Published:Updated:

சகமாணவர்கள் பயன்பெற ஆப்பில் கல்லூரி பாடங்கள்; கும்பகோணம் பொறியியல் மாணவர் சாதனை!

Phone (Representational Image)
News
Phone (Representational Image) ( Photo by Lisa from Pexels )

இந்தச் செயலி, பொறியியல் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொறியியல் படிப்பில் நிறைய துறைகள் உள்ளன. நான் உருவாக்கியுள்ள இந்தச் செயலியில் அந்தந்தத் துறைசார்ந்த அனைத்து குறிப்புகளும் (Study materials) கிடைக்கும்.

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியைச் (Arasu Engineering College) சேர்ந்த ஆர்.விஜயராகவன் என்ற மாணவர் ஆப் ஒன்றைத் தயாரித்துள்ளார். இதுகுறித்து கணிப்பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் விஜயராகவனிடம் பேசினோம்.

பொறியியல் மாணவர் விஜயராகவன்
பொறியியல் மாணவர் விஜயராகவன்

``இரண்டு ஆண்டுகள் உழைப்பில் AEC LMS என்ற செயலியை உருவாக்கியுள்ளேன். இந்தச் செயலியை உருவாக்கி வெளியிட எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது. ஒரு செயலியை எப்படி உருவாக்க வேண்டும் என்று கல்லூரி நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்ததன் மூலமும் யூடியூப் காணொளிகள் மூலமாகவும் கற்றுக்கொண்டேன். நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவன்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் செயலியை விலையுயர்ந்த மடிக்கணினியின் மூலம் உருவாக்கவில்லை. தமிழக அரசு வழங்கிய அம்மா மடிக்கணினியில்தான் உருவாக்கினேன்.

எப்படிப் பயனளிக்கும்?

இந்தச் செயலி, பொறியியல் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொறியியல் படிப்பில் நிறைய துறைகள் உள்ளன. நான் உருவாக்கியுள்ள இந்தச் செயலியில் அந்தந்தத் துறைசார்ந்த அனைத்து குறிப்புகளும் (Study materials) கிடைக்கும்.

மாணவன் உருவாக்கிய செயலி
மாணவன் உருவாக்கிய செயலி

இந்தச் செயலியில் இருக்கும் குறிப்புகள் அனைத்தும் எங்கள் கல்லூரி ஆசிரியர்களின் தனிப்பட்ட குறிப்புகள். அவர்கள் அனைவரும் எனக்கு இந்தச் செயலியை உருவாக்குவதற்காக உதவினார்கள். மாணவர்கள் அவர்களுக்குத் தேவையான துறையைத் தேர்வுசெய்து அதில் எந்தக் குறிப்பு வேண்டும் என்பதைத் தேர்வுசெய்து, கிளிக் செய்தால் போதும். அதைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். செயலியைப் பயன்படுத்துவதற்கு User Id, Password உருவாக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்கட்டமாக எங்கள் கல்லூரி மாணவர்கள் மட்டும் இதனைப் பயன்படுத்துகின்றனர். பிற கல்லூரி மாணவர்களுக்கு இது தேவையென்றால் எங்கள் கல்லூரிக்குத் தொலைபேசியில் அழைத்துப் பதிவுசெய்து, இலவசமாக User Id, Password ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு பயன்படுத்தலாம்.

செயலியை உருவாக்குவதற்கு கடின உழைப்பும் ஆர்வமுமே தேவைப்பட்டது. அதைத்தவிர பெரிய செலவுகள் எதுவும் இல்லை. செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவு செய்வதற்காக ரூ.2000 மட்டும் தேவைப்பட்டது. ஒருமுறை இந்தப் பணத்தை கட்டினால், எத்தனை செயலிகளையும் அதில் பதிவுசெய்து கொள்ளலாம்.

Mobile phone in hands (Representational Image)
Mobile phone in hands (Representational Image)
Pixabay

இந்தச் செயலி செயல்பாட்டுக்கு வந்து சில நாள்கள்தான் ஆகின்றன. தற்போது எங்கள் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலி இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும். அப்படிச் சென்றடையும் பட்சத்தில் எனக்கு அதிலிருந்து குறிப்பிட்ட தொகை வருமானமாகக் கிடைக்கும்" என்றார்.