Published:Updated:

CBSE: வெயிட்டேஜ் முதல் விருப்பத்தேர்வு வரை; மாணவர்களின் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?

School Student (Representational Image) ( Nikhita S on Unsplash )

வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்குவது என்றால் என்ன, வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்பது குறித்து கல்வியாளர் சோமசுந்தரம் பகிரும் தகவல்கள்.

CBSE: வெயிட்டேஜ் முதல் விருப்பத்தேர்வு வரை; மாணவர்களின் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?

வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்குவது என்றால் என்ன, வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்பது குறித்து கல்வியாளர் சோமசுந்தரம் பகிரும் தகவல்கள்.

Published:Updated:
School Student (Representational Image) ( Nikhita S on Unsplash )

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாபெரும் பேரிடரை உலகம் சந்தித்து வருகிறது. உயிரைக் காத்துக்கொள்வதே போராட்டமாக உள்ள நிலையில் படிப்பெல்லாம் இரண்டாம்பட்சமாகிவிட்டது. கொரோனா, மாணவர்களின் கல்வியில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி, தேர்வுகள் வரை மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார்கள்.

+2 தேர்வு
+2 தேர்வு

கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பே ப்ளஸ் டூ பொதுத்தேர்வு நடந்து முடிந்துவிட்டது. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகைப்பதிவு, காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் அடுத்த ஆண்டுக்கான பிரிவுகள் ஒதுக்கப்பட்டன. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாகத்தான் பள்ளிகள் செயல்பட்டுவந்தன. மாணவர்கள் இந்தக் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வை எதிர்பார்த்து வந்த நிலையில், `கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, ப்ளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெயிட்டேஜ் முறையில் வழங்கப்படும்' என்றும் சிபிஎஸ்இ தேர்வாணையம் தகவல் வெளியிட்டது. வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்குவது என்றால் என்ன, வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்பது குறித்து கல்வியாளர் சோமசுந்தரம் பகிரும் தகவல்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிபிஎஸ்இ கல்வி முறையில் 12- ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2021-ம் ஆண்டுக்கு முன் இருந்த மதிப்பெண் கணக்கீட்டு முறை என்ன ?

சிபிஎஸ்இ கல்வி முறையில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் ஒரு மொழிப்பாடம், நான்கு பாடப்பிரிவுகள் என மொத்தம் ஐந்து பாடங்களின் கீழ் தேர்வு எழுதுவார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 500 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள். மொழிப்பாடம் தவிர்த்த மற்ற பாடங்களுக்கு செய்முறைத்தேர்வு நடைபெறும்.

தேர்வு
தேர்வு
Representational Image

சிபிஎஸ்இ கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு 2020 - 21 ம் கல்வி ஆண்டின், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்கள் எப்படி கணக்கிடப்பட உள்ளன?

கொரோனா பரவல் குறித்த பயத்தால் சிபிஎஸ்இ தேர்வாணையம் பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. மாணவர்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்குவதற்குப் பதிலாக, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விகிதாசார அடிப்படையில் கணக்கிட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பெண்களாக வழங்கப்பட உள்ளன. அதாவது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் 30 சதவிகிதம், 11-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 30 சதவிகிதமும் 12- ம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 40 சதவிகிதமும் எடுத்துக்கொள்ளப்பட்டு வெயிட்டேஜ் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்போது, எந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பில் மாணவர்கள் எந்த மூன்று பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளார்களோ, அந்தப் பாடங்களின் மதிப்பெண்தான் வெயிட்டேஜ் முறைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என சிபிஎஸ்இ தேர்வாணையம் அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்புக்கு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட யூனிட் தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சான்றிதழ்களில் மதிப்பெண் எப்படிக் குறிப்பிடப்படும்?

மதிப்பெண் சான்றிதழ் பற்றி சிபிஎஸ்இ தேர்வாணையம் எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமென தேர்வாணையம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் மாணவர்கள் எந்த மூன்று பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்களோ அதை வெயிட்டேஜ் முறைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மொழிப்பாடத்தில்கூட அதிக மதிப்பெண் எடுத்திருக்கலாம் என்பதால் அந்த மதிப்பெண்களைக் கொண்டு மதிப்பிடும்போது, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழில் விலங்கியல், உயிரியல் எனத் தனித் தனி பாடப்பரிவுகளின் கீழ் மதிப்பெண்கள் வழங்க இயலாது. மாணவர்களின் மொத்த மதிப்பெண்தான் குறிப்பிடப்பட்டு இருக்கும். அல்லது சதவிகிதமாகக்கூட மதிப்பெண் குறிப்பிடப்படலாம்.

Education (Representational Image)
Education (Representational Image)

வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதால் மாணவர்களுக்கு பாதிப்புகள் இருக்குமா?

வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களிடம் இருப்பதால் அந்த மதிப்பெண்ணில் மாற்றம் செய்ய இயலாது. ஆனால், பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களில் கூட்டிக் குறைத்துக் காட்டி சில பள்ளிகள் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே, வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்களைக் கணக்கிட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குழுவை அரசு அறிவிக்க வேண்டும். அந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருடன் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், மற்ற பள்ளி ஆசிரியர்களும் கல்வியாளர்களும் இடம் பெறுவது அவசியம்.

மேலும், வெயிட்டேஜ் முறையில் சில மாணவர்களுக்கு பாதிப்புகள் இருக்கலாம். ஆனால், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். விருப்பமுள்ளவர்கள், அவசியம் எனில் விருப்பத்தேர்வுகள் எழுதிக் கொள்ளலாம்.

school (Representational Image)
school (Representational Image)
AP Photo/Altaf Qadri

விருப்பத்தேர்வுகள் என்றால்?

சில மாணவர்கள் பத்தாம் வகுப்பு , பதினொன்றாம் வகுப்பில் சிறப்பாகப் படித்திருக்க மாட்டார்கள். ஆனால், பன்னிரண்டாம் வகுப்பில் நன்றாகப் படித்திருப்பார்கள். அவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் விருப்பமுள்ள மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்று சொல்லவில்லை. ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் தேர்வுகள் நடத்தினால் மட்டுமே மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்று உயர்கல்விக்குச் செல்ல முடியும். காலதாமதம் ஆகும்போது மாணவர்களுக்கு ஓர் ஆண்டு வீணாவதற்கும் வாய்ப்பு உண்டு.

எல்லா மாணவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். அதன் பின்தான் மாணவர்கள் விருப்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பார்கள். ஒரு வேளை வெயிட்டேஜ் மதிப்பெண்ணைவிட விருப்பத்தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும், அதிகரித்தாலும் விருப்பத்தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களே நிரந்தர மதிப்பெண்களாகக் கணக்கிடப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism