ஆனால் தொற்று தீவிரம் அடைந்திருக்கும் இன்றைய நிலையில், சம்மர் கேம்ப் பற்றிய பல அறிவிப்புகள் வரத்தொடங்கி உள்ளன. இவை 5-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முகாம்கள் என விளம்பரப்படுத்தப்படுகின்றன.

corona
corona

இப்படி வரும் அறிவிப்புகள் பலவற்றிலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் அளவுக்குப் போதிய இடவசதி இருப்பதாகவும், குழந்தைகளைப் பராமரிக்கப் பயிற்சிபெற்றவர்கள் உள்ளதாகவும், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்றும் சொல்லப்படுகின்றன.

கடந்த ஒரு வருடமாகவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பல மாதங்களாக வீட்டில் அடைபட்ட நிலையில் இருக்கும் பெரும்பான்மையான குழந்தைகள் மனச்சோர்வுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்கும் நிலை. கூடுதலாக குழந்தைகளின் ஆன்லைன் படிப்பு, அவர்களைப் பார்த்துக்கொள்வது என்று மல்டி டாஸ்கிங் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் இந்த வருடம் சம்மர் கேம்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகளும் பெற்றோர்களும் ஏராளம். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்க மட்டுமே பெருவாரியான நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளது அரசு. இந்நிலையில் குழந்தைகளுக்கான சம்மர் கேம்ப்புகள் அனுமதிக்கப்படக்கூடாது, அங்கே தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Children
Children

சம்மர் கேம்ப்புகள் பாதுகாப்பில்லாதவை. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கொரோனா தொற்றுப் பரவல் எப்படியிருக்கிறது என்பதற்கான தரவுகள் நம்மிடம் இல்லை. குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளும் தொடங்கப்படாதநிலையில், குழந்தைகள் சூப்பர் ஸ்பிரெடர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது மற்றவர்களுக்குத் தொற்றைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அவர்கள்.

அவர்களிடம் எந்த பாதிப்பும் இருக்காது அல்லது அறிகுறிகள் வெளியில் தெரியாது. ஆனால் நோய்த்தொற்று பரவுவதற்கு பெரும் காரணிகளாக இவர்கள் இருப்பார்கள். எனவே சம்மர் கேம்ப்புகளில் குழந்தைகள் கூடும்போது ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதையும் விளையாடுவதையும் தவிர்க்க இயலாது. இதுவே நோய்த்தொற்றின் பரவலுக்கு வழி வகுக்கும். இவ்வாறு ஒரு குழந்தையிடமிருந்து மற்ற குழந்தைகளுக்கும், இந்தக் குழந்தைகள் மூலம் அவர்கள் வீட்டாருக்கும் தொற்று பரவக்கூடும். எனவே குழந்தைகளை நேரில் வரவழைத்து நடத்தப்படும் சம்மர் கேம்ப்புகளைத் தவிர்ப்பதே பாதுகாப்பனது'' என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும்.

- லதா ரகுநாதன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு