மாணவர்களுக்குக் கல்வியுடன், சமூக அக்கறையையும் கற்றுக்கொடுக்கிறது ஓர் அரசுப் பள்ளி. விழுப்புரம் மாவட்டம், பள்ளிகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் சமீபத்திய பணி, ஒரு லட்சம் விதைப் பந்துகளைத் தயாரிப்பது.

இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கவுள்ள மாணவர்கள், பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளரவும் காரணமாக இருக்க உள்ளனர். விதைப் பந்துகள் தயாரிக்கும் பணிகள் குறித்துப் பேசுகிறார், மாணவர்கள் குழுவுடன் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படும் ஆசிரியர் தமிழரசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``எங்க பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்புடன் மரம் வளர்ப்பது, காடு வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறோம். ஆடிப் பெருக்கு தினமான 18-ம் தேதி, கிராமப்புறப் பகுதிகளில் விவசாய வேலைகளில் விதை விதைக்க உகந்த நாளாகச் சொல்வாங்க.
தற்போது மழைக்காலம் தொடங்கிடுச்சு. பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர் எல்லோர்கிட்டயும் விதைப் பந்துகளைக் கொடுத்து, அதைச் சாலையோரங்களில் வீசச் சொல்றோம்.ஆசிரியர் தமிழரசன்
அதனால, அந்த நாளில் இந்த ஆண்டுக்கான இயற்கை சார்ந்த பணிகளைத் தொடங்க முடிவெடுத்தோம். அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் முன்வந்தாங்க. பராமரிப்பில்லாத இடம் உட்பட எல்லா இடங்களிலும் விதைப் பந்துகள் மூலம் மரம் வளர்க்க முடியும். அதனால, விதைப் பந்துகளைத் தயாரிக்க முடிவெடுத்தோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தலா 10-12 மாணவர்கள் கொண்ட 10 குழுவை உருவாக்கினோம். ஆடி 17-ம் தேதி முன்னோட்டமாக, விதைப் பந்துகளைத் தயாரிச்சுப் பார்த்தோம். அன்னிக்கு இரண்டு மணிநேரத்துல ஐயாயிரம் விதைப் பந்துகளைத் தயாரிச்சோம். அந்த உற்சாகத்துல அடுத்த நாள் 18-ம் தேதி வேலைகளைத் தொடங்கினோம்.

வேப்பமரத்தை ஆடு, மாடுகள் மேயாது. வறட்சியைத் தாங்கி வளரும் அந்த மரங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எனவே, எங்க கிராமத்திலுள்ள விவசாயிகளிடம் வேப்பங்கொட்டை விதைகளை வாங்கினோம். பஞ்சாயத்து தலைவரின் ஒப்புதலுடன், எங்க ஊர் ஏரியில இருந்து செம்மண் மற்றும் களிமண் கலந்த ஒரு டிப்பர் மணலை எடுத்துகிட்டோம். மூணு பங்கு மணலுடன், ஒரு பங்கு எருவைச் சேர்த்து தண்ணீர் கலந்து பிசைஞ்சுகிட்டோம்.
கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு பணிகளை ஆரம்பிச்சோம். அதிகளவில் விதைப் பந்துகளைத் தயாரிக்கும் குழுவுக்குப் பரிசு வழங்கப்படும்னு சொல்லிட்டோம். ஒவ்வொரு விதைப் பந்திலும் 2 - 3 வேப்பங்கொட்டை விதைகளை வெச்சு மாணவர்கள் விதைப் பந்துகளைத் தயாரிச்சாங்க. மதியம் 1 மணிக்குள் 45 ஆயிரம் விதைப் பந்துகளை மாணவர்கள் தயாரிச்சாங்க.

அதைக் கொஞ்ச நேரம் வெயிலில் உலர்த்தி, அன்னிக்கு சாயந்திரமே மாணவர்கள்கிட்ட10 ஆயிரம் விதைப் பந்துகளைக் கொடுத்து பல்வேறு இடங்களிலும் வீசி ஏறியச் சொல்லிட்டோம்" என்கிறார், தமிழரசன். ஒரு லட்சம் விதைப் பந்துகளை தயாரித்துவிடும் இலக்குடன், இன்னும் விதைப் பந்து தயாரிப்புப் பணிகளை மாணவர்கள் மேற்கொள்கிறார்கள்.
``மொத்தம் ஒரு லட்சம் விதைப் பந்துகள் எங்க இலக்கு. இதுவரை 55 ஆயிரம் விதைப் பந்துகளைத் தயாரிச்சுட்டோம். தற்போது தினமும் பள்ளி முடிஞ்சதும், விதைப் பந்துகளை தயாரிக்க மாணவர்கள் ஒரு மணிநேரம் ஒதுக்கறாங்க. தற்போது மழைக்காலம் தொடங்கிடுச்சு. பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர் எல்லோர்கிட்டயும் விதைப் பந்துகளைக் கொடுத்து, அதைச் சாலையோரங்களில் வீசச் சொல்றோம்.
தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கிராமத்தினர் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க. ஆயிரம் விதைப் பந்துகளைச் சாலையோரங்களில் வீசினால், அதில் 30 சதவிகித செடிகளாவது வளரும். அதிலிருந்து 10 - 20 சதவிகிதம் மரமானாலே நல்ல விஷயம்தான்.
`மாணவர்களையும் மரங்களையும் சரியா வளர்த்துவிட்டால், இந்தச் சமூகம் தப்பித்துக்கொள்ளும்'னு சொல்வாங்க. படிப்பைத் தாண்டி மற்ற நேரங்களில் மாணவர்களின் கவனம் தவறான வழிகளில் சிதறாம இருக்க, ஆர்வமுள்ள மாணவர்களைத் தொடந்து சமூகப் பணிகளுக்குப் பயன்படுத்துறேன். மாணவர்களின் துணையுடன், எங்களால் இயன்ற பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துட்டுவர்றோம். அதில், `வீடு தோறும் மரம்'ங்கிற திட்டம் முக்கியமானது.

எங்க ஊர்ல பெரும்பாலானோரின் வீடுகளில் மரம் வளர்க்கிறாங்க. நாங்க நட்டு வைத்த மரங்களை, பொதுமக்கள் முறையா வளர்த்துட்டு வர்றாங்க. எங்களால முடிஞ்ச சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்வோம்" என்று உற்சாகமாகக் கூறுகிறார், தமிழரசன்.