Published:Updated:

டிஜிட்டல் பாடங்கள்: தனிமனித இடைவெளியுடன் மடிக்கணினிகளை ஒப்படைக்கும் மாணவர்கள்

மடிக்கணினிகளுடன் மாணவிகள்
மடிக்கணினிகளுடன் மாணவிகள்

கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாககவும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த அரசு முடிவு செய்து, அதற்கான விஷயங்கள் நடைமுறையில் இருக்கிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. என்றாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இன்னும் அதிக காலம் ஆகும். இப்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை என மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

அரசுப்பள்ளி
அரசுப்பள்ளி

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்

எனினும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாகவும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த அரசு முடிவு செய்து, அதற்கான விஷயங்கள் நடைமுறையில் இருக்கிறது. இன்று தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வுகளின் முடிவுகள் இன்று காலையே வெளியானது. இந்தத் தேர்வில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் மாணவிகள் 94.8 சதவிகிதமும் மாணவர்கள் 89.41 சதவிகிதமாகவும் இருக்கிறது. மொத்தமுள்ள 7,127 மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை என்பது 2,120 ஆக உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் இந்த முறை திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது.

கல்வி தொலைக்காட்சி: தினமும் 2.30 மணி நேரம்! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம்

டிஜிட்டல் பாடங்கள் பதிவேற்றம்

இதனிடையே நேற்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் இருந்து அவர்களின் மடிக்கணினிகள் பெறப்பட்டு, பின் அதில் பாடங்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. இந்த வருடம் ப்ளஸ் டூ படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியிலே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

மடிக்கணினிகளுடன் மாணவிகள்
மடிக்கணினிகளுடன் மாணவிகள்

கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் வீடியோ வடிமமும் இந்த மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் மாணவர்கள் தங்களின் மடிக்கணினி மூலமாகப் பாடங்களை படிக்கலாம். டிஜிட்டல் முறையில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, மாணவர்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. மடிக்கணினிகளை பெறும்போதே, புத்தகங்களையும் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் செய்யப்படுள்ளது. இதற்கான மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கும் வரும்போது தனிமனித விலகலை முறையாகப் பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி தொலைக்காட்சி: தினமும் 2.30 மணி நேரம்! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம்
அடுத்த கட்டுரைக்கு