Published:Updated:

`தேசிய நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சிபெறுவது எப்படி?’ - கல்வியாளர் ராஜராஜனுடன் ’விகடன் வெபினாரி’ல் உரையாடலாம்!

ராஜராஜன்
ராஜராஜன்

பள்ளித் தேர்வு முறைக்கும் நுழைவுத் தேர்வு முறைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

வழக்கமாக இது கல்லூரி திறக்கும் காலம். கொரோனா காரணமாக கல்விச்சூழலே குழப்பமாகிவிட்டது. என்ன படிப்பது, எந்தக் கல்லூரியில் சேர்வது என மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பல கேள்விகள். கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் சூழலில், இந்தக் கேள்விகளுக்குப் பதில்தந்து குழப்பம் போக்கும் வகையில், ஆனந்த விகடன் 'மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ' ஒன்றை நடத்துகிறது.

விகடன் கல்வி எகஸ்போ
விகடன் கல்வி எகஸ்போ

அதையொட்டி மே 9 மற்றும் 10-ம் தேதிகளில், பிரபல கல்வியாளர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பங்கேற்கும் கல்வி எக்ஸ்போ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெபினாரில் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்று கல்வியாளர்களோடு உரையாடலாம். மே 10-ம் தேதி இரண்டாவது நாளில், கல்வியாளர் டாக்டர் ஆர்.ராஜராஜன் 'வாய்ப்புகளை அள்ளித்தரும் நுழைவுத் தேர்வுகள்’ என்ற தலைப்பில் உரையாடவிருக்கிறார்.

``பள்ளித் தேர்வு முறைக்கும் நுழைவுத் தேர்வு முறைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் அணுகுவது எப்படி? நுழைவுத் தேர்வுகளில் உள்ள பாடப் பிரிவுகள் என்னென்ன? நுழைவுத்தேர்வு இல்லாத பாடப் பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? இன்னும் எந்தெந்த படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது?

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

அந்தத் தேர்வுகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? என எல்லா விஷயங்களும் வெபினாரில் பேசவிருக்கிறேன். மாணவர்களோடு உரையாட ஆர்வமாக இருக்கிறேன்" என்கிறார் ராஜராஜன். ராஜராஜன், 'ஸ்டூடன்ட்ஸ் விஷன் அகாடமி' கல்விப் பயிற்சி மையத்தின் இயக்குநராக உள்ளார். 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான கல்வி சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நுழைவுத் தேர்வுகள், குடிமைப்பணி தேர்வு தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார். வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான அகராதிகளையும் வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகளாக உயர்கல்வி குறித்து மாணவர்களை வழிநடத்திவரும் டாக்டர் ராஜராஜனுடன் நீங்களும் உரையாடலாம். தயாராகுங்கள் மாணவர்களே! இந்த நிகழ்ச்சியில் உங்கள் பங்கேற்பை உறுதி செய்ய இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு