Published:Updated:

ஒரே வருடத்தில் மாணவிகள் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிப்பு...

நுழைவாயில்
பிரீமியம் ஸ்டோரி
நுழைவாயில்

ஐ.எஸ்.ஓ சான்று பெற்று அசத்தும் அரசுப் பள்ளி!

ஒரே வருடத்தில் மாணவிகள் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிப்பு...

ஐ.எஸ்.ஓ சான்று பெற்று அசத்தும் அரசுப் பள்ளி!

Published:Updated:
நுழைவாயில்
பிரீமியம் ஸ்டோரி
நுழைவாயில்

படங்கள்: அரவிந்த்குமார்.வே

அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள், திட்டங்களை பற்றியெல்லாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், அதை செயலில் காட்டியபடி தலை நிமிர்ந்து நிற்கிறது, மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை பகுதியில் உள்ள யா.நரசிங்கம் ஊராட்சியில் உலகனேரி என்ற கிராமத்தில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. சென்ற ஆண்டில் இங்கு 1,500 ஆக இருந்த மாணவிகள், இந்த ஆண்டு 2,500 ஆக அதிகரித்திருக்கிறது. ‘எப்படி இந்த சாதனை..?’ என்று பள்ளியைத் தேடிச் சென்றால், இன்னும் பல சாதனைகள் அங்கே நிகழ்ந்து கொண் டிருப்பதை அறிய முடி கிறது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் சுசித்ராவிடம் பேசினோம். “நான் சென்ற ஆண்டுதான் பதவி உயர்வுபெற்று இங்கு பொறுப் பேற்றேன். இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் பன்னிரண் டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் சிறப்பான பள்ளியாக இதனை மேம் படுத்த, வளாகம் முதல் கற்பித்தல் வரை பல முயற்சிகளை மேற்கொள் கிறோம்’’ என்றவர், அதைப் பற்றி பகிர்ந்தார்.

ஒரே வருடத்தில் மாணவிகள் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிப்பு...

‘`பள்ளி வளாகத்தில் இரண்டு விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு, ஜுடோ, பேஸ்கெட் பால், டென்னிஸ், சிலம்பம் போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஒரு சிறிய மைதானத் திடல் அமைத்து, அங்கு பல்லாங்குழி, சொட்டாங் கல், தாயம், பரமபதம், நேர்கோடு, சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் விளையாட வசதி ஏற் படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதன்முறை யாக பாரம்பர்ய விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்ட பள்ளி இதுவே’’ என்பவர், தங்கள் மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்படு வதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

‘`மாணவிகளுக்கு சுத்தி கரிக்கப்பட்ட தூய்மை யான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப் பறையை உறுதிசெய்துள்ளோம். பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி வாய்மொழியாக சொல்வதோடு, எது சரி, எது தவறு என்று புரிந்துகொள்ளும் படியாக கவிதை வடிவில் எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது.

தனியார் பள்ளிக்கு நிகராக ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தியிருப்பதால், ஆன்லைன் வகுப்புகள் சிரமமின்றி நடக்கின்றன. யூடியூபையும் ஒரு கற்றல் கருவியாகப் பயன்படுத்துகிறோம். ஹைடெக் லேப் வசதி உருவாக்கி பல தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம். இதனால் போட்டித்தேர்வுகளுக்கு மாணவிகள் தன்னம்பிக்கை யுடன் தயாராகலாம். மேலும், நீட் தேர்வு பயிற்சி மாலை நேரத்தில் அளிக்கப் படுகிறது. நீட் வகுப்புக்கு முன்னதாக, மாணவிகளுக்கு சத்தான சிற்றுண்டி வழங்கப் படுகிறது. ஆசிரியர் - மாணவர் உறவு மிகவும் ஆரோக்கியமாக, நட்புடன் இருக்கிறது’’ என்றவர், சமூக விரோதிகளுக்கு எதிராக பள்ளி சார்பில் எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை பற்றி சொன்னார்.

பாரம்பர்ய விளையாட்டுத் திடல்
பாரம்பர்ய விளையாட்டுத் திடல்

‘`பள்ளிக்கு அருகில் முன்னர் பார் இருந்தது. இதனால், மாலை நேரங்களில் சில ஆண்கள் மது அருந்திவிட்டு பள்ளி பாதையில் பாட்டில் களை வீசிவிட்டுச் செல்வார்கள்; பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும், பள்ளியில் கட்டமைப்பு வசதிகள், மாணவிகள் எண்ணிக்கை நன்றாக இருந் தாலும், முகப்பு தோற்றம் ஒரு குறையாக இருந்தது. பள்ளியின் முன்வாசலில் இருந்து 60 அடி தூரம் வரை சமூக விரோதிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

மாணவிகளுக்கு நிலவிய இந்தப் பாது காப்பற்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில்தான், முதலமைச்சரின் அறிவுறுத்த லின்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளியைப் பார்வையிட்டார். அவருடன் வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரிடமும் எங்கள் கோரிக்கையைத் தெரிவித்தோம்.

உடனடியாக கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வணிகம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மூலமாக, பள்ளியின் நிதி, மாவட்ட ஆட்சியரின் நிதி மற்றும் தன் சொந்த செலவில் இந்தப் பள்ளிக்கு முகப்பு வாயில் அமைக்க ஏற்பாடு செய்தார். பள்ளியின் முன்பு இருந்த பாரையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டனர்.

சுசித்ரா
சுசித்ரா

உயர் நீதிமன்ற முன்னணி வழக்கறிஞர்களின் உதவியும் இதில் சேர்ந்தது. பள்ளிக்கு சுற்றுப்புற சுவர் எழுப்பப்பட்டு, ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழும் பெற்று கொடுக்கப்பட்டது. தற்போது பள்ளியின் சுற்றுப் புற சுவரில் தமிழ் பண்பாடு மற்றும் மதுரை மண்ணின் அடையாளங்களைப் பிரதி பலிக்கும் ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. அதைவிட முக்கியமாக, மாணவிகள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய ஹெல்ப் லைன் எண்கள் எழுதப்பட்டி ருக்கின்றன.

முன்னர் இந்த ஊரில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவிகள் வீட்டுக்குச் செல்வதற்குள் இருட்டிவிடும். எங்கள் கோரிக்கையை அடுத்து, இப்போது இந்த வழித்தடத்தில் மூன்று அரசுப் பேருந்துகளும் விடப்பட்டிருக்கின்றன’’ என்றவர், பள்ளியின் உள்ளே நூற்றுக்கணக்கான மரங்கள் வளர்ந் திருக்கும் பசுமைக் காட்சியை காட்டினார்.

நுழைவாயில்
நுழைவாயில்

மாணவிகளிடம் பேசினோம். ‘`பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றியும், போக்சோ சட்டம் பற்றியும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சார் வந்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். எங்களோட பிரச்னைகளை ஆசிரியர்கள்கிட்ட தெரிவிக்க ‘மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டி எங்க பள்ளியில இருக்கு. அரசுப் பள்ளிகளுக்கு அரசு ஆன் லைன்ல நீட் கோச்சிங் கொடுக்குது. எங்க பள்ளியில, தனியார் மருத்துவமனை டாக்டர் ஸ்ரீதரனும் அவர் மனைவியும் உளவியல் ஆலோசகருமான சமந்தா ஸ்ரீதரனும் தன்னார்வலர்களா வந்து எங்களுக்கு நீட் கோச்சிங் கொடுக்கிறாங்க. இந்த வருஷம் எங்க பள்ளியில இருந்து 30 மாணவிகள் நீட் தேர்வு எழுதவிருக்கோம்’’ என்றனர் கண்கள் மின்ன!

வளர்க முன்மாதிரியாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism