Published:Updated:

ஐஐடி மெட்ராஸ்: அதிக அளவு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள்; அதிகபட்ச ஆண்டு சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

ஐஐடி மெட்ராஸ்

மேலும் 2018 - 19-ம் ஆண்டு கல்வியாண்டில் பதிவு செய்யப்பட்ட 1,151 மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளைவிட, இந்த ஆண்டின் வேலைவாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐஐடி மெட்ராஸ்: அதிக அளவு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள்; அதிகபட்ச ஆண்டு சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

மேலும் 2018 - 19-ம் ஆண்டு கல்வியாண்டில் பதிவு செய்யப்பட்ட 1,151 மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளைவிட, இந்த ஆண்டின் வேலைவாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Published:Updated:
ஐஐடி மெட்ராஸ்

இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய தொழில்நுட்ப கழகம் - சென்னையில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வேலைக்குத் தேர்வாகியுள்ளனர்.

Office Job (Representational Image)
Office Job (Representational Image)

அதாவது 2021 - 22-ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வில் சுமார் 380 நிறுவனங்களில் இருந்து 1,199 வேலை வாய்ப்புகள் பெறப்பட்டன. கூடுதலாக 231 வேலை வாய்ப்புகள் மாணவர்களின் கோடைக்கால இன்டெர்ன்ஷிப் மூலம் பெறப்பட்டுள்ளன. இது மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெற்ற வேலைவாய்ப்பு எண்ணிக்கையை 1,430 ஆக உயர்த்தியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் 2018 - 19-ம் ஆண்டு கல்வியாண்டில் பதிவு செய்யப்பட்ட 1,151 மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளைவிட இந்த ஆண்டின் வேலைவாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப் படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவுக்கு 14 நிறுவனங்களில் இருந்து 45 சர்வதேச வேலைவாய்ப்புகள் வந்துள்ளன. மேலும் 131 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 199 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளனர். கேம்பஸ் இன்டர்வியூவுக்கு பதிவு செய்யப்பட்ட 80 சதவிகித மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது.

IIT Madras
IIT Madras

வேலைகள் அதிக அளவில் கிடைத்தது ஒருபுறம் என்றால், அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்துள்ளது. அதாவது, மாணவர்களின் சராசரி ஆண்டு சம்பளம் 21.48 லட்சம், அதிகபட்சமாக 1.98 கோடி என்று ஐஐடி மெட்ராஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

`2021 - 22 வேலைவாய்ப்புகளில் எங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது அதிக வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்தது' என ஐஐடி மெட்ரோஸின் பேராசிரியரான சி.எஸ்.ஷங்கர் ராம் கூறியுள்ளார்.