Published:Updated:

`சொத்தைக் கத்திரிக்காயைக் கண்டறிவது எப்படி?’ -வேலூர் ஆட்சியர் அலுவலக நேர்காணலில் திணறிய ஆண்கள்

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

ஆதிதிராவிடர் பள்ளிகளில், சமையலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம், `சாம்பார் வைப்பது எப்படி’ போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மொத்தம் 65 பள்ளிகள் மற்றும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சமையலர், துப்புரவுப் பணியாளர் என 112 பணியிடங்கள் காலியாக இருந்தன.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 1,381 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 5-வது மாடியில் நேற்று நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

`மாலை 3.30 மணிக்குத்தான் சத்துணவு சாப்பாடு!' - டீசலுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கும் புதுவை அரசு

முதற்கட்டமாக ஆண், பெண் எனச் சரிசமமாக 402 பேர் அழைக்கப்பட்டனர். தேர்வுக்கு வந்தவர்களிடம் 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

சாம்பார் வைப்பது எப்படி, சொத்தைக் கத்திரிக்காயை எவ்வாறு கண்டறிவது, நல்ல தக்காளியை எப்படித் தேர்வுசெய்வது உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. பெண்கள் பலர் எளிதாகப் பதிலளிக்க, ஆண்கள் சிலர் தடுமாறினர்.

அதேபோல், துப்புரவுப் பணி தேர்வுக்கு வந்தவர்களில், தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க `தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரியுமா?’ எனக் கேட்கப்பட்டது. இந்தத் தேர்வில் 200 பேர் பங்கேற்கவில்லை.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

மற்றவர்கள், இரண்டாம் கட்டமாக இன்றும் நடைபெற்றுவரும் நேர்காணலில் கலந்துகொண்டுள்ளனர். `பள்ளிகளில் தரமான சத்துணவு கிடைப்பதில்லை’ என்கிற குற்றச்சாட்டு பரவலாகச் சொல்லப்படுவதால், தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

பின் செல்ல