Published:Updated:

CAT 2021: மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு... விண்ணப்பிப்பது எப்படி?

IIM, Indore
IIM, Indore

இந்தத் தேர்வுக்கு (CAT) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 50% மதிப்பெண்களுக்குக் குறைவின்றி, ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45% மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் உயர் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களான இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றிருக்கும் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு மற்றும் மேலாண்மை ஆய்வுப்படிப்புகள் போன்றவற்றில் சேர்க்கை பெறுவதற்கான பொதுச் சேர்க்கைத் தேர்வுக்கு (Common Admission Test – CAT 2021) விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
CAT 2021
CAT 2021

முதுநிலை மேலாண்மைப் பட்டப் படிப்பு

இந்தியாவிலிருக்கும் உயர் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில்,

  • அகமதாபாத் - PGP, PGP-FABM

  • அமிர்தசரஸ் - MBA, EMBA, MBA-Business Analytics, MBA-HRM

  • பெங்களூரு - PGP, PGPEM, PGPBA

  • புத்தகயா – PGP

  • கல்கத்தா - MBA

  • இந்தூர் - PGP, PGP-HRM

  • ஜம்மு - MBA

  • காசிப்பூர் - MBA, MBA (Analytics), EMBA

  • கோழிக்கோடு - PGP, PGP-BL, PGP-F, PGP-LSM, EPGP Kochi

  • லக்னோ - PGP, PGP-ABM, PGP-SM

  • நாக்பூர் – PGP

  • ராய்ப்பூர் - PGP

  • ராஞ்சி - PGP, PGP-HRM, PGP (Business Analytics)

  • ரோக்தக் - PGP, EPGPX, EPGDSM

  • சம்பல்பூர் MBA, Executive MBA

  • சில்லாங் - PGP, PGPEX, PGPWE

  • சிர்மவுர் - MBA, MBA (T&HM)

  • திருச்சிராப்பள்ளி - PGPM, PGPM-HR, PGPBM

  • உதய்பூர் - MBA, MBA-DEM, MBA-GSCM, PGDBAWE

  • விசாகப்பட்டினம் - PGP, PGPEX, PGPDGM

என்று 20 இடங்களில் இரண்டு வருட கால அளவிலான மேலாண்மை முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப்படிப்புகள் (Post Graduate Programmes in Management) இடம்பெற்றிருக்கின்றன.

மேலாண்மை ஆய்வுப் படிப்புகள்

இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, கல்கத்தா, ஜம்மு, காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர் ராஞ்சி, ரோக்தர், சம்பல்பூர், சில்லாங், சிர்மாவூர், உதய்பூர், விசாகப்பட்டின ஆகிய இடங்களில் Ph.D எனும் முனைவர் பட்ட ஆய்வுப்படிப்புகளும், புத்தகயா, ராய்ப்பூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலிருக்கும் பி.எச்டி படிப்பிற்கு இணையான FPM (Fellow Programmes in Management) எனும் மேலாண்மை ஆய்வுப்படிப்புகளும், ராய்ப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் E-FPM (Executive Fellow Programmes in Management) எனும் மேலாண்மை ஆய்வுப்படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

பிற கல்வி நிறுவனங்கள்

மேற்காணும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும், தங்களது மாணவர் சேர்க்கைக்கு இந்தப் பொதுச் சேர்க்கைத் தேர்வை அனுமதித்துத் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றன.

மேலாண்மைக் கல்வி
மேலாண்மைக் கல்வி

கல்வித்தகுதி

இந்தத் தேர்வுக்கு (Common Admission Test – CAT) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 50% மதிப்பெண்களுக்குக் குறைவின்றி, ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45% மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. பட்டப்படிப்பிற்கான மதிப்பெண்கள் புள்ளிக்கணக்கில் வழங்கப்பட்டிருந்தால் மேற்காணும் சதவிகிதத்துக்கு இணையான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பப் படிவம்

இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் IIMCAT-ன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.2200/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.1100/- என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15-9-2021.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்வு மையங்கள்

இந்த நுழைவுத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர் என்று 7 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 158 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தேர்வு எழுதுவதற்காக, 6 மையங்கள் வரை தேர்வு செய்து குறிப்பிடலாம். குறிப்பிடப்பட்ட மையங்களில் ஏதாவதொரு மையம் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மையங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில் அருகிலுள்ள வேறொரு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அனுமதிச் சீட்டு

விண்ணப்பித்த மாணவர்கள் இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை (Admit Card) 27-10-2021 மாலை 5.00 மணி முதல் 28-11-2021 வரை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பொது நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தேர்வு மையங்களிலும் 28-11-2021 அன்று நடைபெற இருக்கிறது.

தேர்வு முடிவுகள்

இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, இந்தத் தேர்வை அங்கீகரிக்கும் அனைத்து மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் 31-12-2022 வரை மாணவர் சேர்க்கையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
IIMCAT இணையதளம்
IIMCAT இணையதளம்

மாணவர் சேர்க்கை

இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (Indian Institutes of Management (IIMs)) முந்தைய கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், பொதுச் சேர்க்கைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் போன்ற சில அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு, எஸ்சி – 15%, எஸ்டி – 7.5%, ஓபிசி – 27%, ஈடபிள்யூஎஸ் – 10%, மாற்றுத் திறனாளிகள் (PwD) – 5% மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவினர் எனும் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும்.

கூடுதல் தகவல்கள்

பொதுச் சேர்க்கைத் தேர்வு (Common Admission Test – CAT) குறித்த மேலும் பல விவரங்களை அறிய IIMCAT-ன் இணையதளத்தைப் பார்க்கலாம். விண்ணப்பப் பதிவு, கட்டணம் செலுத்துதல் மற்றும் ஆவணங்கள் பதிவேற்றம் செய்தல் போன்றவற்றில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவி மேசை எண்ணான (Help Desk Number) 1-800-210-1088 எனும் கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலும், கல்வித்தகுதி, இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் என்பது போன்ற கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு +91-079-7152 4630 / 4631 / 4633 / 4634 எனும் எண்களிலும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான அலுவலக வேலை நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு