Published:Updated:

பர்ஃபெக்‌ஷனும் வேண்டாம், பதற்றமும் வேண்டாம் அம்மாக்களே...!

ஆன்லைன் வகுப்பு
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் வகுப்பு

கற்க கசடற

பர்ஃபெக்‌ஷனும் வேண்டாம், பதற்றமும் வேண்டாம் அம்மாக்களே...!

கற்க கசடற

Published:Updated:
ஆன்லைன் வகுப்பு
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்புகளால் அம்மாக்களின் நிலைமை ரணகளமாகிக்கொண்டிருக்கிறது. `வீட்டு வேலைகளோட பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளையும் சேர்த்து கவனிக்க முடியல’ என்று ஹோம் மேக்கர் அம்மாக்களும், `ஆபீஸுக்குப் போறதா... இல்லை, ஆன்லைன் கிளாஸை பிள்ளை சரியா அட்டெண்ட் பண்ணுதான்னு கவனிக்கிறதா’ என்று வொர்க்கிங் அம்மாக்களும் சமூக வலைதளமெங்கும் பதிவுகளில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆன்லைனிலேயே பேரன்ட்ஸ் - டீச்சர்ஸ் மீட்டிங்கில் கலந்துகொண்ட அம்மாக்களின் பதிவுகள் நிஜமான பரிதாபங்கள். லாக்டெளன் நேரத்தில் படிப்பில் சுணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதவை. அதேநேரம் அம்மாக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு வேண்டுமே... அதனால், ஆன்லைன் வகுப்புகளால் தாங்கள் சந்திக்கிற பிரச்னைகளை இரண்டு அம்மாக்கள் பேச, அவற்றுக்குத் தீர்வு சொல்கிறார்கள் ஆசிரியரும் மனநல மருத்துவரும்...

பர்ஃபெக்‌ஷனும் வேண்டாம், பதற்றமும் வேண்டாம் அம்மாக்களே...!

‘‘பிள்ளைங்க ஆன்லைன் கிளாஸை சீரியஸா எடுத்துக்கிறதே இல்லை. பிள்ளைங்க கவனமெல்லாம் ஆன்லைன் வகுப்புல இருக்கிறதைவிட வீட்ல இருக்கிறவங்க என்ன பண்றாங்கன்னு கவனிக்கிறதுலதான் இருக்கு. நான் வேலைக்குப் போயிட்டா, பசங்க ஆன்லைன் கிளாஸை ஒழுங்கா அட்டெண்ட் பண்றாங்களான்னுகூட எனக்குத் தெரியாது ஸ்கூலுக்கு போயிட்டு வந்தா, பிள்ளைகளோட டைரியைப் பார்த்து இன்னிக்கு என்ன நடத்தினாங்கன்னு தெரிஞ்சிக்க முடியும். இப்போ அதுக்கும் வழியில்ல. அவங்க கூகுள் கிளாஸ் ரூமுக்குள்ள போய் செக் பண்ணாலும் டைரியைப் படிச்ச திருப்தி வரமாட்டேங்குது.

இதுக்கு நடுவுல பிள்ளைங்க லேப்டாப்பை ஏதாவது செஞ்சுட்டு `அம்மா மைக் வொர்க் ஆகல; கேமரா வொர்க் ஆகல’ன்னு போன் பண்ணுவாங்க. ஆபீஸ்ல கம்ப்யூட்டர்ல வேலைபார்த்தாலும், இதையெல்லாம் சரிபண்ற அளவுக்கு நான் டெக்கி கிடையாது. கூகுள்ல போயி தேடி அந்தப் பிரச்னையை சரிபண்றதுக்குள்ள கிளாஸ் முடிஞ்சிடும். படபடன்னு வரும். ஆபீஸ்ல இருக்கிற நேரத்துல ‘அம்மா நெட் டௌன் ஆயிடுச்சு. செல்போன் ஹேங் ஆயிடுச்சு’ன்னு பசங்க சொன்னா, `கம்ப்யூட்டரை ஷட் டௌன் பண்ணிட்டு ஏதாவது பாடத்தைப் படி’ன்னு சொல்லிடுவேன். இந்த வருஷம் பிள்ளைகளோட படிப்பை சரியா கவனிக்க முடியாதோன்னு பயமா இருக்கு’’ என்கிறார் அரசு ஊழியர் ஷோபனா நாராயணன்.

மாணவர்களாக வகுப்பில் இருப்பது வேறு. பிள்ளைகளாக வீட்டில் இருப்பது வேறு. இப்போதைக்குப் பிள்ளைகளால் முடிந்தளவு படிக்கட்டும். உங்களால் முடிந்தளவுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

குடும்பத்தலைவி சித்ரா பேசுகையில், ‘`ஆன்லைன் கிளாஸ்ல பாடத்தைக் கவனிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு நம்பி சமைச்சுக்கிட்டு இருப்பேன். ஆனா, காதுல ஹெட்செட் மாட்டிக்கிட்டு படம் வரைஞ்சுக்கிட்டு இருப்பான் 5வது படிக்கிற என் பையன். அவனுக்கு இளையவனை 40 நிமிஷம் ஆன்லைன் கிளாஸ்ல உட்கார வைக்க முடியாது. டீச்சர்ஸ் கண்ணு முன்னாடி இருக்கிறப்போ, பிள்ளைங்க சேட்டை பண்ணாம பாடத்தைக் கவனிப்பாங்க. அம்மாக்கள் சொல்றதைவிட டீச்சர்ஸ் பேச்சுக்கு பிள்ளைங்க கீழ்ப்படிவாங்க. டீச்சர்ஸ் வேலையை நான் செய்யறப்போ ‘நம்ம அம்மாதானே’ன்னு விளையாடுதுங்க. எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலை...’’ என்கிறார் வருத்தமாக.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளி ஆசிரியரான துர்கா தேவி இதற்குத் தீர்வு சொல்லும்போது, ‘`என்னதான் நாங்கள் ஆன்லைன் வகுப்பில் பாடங்களைச் சொல்லிக் கொடுத் தாலும், அம்மாக்கள் நீங்களும் ஆசிரியர் ரோல் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது ஆசிரியர்களுக்கும் தெரியும். அதனால்தான் எங்கள் பள்ளியில், ஆசிரியர்களும் பெற்றோர்களுடன் வாட்ஸ்அப்பில் இணைந்திருக்கிறோம். பாடம் தொடர்பாக அவர்களுக்கு வருகிற பிரச்னைகளை உடனுக்குடன் எங்களிடம் கேட்டுத் தீர்வு பெற்றுக்கொள்வார்கள். இந்த சப்போர்ட்டை உங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடங்களிலும் கேட்டுப் பெறுங்கள். இதுதான் முதல் தீர்வு.

 ஷோபனா நாராயணன்,   சித்ரா
ஷோபனா நாராயணன், சித்ரா

இரண்டாவது தீர்வு, உங்கள் பிள்ளைகளிடமே இருக்கிறது. வேலைக்குச் செல்லும் அம்மாக்கள், உங்கள் பிள்ளைகளிடம், இன்றைக்கு ஆன்லைன் கிளாஸில் என்ன நடத்தினார்கள் என்பதை ஒரு டைரிபோல எழுதி வைக்கச் சொல்லுங்கள். 5-ம் வகுப்பு பிள்ளைகளில் ஆரம்பித்து இந்த வழியைக் கடைப்பிடிக்கலாம். சின்ன பிள்ளைகள் என்றால், `இன்னிக்கு ஆன்லைன் கிளாஸ்ல என்ன நடந்துச்சு செல்லம்’ என்று தலையை வருடியபடி கொஞ்சிக்கொண்டே கேளுங்கள். இத்தனை வருடங்களாகப் பள்ளிக்கூடத்தில் நடந்ததை உங்களிடம் பகிர்ந்துகொண்டார்கள் இல்லையா... அதேபோல இப்போதும் செய்வார்கள். ரொம்பவே சின்ன குழந்தைகள் பற்றிக் கவலைப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். ஆசிரியராகவும் அம்மாவாகவும் என்னுடைய வழிகாட்டுதல் இதுதான்’’ என்கிறார்.

இந்தப் பிரச்னைகளின் அடி ஆழங்களைப் புரிந்து கொண்டவராக நம்மிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பூங்கொடி பாலா, ``இந்த நியூ நார்மலுக்கு முன்னர்வரை நாம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதோடு சரி. வகுப்பறைக்குள் அவர்கள் என்ன படிக்கிறார்கள்; எப்படிப் படிக்கிறார்கள் என்பதையெல்லாம் யோசித்ததில்லை. அங்கே அதை முழுக்க முழுக்க ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டார்கள். இதை ஆன்லைன் வகுப்புகளில் எதிர்பார்க்க முடியாது. இதுதான் எதார்த்தம். ஆசிரியர்களுடைய பங்களிப்பு குறைந்துபோனதும், அதைத் தாங்கள் ஈடுசெய்ய வேண்டுமே என்று அம்மாக்கள் பதறுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு காரணமே.

வேலைக்குப் போகாத அம்மாக்கள் இத்தனை காலம், பிள்ளைகள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வரும்போது வீட்டு வேலைகளை முடித்து வைத்துவிட்டு, ஃப்ரீயாக இருந்திருப்பார்கள். அதனால், பிள்ளைகளுடைய படிப்பில் நேரம் செலவழிக்க முடிந்திருக்கும். இப்போது, வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டே பிள்ளைகளையும் அவர்களுடைய ஆன்லைன் வகுப்புகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் முன்புபோல முழு கவனத்தையும் பிள்ளைகளின் கல்வியில் செலுத்த முடிவதில்லை. பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும்போது வேலைபார்க்கிற அம்மாக்கள் அலுவலகத்தில் இருப்பார்கள். ஒருவேளை வீட்டிலிருந்தபடியே வொர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்கள் என்றாலும் முழு கவனத்தையும் பிள்ளை மேல் செலுத்த முடியாது. இதுதான் எதார்த்தம். அதனால் லாக்டெளனுக்கு முன்னாடி இருந்ததைப்போல, உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்; நூற்றுக்கு நூறு வாங்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். கிடைக்கிற நேரங்களில் பிள்ளைகளைப் படிக்க வைப்பது மட்டும்தான் சரியான வழி. இல்லையேல் அவர்கள் படிப்புக்கென தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கலாம்.

 துர்கா தேவி,  பூங்கொடி பாலா
துர்கா தேவி, பூங்கொடி பாலா

ஆசிரியர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, மாணவர்களாக வகுப்பில் இருப்பது வேறு. பிள்ளைகளாக வீட்டில் இருப்பது வேறு. வீட்டில், கம்ப்யூட்டர் முன்னால் தொடர்ந்து 45 நிமிடங்கள் பிள்ளைகளால் உட்கார முடியாது. 10 பிள்ளைகள் பாடத்தை கவனித்தால், 10 பிள்ளைகள் அவர்களுடைய வீட்டுச் சூழ்நிலையைப் பொறுத்து எங்காவது வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆன்லைன் வகுப்பில் இது சகஜம் என்பதை ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

செல்போனில் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கும் குழந்தைகள், `எல்லாம் சின்னதா இருக்கு. கண்ணே தெரியல’ என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாது. அதையும் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சில நேரம் இணையதள பிரச்னைகளால் குழந்தைகள் வகுப்பைத் தவறவிட நேரிடும்.

இதுபோன்ற பிரச்னைகளைச் சமாளிக்க, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒரு வாட்ஸ்அப் குழுவை ஆரம்பிக்கலாம். இந்த வருடம் பிள்ளைகளால் முடிந்தளவு படிக்கட்டும். உங்களால் முடிந்தளவுக்குச் சொல்லிக்கொடுங்கள். பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்க்காதீர்கள் அம்மாக்களே. பதற்றமும் கொள்ளாதீர்கள்’’ என்று நம் மனபாரங்களை விரட்டியடிப்பதற்கான வழிகளைக் காட்டினார்.