பேராசிரியர் டாக்டர் ஜவகர் நேசன், தமிழகத்தைச் சேர்ந்த கல்வி ஆய்வாளர். மைசூர் ஜே.எஸ்.எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். புதிய தேசிய கல்விக்கொள்கையை முற்றிலுமாக நிராகரித்து, ‘In search of education’ என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை நிராகரிக்கிறீர்கள். அதில் நல்ல விஷயங்களே இல்லையா?”

“உள்ளன. ஆனால், இந்துத்துவத் தத்துவத்தின் அடிப்படையில் அது உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் அனைத்து அம்சங்களும் அந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் இருக்கின்றன. உதாரணமாக, தாராளமயக் கல்வி பற்றி அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. ஆனால், இவர்கள் கற்றுத்தர திட்டமிட்டிருப்பது பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள் என மத அடையாளம் சார்ந்தவை. அதனால்தான் தேசிய கல்விக்கொள்கையை நிராகரிக்கிறேன்.”

“சரி, இதற்கு மாற்றாக எதை முன்வைக்கிறீர்கள்?”

“சமூகவாதக் கல்வியே இதற்கு மாற்று. கல்வி என்பது, சமூகத்துக்காக... சமூகம் சார்ந்து இருக்க வேண்டும். ஆனால், இங்கே வேலைக்காகத்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இது தவறு. தேசியக் கல்வி என்பது முதலாளிகளுக்கானது; அந்நியச் சந்தையை இந்தியாவில் நுழைப்பதற்கான முயற்சி. எந்த நாட்டிலுமே தேசம் முழுமைக்கும் ஒரே கல்விமுறை இல்லை. ரஷ்யா போன்ற நாடுகளில் ஒவ்வோர் இனக்குழுவுக்குமான கல்விமுறை இருக்கிறது.”

“நவீன கல்விமுறைக்கு மாற்றாக மண்சார்ந்த அறிவை கல்வியாக்க வேண்டும் என்கிறீர்கள். விஞ்ஞான யுகத்தில் நமக்கு இது பின்னடைவை ஏற்படுத்தாதா?”

“ஏற்படுத்தும்தான். ஆனால், ஒருபக்கம் மண்சார்ந்த அறிவை வளர்த்தெடுப்பதன் வழியாகவும், மறுபக்கம் உலகளாவிய அறிவை மண்ணுக்கு ஏற்றதுபோல் கட்டமைத்துக் கொள்வதன் வழியாகவும் இதை சரிசெய்ய முடியும். மஞ்சளில் மருத்துவ குணம் இருக்கிறது என்பது, நம் மண்சார்ந்த அறிவு. ஆனால், அதை நாம் கல்வியாக அணுகவில்லை. விளைவு, அமெரிக்க விஞ்ஞானிகள் மஞ்சளின் மருத்துவ குணம் புற்றுநோய்க்கு மருந்து என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறி கண்டுபிடிப்பை உரிமையாக்கிக்கொண்டார்கள். மண்சார்ந்த அறிவும் அறிவியலாக அணுகப்பட வேண்டும்.”

“இந்தியாவில் கல்விக்கான போதாமை எந்த அளவுக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?”

“நாம் பெறும் கல்வி, தவறான கல்வியே. போதாமை எனச் சொல்வதைவிட தொடர்பற்றதாக இருக்கிறது என்பதே பொருத்தமானது.”

“திராவிட கட்சிகளால் தமிழகம் கல்வியில் முன்னேறியது என்ற பார்வை சரியா?”

“பாதி உண்மை அது. தமிழ்நாடு மற்றும் கேரளத்தைச் சேர்ந்த அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்கள்தான் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவில் முன்னிலையில் இருப்பதாக சர்வதேச ஆய்வுகள் சொல்கின்றன. தவிர, தனியார் பள்ளிகள்தான் சிறந்தவை என்ற மனப்பான்மையை மாற்றியவை இந்த இரண்டு மாநிலங்கள்தான். ஆனால், இவை தருவது முழுமையான கல்வியா என்பதும் பெரிய அளவில் விவாதிக்கப்பட வேண்டும்.”

“ஜே.என்.யூ போன்ற அரசு உயர்கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் அதிகரித்து வருகிறதே?”

“கல்வி நிறுவனங்களை கார்ப்பரேட் மயமாக்குவதற்காக அமெரிக்காவில் இதுபோன்ற உயர்கல்விக் கட்டண உயர்வு கொண்டுவரப் பட்டது. அதனால் அங்கு மாணவர்கள் பாதிக்கப் படவில்லை. அரசே அவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தியது. பல ஐரோப்பிய நாடுகளிலும் கல்விக் கட்டணத்தை அரசுகளே செலுத்துகின்றன. கியூபா, பூடானில் முனைவர் ஆய்வு வரை கல்வி இலவசம். இங்கு மட்டும்தான் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் அரசே கட்டணம் வசூலிக்கிறது.”

“அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வி நிறுவனங்களுக்கான சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து பேச்சு அடிபடுகிறதே?”

“சிறப்பு அந்தஸ்துக்கு, தேசிய தரவரிசைக் கழகத்தின் ஆய்வின்படி முதல் ஐம்பது இடங்களுக் குள் வர வேண்டும். ஆனால், தரவரிசைப் பட்டியலுக்குத் தரப்படும் தரவுகள் எதுவும் அரசால் சரிபார்க்கப்படுவதில்லை. அடுத்ததாக, ‘நாக்’ கமிட்டியின் அங்கீகாரம் பெற்று, A - கிரேடு பெற்றிருக்க வேண்டும். உலக அளவில் ‘டைம்ஸ்’ உயர்கல்விக் கழகங்கள் பட்டியலில் டாப் 500-க்குள் இடம் பெற்றிருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தால் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும். இப்படி சிறப்பு அந்தஸ்து பெறும் பல்கலைக்கழகங்கள், நாட்டில் எங்கு வேண்டுமானா லும் தங்களது கிளையைத் தொடங்கலாம். இது, ஏற்கெனவே நல்லமுறையில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங் களின் பெயரைக் கெடுப்பதாகவே அமையும்.”

“உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணங்கள் குறித்து..?

“மாணவர்களும் ஆசிரியர் களும் சமதளத்தில் இருந்து கல்வியைக் கையாள வேண்டும். ஆசிரியர் அறிவு ஊற்றாகவும் மாணவர் பூஜ்ஜியமாகவும் இங்கே உருவகப்படுத்தப்படுகிறார் கள். தவிர, மாணவர்களுக்கு கல்வியைக் கற்பிப்பது மட்டுமே ஆசிரியர் வேலை. ஆனால், இங்கே அவர்கள் போலீஸாக மாறிவிடுகிறார் கள். உயர்கல்வி நிறுவனங் களில் தொடரும் தூண்டப் பட்ட மரணங்களுக்குக் காரணமே இதுதான்!”