Published:Updated:

1,330 திருக்குறள்கள், 1,330 QR கோடுகள்... திருக்குறளுக்கு டெக்னாலஜி `டச்' கொடுக்கும் ஆசிரியர்!

திருக்குறள் க்யூ.ஆர் கோடு
திருக்குறள் க்யூ.ஆர் கோடு

தொடர்ச்சியாக டெக்னாலஜி மூலம் புதுமையாகக் கற்பிக்கும் மனோகருக்கு, 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆசிரியர் விருது கிடைத்தது. தற்போது, அடுத்த முயற்சியாக 1,330 திருக்குறள்களையும் QR code வடிவில் மாற்றியமைத்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1,300 திருக்குறள்களையும் ஆன்ட்ராய்டு மொபைல்கள் மூலம் எளிதாக மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், QR கோடுகள் மூலம் திருக்குறள்களை ஸ்கேன் செய்யும் வகையில், கரூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் எடுத்து வரும் முயற்சி, கல்வி ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
திருக்குறள் க்யூ.ஆர் கோடு
திருக்குறள் க்யூ.ஆர் கோடு
திருச்சி உலா: ஒரே பாறையில் அமைந்த கோட்டை; மதநல்லினக்க தலங்கள்... நாமக்கல் கோட்டையின் கம்பீர வரலாறு!

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்தக் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் மனோகர். இவர் டெக்னாலஜியை பயன்படுத்தி மாணவர்களுக்கு புதுமையாகவும், எளிமையாகம் பாடம் நடத்த பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி வருகிறார். பாடங்களை வீடியோ வடிவமாக்கி, அதை ஸ்மார்ட்க்ளாஸ் ரூம் மூலம் ஒளிப்பரப்பி மாணவர்களுக்கு பாடம் நடத்திவருகிறார்.

அதோடு, மாணவர்களுக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டையைத் தயார் செய்து வழங்கியிருக்கிறார். அதன்மூலம், வீட்டுப் பாடம் உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு வழங்கிவருகிறார். இது, மாணவர்கள் மற்றும் அவர்களின் பொற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

QR கோடு அடையாள அட்டை
QR கோடு அடையாள அட்டை

மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்த பலகட்ட பயிற்சிகளைப் பெற்று, பல தனித்துவமான கல்வி கற்றல், கற்பித்தல் வழிமுறைகளை வகுத்து, அதைக்கொண்டு மாணவர்களுக்குப் பாடங்களை நடத்திவருகிறார். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு விளையாட்டு முறையிலான மென்பொருள்களை QR கோடுடன் இணைத்து, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை புதுமையான முறையில் தொடர்ந்து கற்றல், கற்பித்தலில் ஈடுபடுத்திவருகிறார். இப்படித் தொடர்ச்சியாக டெக்னாலஜி மூலம் புதுமையாகக் கற்பிக்கும் முறையைச் செய்துவரும் மனோகருக்கு, 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆசிரியர் விருது கிடைத்தது. தற்போது, அடுத்த முயற்சியாக 1,330 திருக்குறள்களையும் QR code வடிவில் மாற்றியமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய ஆசிரியர் மனோகர்,

"இது, திருக்குறள் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கும். புத்தகத்தில் திருக்குறள்களை எடுத்து படிக்கத்தான் மாணவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால், டெக்னாலஜி வழியில் கொடுக்கும்போது, மாணவர்கள் ஆர்வமாக திருக்குறள்களை படிக்க நேரிடும். இதில், டெக்னாலஜி என்பது, நிலாவைக் காட்டி சிறுவர்களுக்குத் தாய்மார்கள் சோறு ஊட்டுவது போல்தான்.

மனோகர்
மனோகர்

1,330 QR code-கள் ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்தால், ஒவ்வொரு குறளும், அதன் உரையும் வெளிப்படும். அதற்காக, ஒவ்வொரு திருக்குறளையும் வீடியோ, ஆடியோவாக அனிமேஷன் முறையில் மாற்றி, அதனை QR code வடிவில் மாற்றும் பணியைச் செய்து வருகிறேன். விரைவில் அதை வெளியிட திட்டமிள்ளேன். இந்தமுறை, கண்டிப்பாக இன்றைய தலைமுறை மாணவர்களிடம் திருக்குறளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு