Published:Updated:

கல்வித்தரத்தில் கேரளா முதலிடம்... தமிழகத்திற்கு எந்த இடம்?- நிதி ஆயோக் அறிக்கை

சிறிய மாநிலங்களின் பட்டியலில் மொத்தம் 8 மாநிலங்கள் உள்ளன. இதில் திரிபுரா 56.1 சதவிகிதம் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகம்
தமிழகம்

அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சிகளை ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய கடமையாக எடுத்துச் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் 2016 -2017ம் ஆண்டிற்கான கல்வியின் தரத்தை 44 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நிதி ஆயோக் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐந்தாவது முறையாகக்  ‘கிரிஷி கர்மான் விருது!’ சாதனை படைத்த தமிழகம்!
கல்வித்தரம்
கல்வித்தரம்

இந்தப் பட்டியல் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்று தனித்தனியாக மூன்று வகையில் கல்வியின் தரம் பிரிக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, கேரளா உட்பட 20 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த 20 மாநிலங்களின் பட்டியலில், அனைத்து விதமான கல்விச் செயல்பாடுகளிலும் 86.2 சதவிகிதம் பெற்று கேரளா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சென்ற ஆண்டு 63.2 சதவிகிதம் பெற்று இரண்டாவது இடம் பிடித்த தமிழகம் இந்த முறை 73.4 சதவிகிதம் பெற்று கல்வியின் தரத்தை 10 சதவிகிதம் உயர்த்தி மீண்டும் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துள்ளது. மகாராஷ்டிரா, இமாசல பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் டாப்- 5 இடத்திற்கு வந்துள்ளது. இந்தப் பட்டியலில் 36.4 சதவிகிதம் பெற்று உத்தரப்பிரதேசம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

அரசுப்பள்ளி
அரசுப்பள்ளி

சிறிய மாநிலங்களின் பட்டியலில் மொத்தம் 8 மாநிலங்கள் உள்ளது. இதில் திரிபுரா 56.1 சதவிகிதம் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மிசோரம், கோவா போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. 24.8 சதவிகித கல்வித்தரத்துடன் அருணாசல பிரதேசம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை சண்டிகர் முதலிடத்தையும், டெல்லி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. 42.8 சதவிகிதத்துடன் லட்சத்தீவு கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கல்வித்தரத்தில் கேரளா முதலிடம்... தமிழகத்திற்கு எந்த  இடம்?- நிதி ஆயோக் அறிக்கை

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரப் பட்டியலிலும் கேரளா முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.