Published:Updated:

ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை... விண்ணப்பிப்பது எப்படி?

English and Foreign Languages University - EFLU
English and Foreign Languages University - EFLU

ஐதராபாத்திலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான விடுதி வசதி இல்லையெனினும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் விடுதி வசதி வழங்கப்படுகிறது. சில்லாங், லக்னோ வளாகங்களில் விடுதி வசதி இல்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் அமைந்திருக்கும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University - EFLU) இடம்பெற்றிருக்கும் இளநிலை, முதுநிலை, கல்வியியல் மற்றும் ஆய்வுப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பல்கலைக்கழகம்

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களால் 1958 ஆம் ஆண்டு, ஐதராபாத் நகரில் நடுவண் ஆங்கில நிறுவனம் (Central Institute of English) எனும் பெயரில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், 1972 ஆம் ஆண்டில் ஜெர்மன், ரசியன் மற்றும் பிரெஞ்ச் ஆகிய வெளிநாட்டு மொழிகளையும் சேர்த்துக் கொண்டு ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான நடுவண் நிறுவனம் (Central Institute of English and Foreign Languages - CIEFL) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தில் 1984 ஆம் ஆண்டு, கல்வி மற்றும் ஊடக ஆராய்ச்சி மையம் (Educational Media Research Center - EMMRC) நிறுவப்பட்டது. அதன் பிறகு இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டில், பல்கலைக்கழகமாகத் தகுதி உயர்த்தப்பட்டு, ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம் என்று மறு பெயரிடப்பட்டது.

ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்
ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்

வளாகங்கள்

ஐதராபாத்தில் அமைந்திருக்கும் இப்பல்கலைக்கழக வளாகத்தில் 26 துறைகளுடன் கூடிய 7 புலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1973 ஆம் ஆண்டில் சில்லாங் நகரிலும், 1979 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரிலும் இப்பல்கலைக்கழகத்தின் கூடுதல் வளாகங்கள் அமைக்கப்பட்டன.

பல்கலைக்கழக வளாகம்

இப்பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளாக (B.A (Hons) ) ஆங்கிலம் - 40, அரபி - 20, சீனம் - 20, பிரெஞ்ச் - 20, ஜெர்மன் - 20, ஜப்பான் - 20, கொரியன் - 20, பெர்சியன் - 20, ரசியன் - 20, ஸ்பானிஷ் – 20 இடங்கள் இருக்கின்றன. முதுநிலைப் பட்டப்படிப்புகளாக (MA) ஆங்கிலம் (சிற்றுண்டிச்சாலை) - 90, ஆங்கில இலக்கியம் - 20, ஆங்கிலத்தில் இலக்கியங்கள் - 20, ஒப்பீட்டு இலக்கியம் - 20, மொழியியல் - 20, ஆங்கில வழிக் கற்பித்தல் - 20, இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் - 20, இந்தி - 20, கணினி மொழியியல் - 20, அரபி மொழி மற்றும் இலக்கியம் - 20, பிரெஞ்ச் மொழி மற்றும் இலக்கியம் - 20, ஜெர்மன் மொழி மற்றும் இலக்கியம் - 20, ஜப்பான் மொழி மற்றும் இலக்கியம் - 20, ஸ்பானிஷ் மொழி மற்றும் இலக்கியம் - 20, ரசிய மொழி மற்றும் இலக்கியம் – 20 இடங்களும், கல்வியியல் படிப்புகளாக, ஆங்கில மொழியிலான B.Ed - 50 PGDTE - 40, அரபி மொழியிலான PGDTA – 20 இடங்கள் இருக்கின்றன. இவை தவிர, PGDT எனும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான பட்டயப்படிப்பு – 20 இடங்களும் இருக்கின்றன.

ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்
ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்

முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகளாக, மொழியியல் மற்றும் ஒலியியல் - 8, ஆங்கில மொழிக் கல்வி - 17, கல்வி - 1, இந்தி - 4, இந்திய மற்றும் உலக இலக்கியம் - 7, ஆங்கில இலக்கியம் - 8, ஒப்பீட்டு இலக்கியம் - 4, மொழி மாற்றம் கல்வி - 1, கலைநயம் மற்றும் மெய்யியல் - 2, திரைப்படம் மற்றும் காட்சிப் பண்பாடு - 3, பிரெஞ்ச் மொழி மற்றும் இலக்கியம் - 6, ரசிய மொழி மற்றும் இலக்கியம் - 4, ஜெர்மன் மொழி மற்றும் இலக்கியம் - 1, ஸ்பானிஷ் மொழி மற்றும் இலக்கியம் – 3 இடங்கள் என்றிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில்லாங் வளாகம்

சில்லாங் வளாகத்தில், இளநிலைப் பட்டப்படிப்புகளில் ஆங்கிலம் – 20, இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் – 20 என்று மொத்தம் 40 இடங்கள் இருக்கின்றன. முதுநிலைப் பட்டப்படிப்புகளில் ஆங்கிலம் (சிற்றுண்டிச்சாலை) – 30, ஆங்கில இலக்கியம் – 30, மொழியியல் – 20, இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் – 20 என்று மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. முனைவர் பட்ட ஆய்வுப்படிப்புகளில் மொழியியல் மற்றும் ஒலியியல் – 6, ஆங்கில மொழிக் கல்வி – 4 என்று மொத்தம் 10 இடங்கள் இருக்கின்றன.

லக்னோ வளாகம்

லக்னோ வளாகத்தில், இளநிலைப் பட்டப்படிப்புகளில் ஆங்கிலம் – 40 இடங்களும், முதுநிலைப் பட்டப்படிப்புகளில் ஆங்கிலம் (சிற்றுண்டிச்சாலை) – 40 மற்றும் மொழியியல் – 20 இடங்களும், கல்விப்படிப்பில் ஆங்கில மொழியிலான PGDTE – 20 இடங்களும், முனைவர் பட்ட ஆய்வுப்படிப்புகளில் மொழியியல் மற்றும் ஒலியியல் – 5 மற்றும் ஆங்கில இலக்கியம் – 5 இடங்களும் இருக்கின்றன.

English and Foreign Languages University - EFLU
English and Foreign Languages University - EFLU

கல்வித்தகுதி மற்றும் வயது

இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு 10+2 அல்லது அதற்கு இணையான தேர்வில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருப்பதுடன் பொதுப்பிரிவினர் – 50%, எஸ்சி/எஸ்டி பிரிவினர் – 45% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமல் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்புகள், கல்வியியல் படிப்புகள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகளுக்கான கல்வித்தகுதிக்கு இந்நிறுவனத்தின் தகவல் குறிப்பேட்டினைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பப் படிவம்

இக்கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இப்பல்கலைக்கழகத்தின் https://www.efluniversity.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.500/-, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் – ரூ.250/- என்று இணைய வழியில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திட வேண்டும். ஒருவர் இரு பிரிவுகளிலான படிப்புகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31-8-2021

நுழைவுத்தேர்வு

இப்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை உட்பட, இந்தியா முழுவதும் 25 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பத்தில் தேர்வு எழுத விரும்பும் மையத்தினைத் தேர்வு செய்து வரிசையாக 3 இடங்களைக் குறிப்பிட வேண்டும். முதலில் வருபவருக்கு முதல் வாய்ப்பு எனும் அடிப்படையில் கணினி அவர்களுக்கான தேர்வு மையத்தினை ஒதுக்கீடு செய்யும்.

ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்
ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்
இளநிலைப் பட்டப்படிப்புகள், முதுநிலைப் பட்டப்படிப்புகள், கல்வியியல் படிப்புகள், மொழிமாற்றப் பட்டயப்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 9-9-2021 ஆம் நாளிலும், ஆய்வுப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 18-9-2021 ஆம் நாளிலும் நுழைவுத்தேர்வு நடைபெறும்.

மாணவர் சேர்க்கை

மாணவர்களது கல்வித்தகுதி மதிப்பெண்கள், நுழைவுத்தேர்வு மதிப்பண்கள் ஆகியவற்றைக் கொண்டும், இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறையினைப் பின்பற்றியும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கல்விக் கட்டணம்

இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறும் மாணவர்களில், மூன்றாண்டுக் கால இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் முதல் பருவத்திற்குப் பொதுப்பிரிவினர் ரூ.3455/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.2625/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.1850/- என்றும், இரண்டு, நான்கு, ஆறாம் பருவங்களுக்குப் பொதுப்பிரிவினர் ரூ.1805/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.975/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.200/- என்றும், மூன்று மற்றும் ஐந்தாம் பருவங்களுக்குப் பொதுப்பிரிவினர் ரூ.2245/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.1415/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.640/- என்றும் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.

இரண்டாண்டுக் கால முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் முதல் பருவத்திற்குப் பொதுப்பிரிவினர் ரூ.3860/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.2790/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.1850/- என்றும், இரண்டு மற்றும் நான்காம் பருவங்களுக்குப் பொதுப்பிரிவினர் ரூ.2210/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.1140/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.200/- என்றும், மூன்றாம் பருவத்துக்குப் பொதுப்பிரிவினர் ரூ.2650/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.1580/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.640/- என்றும் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.

ஒரு வருட கால அளவிலான PGDTE/PGDTA/PGDT பட்டயப்படிப்புகளுக்கு முதல் பருவத்திற்குப் பொதுப்பிரிவினர் ரூ.4175/-, எஸ்சி,எஸ்டி பிரிவினர் – ரூ.2830/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.1850/- என்றும், இரண்டாம் பருவத்துக்குப் பொதுப்பிரிவினர் ரூ.2525/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.1180/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.200/- என்றும் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆங்கிலம்
ஆங்கிலம்

இரண்டாண்டுக் கால கல்வியியலிலான B.Ed பட்டப்படிப்பு மாணவர்கள் முதலாமாண்டிற்குப் பொதுப்பிரிவினர் ரூ.11100/-, எஸ்சி,எஸ்டி பிரிவினர் – ரூ.10030/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.1910/- என்றும், இரண்டாமாண்டிற்குப் பொதுப்பிரிவினர் - ரூ.9890/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.8820/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.700/- என்றும், கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.

முனைவர் பட்டப்படிப்பு ஆய்வு மாணவர்கள் முதல் பருவத்திற்குப் பொதுப்பிரிவினர் ரூ.6540/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.4925/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.3325/- என்றும், இரண்டாம் பருவத்திற்குப் பொதுப்பிரிவினர் ரூ.3355/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் – ரூ.1740/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.140/- என்றும், மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் பருவங்களுக்குப் பொதுப்பிரிவினர் ரூ.3815/-, எஸ்சி,எஸ்டி பிரிவினர் – ரூ.2200/-, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் – ரூ.1025/- என்றும் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.

NATA 2021: கட்டடக்கலைப் பட்டப்படிப்புச் சேர்க்கைக்கான தேசியக் கட்டடக்கலைத் திறனாய்வுத் தேர்வு!
ஐதராபாத்திலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து மாணவர்களுக்கு முழுமையான விடுதி வசதி இல்லையெனினும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் விடுதி வசதி வழங்கப்படுகிறது. சில்லாங், லக்னோ வளாகங்களில் விடுதி வசதி இல்லை.

கூடுதல் தகவல்கள்

இப்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய https://www.efluniversity.ac.in/ எனும் இணையதளத்தைப் பார்க்கலாம், அல்லது, “Information Centre, The English and Foreign Languages University, Tarnaka, Hyderabad - 500 007” எனும் முகவரிக்கு நேரில் சென்று தகவல்களைப் பெறலாம்; அல்லது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த வார வேலை நாள்களில் 040- 27689733/ 27689647 / 27689447 எனும் தொலைபேசி எண்ணில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலான அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு