Published:Updated:

“உழைப்பைச் சுரண்டுகிறது அரசு...” - கொதிக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்!

கௌரவ விரிவுரையாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
கௌரவ விரிவுரையாளர்கள்

`கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்கிறோம்’ என்று 11 ஆண்டுக்கு முன்பே அமைச்சர் பொன்முடி வாக்குறுதி கொடுத்திருந்தார்.

“உழைப்பைச் சுரண்டுகிறது அரசு...” - கொதிக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்!

`கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்கிறோம்’ என்று 11 ஆண்டுக்கு முன்பே அமைச்சர் பொன்முடி வாக்குறுதி கொடுத்திருந்தார்.

Published:Updated:
கௌரவ விரிவுரையாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
கௌரவ விரிவுரையாளர்கள்

``காமராஜர் காலம் பள்ளிக்கல்வியின் பொற்காலம்... கலைஞரின் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம் என்பதைப்போல, எனது தலைமையிலான அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியின் பொற்கால மாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’’ என்று பல்கலைக்கழக விழாக்களில் பேசிவருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிற்றுவிக்கும் கௌரவ விரிவுரையாளர்களோ, `எங்களுக்கு உரிய மரியாதை இல்லை, எங்களின் உழைப்பைச் சுரண்டுகிறது இந்த அரசாங்கம்’ எனக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இது குறித்து, தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் சென்ன கிருஷ்ணன் நம்மிடம், “தமிழ்நாட்டில் 173 அரசு கலை - அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. அங்கு பணிபுரியும் விரிவுரையாளர்களில் 30 சதவிகிதம் பேர்கூட நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. சுமார் 8,000 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை நம்பியே கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆனால், பல ஆண்டுகளாகியும் பணி நிரந்தரமும் செய்யாமல், உழைப்புக்கேற்ற ஊதியமும் தராமல், எங்களைச் சக்கையாகப் பிழிகிறது அரசு.

“உழைப்பைச் சுரண்டுகிறது அரசு...” - கொதிக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்!

`கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்கிறோம்’ என்று 11 ஆண்டுக்கு முன்பே அமைச்சர் பொன்முடி வாக்குறுதி கொடுத்திருந்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகுகூட, `பழைய அரசாணையில் இருக்கிற சிக்கல்களைச் சரிசெய்துவிட்டு விரைவில் பணி நிரந்தரமாக்குவோம்’ என அமைச்சர் பொன்முடி பேட்டி கொடுத்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

அதுமட்டுமல்ல, கௌரவ விரிவுரையாளர்களிலேயே, பிஹெச்.டி முடித்து, பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேலாகப் பணி அனுபவம் உடையவர்களுக்கும் 20 ஆயிரம்தான் சம்பளம். புதிதாகப் பணியில் சேருபவர் களுக்கும் அதே 20 ஆயிரம்தான் சம்பளம். பலர் ரிட்டையர்டு ஆகிவிட்டார்கள், ஒரு சிலர் பணி நிரந்தரமாகாமலேயே மரணமடைந்தும்விட்டனர். ஆனால், இதே துறையில், எங்களைவிடக் கல்வித்தகுதி குறைவாக உள்ளவர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். எங்களுடைய திறமையையும் உழைப்பையும் சுரண்டிப் பிழைக்கிறார்கள். இதேநிலை நீடித்தால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றார் கோபமாக.

சென்ன கிருஷ்ணன்
சென்ன கிருஷ்ணன்

இந்த விவகாரம் குறித்து, உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயனிடம் பேசினோம். ``இவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழியாக பணிக்குச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்தந்தப் பகுதி கல்லூரி முதல்வர்களால் நியமிக்கப்பட்டவர்கள்தான். கடந்த பிப்ரவரியில்தான் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகச் சம்பளம் உயர்த்தப்பட்டது. அவர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு பரிசீலித்துவருகிறது. ஊதிய உயர்வு குறித்தும் அப்போது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றுமா அரசு?!