Published:Updated:

How to: நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? I How to apply UGC NET online?

நுழைவுத் தேர்வு

`நெட் (NET - National Eligibility Test)' தேர்வுக்கு மே 20-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்தும் `நெட்' தேர்வு, உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதித் தேர்வு.

How to: நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? I How to apply UGC NET online?

`நெட் (NET - National Eligibility Test)' தேர்வுக்கு மே 20-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்தும் `நெட்' தேர்வு, உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதித் தேர்வு.

Published:Updated:
நுழைவுத் தேர்வு

`நெட் (NET - National Eligibility Test)' தேர்வுக்கு மே 20-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்தும் `நெட்' தேர்வு, இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதித் தேர்வு.

விண்ணப்பம் | Application Form
விண்ணப்பம் | Application Form

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வழக்கமாக, ஆண்டுதோறும் இருமுறை `நெட்' தேர்வு நடத்தப்படும். கொரோனா சூழலால் இந்த ஆண்டு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் தேர்வில் பங்குபெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், மே 20 வரை விண்ணப்பிக்க முடியும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எப்படி ஆன்லைன்னில் விண்ணப்பிப்பது என்பது பற்றிப் பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

NET தேர்வுக்கு ஆன்லைனில் அப்ளை செய்யும் வழிமுறைகள்

* NET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான அதிகாரபூர்வ இணையதளமாக அறிவிக்கப்பட்டுள்ள https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.

* இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் UGC NET 2021 மற்றும் 2022 தேர்வுக்கு அப்ளை செய்வதற்கான நோட்டிஃபிகேஷன் பகுதி காண்பிக்கப்படும். அதை க்ளிக் செய்து உள் செல்லவும்.

* தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் முதலில் நீங்கள் register செய்திருக்க வேண்டும். அதற்கு, திறக்கும் பக்கத்தில் கீழே New register என்ற பகுதி இருக்கும். அதை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்த பின் திறக்கும் பக்கத்தில் உங்களது தனிப்பட்ட விவரங்கள், முகவரி போன்ற தகவல்களைப் பூர்த்தி செய்யவும். கூடவே உங்களுக்கான password செட் செய்துகொள்ளவும்.

Online Application (Representational Image)
Online Application (Representational Image)
Photo by Anna Shvets from Pexels

* பின் உங்களுடைய password மற்றும் விண்ணப்ப எண்ணைக் கொண்டு அப்ளை செய்வதற்கான பக்கத்தில் login செய்யவும்.

* அதன் பின் திறக்கும் பக்கத்தில் UGC NET-க்கான விண்ணப்பப் படிவத்தின் மற்ற விவரங்கள் அனைத்தையும் நிரப்பவும். தொடர்ந்து ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை அப்லோடு செய்யவும்.

* அடுத்ததாக, கட்டணம் செலுத்திய பின் உங்களுடைய விண்ணப்பத்தை சரிபார்த்து, ஆன்லைனில் படிவத்தை சரிபார்த்த பின் சப்மிட் கொடுக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கட்டணங்கள்

பொதுப் பிரிவை சேர்ந்தவர்களுக்கு - ரூ.1,100
பொது - EWS, OBC - NCL - ரூ.500
SC, ST மற்றும் PWD பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு - ரூ.275

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism