பிரீமியம் ஸ்டோரி

ங்கிலத்தை எளிதாகக் கற்க சிறந்த வழி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு நாம் பேசுவதுதான். சொல்ல அல்லது எழுத விரும்பும் எந்தக் கருத்தையும் முதலில் மனத்திலேயே தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். பிறகு அந்தக் கருத்தைச் சொற்றொடர்கள் மூலம் பேசவோ, எழுதவோ செய்யலாம். இதற்குப் போதுமான சொல்வளம், கொஞ்சம் இலக்கணத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.

இரண்டு, மூன்று வார்த்தைகள் கொண்ட எளிய வாக்கியங்களில் தொடங்கி, பின்னர் அதை மெருகேற்றி, பொருத்தமான வார்த்தைகளை உபயோகித்து ஆங்கிலத்தில் பேசும் கலையை வளர்த்துக்கொள்ளலாம்.

Vocabulary எனப்படும் ஆங்கில சொல்வளத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டுவருவது இதற்கு உதவும். உதாரணமாக Short-lived (அற்ப ஆயுள் கொண்ட) என்பதை Ephemeral என்று கூறலாம். Sweet sounding (இனிமையான ஓசை) என்பதை Mellifluous எனலாம்.

Life of a caterpillar is short-lived / Life of a caterpillar is ephemeral (இரண்டும் வாக்கியங்களும் ஒரே பொருள்தான் தரும்).

Because her son was an (edacious / fond of eating) eater, the mother had to cook two pots of idlis to fill him up. இந்த வாக்கியத்தில் edacious என்பது சாப்பாட்டின் மேல் அதிக ஆசை உள்ளவர் என்று பொருள்படும். இதையே fond of eating என்றும் சொல்லலாம். இரண்டும் ஒரே பொருள்தரும் வார்த்தைகள்தாம்.

ஆயிரம் ஆண்டுகள் (ஒரு நூற்றாண்டு) அல்லது ஆயிரம் விஷயங்கள்... இதை A thousand things or a thousand years என்று சொல்வதற்குப் பதிலாக Chiliad என்ற வார்த்தை உபயோகித்து `For many countries 2020 hopes to be a new chiliad beginning' என்று கூறலாம்.

Aishwarya was not happy when her nemesis (archenemy) won the contest... இந்த வாக்கியத்தில் Nemesis என்பது பரம எதிரியை (archenemy) குறிக்கிறது. அதுவும் வெல்லமுடியாத பரம எதிரி (An unconquerable archenemy).

ENGLIஷ் VINGLIஷ்: 21 நாள்களில் ஒரு பழக்கம் உருவாகிறது!

The cuckoo is a harbinger of spring. குயிலின் வருகை வசந்தத்தின் தொடக்கத்தை தெரிவிக்கிறது. இந்த வாக்கியத்தில் Harbinger என்பது ஓர் அடையாளம். அதாவது வசந்தம் வருவதைக் குயில் ஒரு சகுனம் போல வந்து உணர்த்துகிறது. குயில் (Messenger/Harbinger) வசந்தத்தின் வருகையை (News of the future) குறிக்கும் அடையாளம். Harbinger வார்த்தையைக்கொண்டு இன்னொரு எளிதான வாக்கியம், எளிதாகப் புரிந்துகொள்ள `The increase in homes prices may be a harbinger of better economic times.'

The news of the child who fell in to the borewell stayed buzzworthy for a week. ஊடகம் மூலம் காட்டப்படும் ஒரு பரபரப்பான மக்களின் கவனத்தை ஈர்க்கும் விஷயம்தான் Buzzworthy. இதுவும் ஒரு வகையான breaking news என்றும் எடுத்துக்கொள்ளலாம்

மிகவும் விலையுயர்ந்த நகையும் உடையும் Bling என்று சொல்லலாம். What she wore for the party today was totally Bling.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனவுலகம் Dream World என்பதை La-la Land என்றுகூட சொல்லலாம். புதிதாகத் தோன்றிய இந்த வார்த்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் பெயராக வெளியானபின் மிகவும் பிரபலமானது. உதாரணமாக `Are you in La-la Land?' என்று சொல்லலாம்.

21 நாள்களில் ஒரு பழக்கம் உருவாகிறது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். ஒரு நாளைக்கு 5-10 சொற்களைக் கற்றுக்கொள்வது கடினம் என்றால், சிறியதாகவே தொடங்குங்கள்... ஒரு நாளைக்கு ஓரிரு சொற்களைக் கற்றுக்கொள்ளுங்கள், பின்னர் படிப்படியாக அதிகரிக்கலாம். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு வார்த்தையாவது கற்றுக்கொள்ளலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு