Election bannerElection banner
Published:Updated:

பாரத் பல்கலைக்கழகத்தில் Annual Innovation Day நிகழ்வு நடத்தப்பட்டது!

Annual Innovation Day
Annual Innovation Day

நிறுவனத் தலைவர் சந்தீப் ஆனந்த், சிறப்பு விருந்தினர் சசிந்திரன் முத்துவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அளித்தார்.

Bharath Institute of Higher Education and Research (BIHER) பல்கலைக்கழகத்தில் ஆறாவது Annual Innovation Day கடந்த ஏப்ரல் 1, 2021 அன்று நடத்தப்பட்டது. நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்டுபிடிப்பு நாள் (Innovation day) நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடங்கி வைத்த நிறுவனத் தலைவர் சந்தீப் ஆனந்த், வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 100 ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு நிதியளிக்கும் வகையில், நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவான 'Centre for Innovation and Incubation'-க்கு பத்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.

Annual Innovation Day
Annual Innovation Day

நிறுவனத் தலைவர் சந்தீப் ஆனந்த் முன்னிலையில், பப்புவா நியூ கினியா அமைச்சர் சசிந்ரன் முத்துவேல் விழாவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். மேலும் துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஹரி பிரகாஷ், துணைப் பதிவாளர், விழாவின் தொடக்க உரையை நிகழ்த்தினார். அவரது உரையில் BIHER நிறுவனத்தின் சாதனைகள், கண்டுபிடிப்பு நாளின் முக்கியத்துவம் மற்றும் BIHER நிறுவனத்தின் Innovation and Incubation centre-ன் நடவடிக்கைகளைக் குறித்துப் பதிவு செய்தார்.

கே.விஜய் பாஸ்கள் ராஜு, துணை அதிபர், பல்கலைக்கழக்கத்தின் வருடாந்திர கல்வி அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பல்கலைக்கழகம் பெற்ற விருதுகள் ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினார். பின்னர் சிறப்பி விருந்தினரான சசிந்திரன் முத்துவேலை அறிமுகம் செய்து வைத்த அவர், சிறப்பு விருந்தினருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதையும் மேற்கோள் காட்டினார்.

அடுத்ததாக பல்கலைக்கழகத்தின் சார்பு அதிபர் சுந்தரராஜன் உரையாற்றினார். H Index கொண்ட தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டியலில் BIHER இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும், 27,753 வெளியீடுகள், 53,000 மேற்கோள்கள் மற்றும் 476 காப்புரிமைகளுடன் இந்தியாவில் 7-வது இடத்தில் இருப்பதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Annual Innovation Day
Annual Innovation Day

பின்னர் டாக்டர். பூமிநாதன் விருது பெறுபவர்களின் பட்டியலை வாசித்தார். ஏரோநாட்டிக்கல் பிரிவைச் சேர்ந்த பி.முத்துமணி, Design of Anti-Drone system-க்காக விருது பெற்றார். பயோமெடிக்கல் பிரிவைச் சேர்ந்த கே.சாய்ரஷ்வந்த், Smart Health Monitor-க்காக Innovation of the year 2020 விருது பெற்றார். 2020-ன் சிறந்த ஸ்டார்ட் அப்பிற்கான விருது Jazzlike Technology-க்காக சாய் தேஜாவிற்கும், Aries Solution Private Limited-க்காக பட்டுலா சரண் குமாருக்கும் வழங்கப்பட்டது.

"ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது. ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த நாட்டின் கல்விச் சூழலை முதலில் அழிக்க வேண்டும். அந்தளவு கல்வி இன்றியமையாதது" என்று தெரிவித்த சசிந்திரன் முத்துவேல், அங்கு கூடியிருந்த தொழில்முனைவோர்களை வரவேற்று, பப்புவா நியூ கினியாவில் அவர்களை தொழிற்சாலைகள் அமைக்க அழைப்பு விடுத்தார். பப்புவா நியூ கினியாவில் இயற்கை வளம் நிறைய இருக்கிறது எனத் தெரிவித்த அவர், நிறுவனத் தலைவர் சந்தீப் ஆனந்த மற்றும் அவரது குழுவினரை பப்புவா நியூ கினியாவைக் பார்வையிட அழைப்பு விடுத்தார்.

Annual Innovation Day
Annual Innovation Day

பின்னர் நிறுவனத் தலைவர் சந்தீப் ஆனந்த், சிறப்பு விருந்தினர் சசிந்திரன் முத்துவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அளித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிந்திரன் முத்துவேல், நாட்டின் மூன்றாவது சிறந்த நூலகமான State-of-the-Art நூலகத்தைத் திறந்து வைத்தார். இந்த நூலகமானது 2 லட்சத்திற்கும் அதிகமான நூல்களைக் கொண்டுள்ளது. 650 மாணவர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க முடியும். மேலும், இந்த நூலகம் அனைத்து மின்-பத்திரிகைகள் மற்றும் மின் புத்தகங்களையும் கொண்டுள்ளது. BIHER வளாகத்தில் உள்ள Bharath Medical College and Hospital-ன் ஐசியு பிரிவையும் சிறப்பு விருந்தினர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வு Bharath Medical College and Hospital-ன் இயக்குநர் டாக்டர். எழுமலையின் நன்றியுரையுடன் முடிவுக்கு வந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு