Published:Updated:

ப்ளஸ் டூ முடித்தவரா நீங்கள்... இதை மிஸ் பண்ணிடாதீங்க! #CareerGuidance

ONE on ONE ஆலோசனை!
ONE on ONE ஆலோசனை!

கல்லூரி சேர்க்கைக்காகக் காத்திருக்கும் உங்களுக்கான எதிர்காலக் கனவை நிறைவேற்ற உங்களுக்கான ஆலோசனைகளை வீட்டிலிருந்தபடியே நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு விகடனால் உங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கு.

ஹாய் ஸ்டூடன்ட்ஸ்...

லாக்டெளன் காலத்தில் வீட்டில் பத்திரமா இருந்தபடியே உங்களுக்கான எதிர்கால கனவுப் படிப்பை, கல்லூரியைத் தேர்வுசெய்ய விகடனோடு இணையுங்கள்.

இந்த இக்கட்டான சூழலிலும் ப்ளஸ் டூ தேர்வை நல்லபடியாக எழுதி முடித்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  ப்ளஸ் டூ முடித்ததும் எதிர்காலப் படிப்பு, கல்லூரி வாழ்க்கை பற்றி சிந்தனைகள் விரியத் தொடங்கும். கனவுகளுக்கான முதற்படியில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்குச் சில கேள்விகள் தோன்றும். `என்ன படிக்கலாம்', `எந்தக் கல்லூரியில் படிக்கலாம்', `எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?’ பல கல்லூரிகளுக்கு நேரில் சென்று விசாரிப்பது... கருத்தரங்குகளுக்குச் சென்று ஆலோசனை பெறுவது எனப் பல வழிகளில் எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் நிகழும் காலம் இது.

#CareerGuidance
#CareerGuidance

இந்த லாக்டெளன் காலத்தில் உங்களால் நேரடியாகக் கல்வி மையங்களை அணுக முடியாது. ஆனால், கல்லூரி சேர்க்கைக்காக காத்திருக்கும் உங்களுக்கான எதிர்காலக் கனவை நிறைவேற்ற உங்களுக்கான ஆலோசனைகளை வீட்டிலிருந்தபடியே நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு விகடனால் உங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான படிப்பு எது, எதிர்காலமுள்ள படிப்பு எது, சிறந்த அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வது எப்படி? இப்படி உங்களின் பல்வேறுவிதமான குழப்பங்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வியாளர்களிடம் ஆலோசனை பெறலாம்.

கீழ்க்கண்ட கல்வியாளர்களிடம் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆன்லைன் மூலம் கலந்துரையாடி மேற்படிப்பு சம்பந்தமான  ஆலோசனைகளைப் பெற, இந்த லிங்கை கிளிக் செய்யவும்

https://bit.ly/2TE0PkK

டாக்டர். ஆர்.ராஜராஜன்
கல்வியாளர்:
டாக்டர். ஆர் .ராஜராஜன்  கல்வியாளர்
டாக்டர். ஆர் .ராஜராஜன் கல்வியாளர்

டாக்டர் ராஜராஜன் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்குக் கல்வி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான கல்வி சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான கேரியர் கைடன்ஸ் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். நுழைவுத் தேர்வுகள், குடிமைப்பணி தேர்வு தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார். வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான அகராதிகளையும் வெளியிட்டுள்ளார்.

டாக்டர். எஸ்.சோமசுந்தரம்
கல்வியாளர்
டாக்டர். எஸ். சோமசுந்தரம்
டாக்டர். எஸ். சோமசுந்தரம்

தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் இயக்குநராக இருந்தவர். தற்போது முழுநேரமாக மாணவர்களுக்கு கேரியர் கைடன்ஸ் வழங்கி வருகிறார். 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்குக் கல்வி ஆலோசனைகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பொறியியல் படிப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

டாக்டர் `ஹெலிக்ஸ்’ ஜி.செந்தில் குமார்
கல்வியாளர்
ஹெலிக்ஸ் செந்தில் குமார்
ஹெலிக்ஸ் செந்தில் குமார்

கற்றல் குறைபாடு, கவனமின்மை, வேகமின்மை போன்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்காகச் சிறப்பு ஆலோசகர். மாணவர்களுக்கான கேரியர் கைடன்ஸ் நிபுணர். இந்தப் பணிக்காகப் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர். உளவியல்பூர்வமாக மாணவர்களின் திறனறிந்து வழிகாட்டக்கூடியவர்.

அடுத்த கட்டுரைக்கு