Published:Updated:

CA Final: தேசிய அளவில் தங்கை முதலிடம், அண்ணன் 18-வது இடம்; சாதனை படைத்த உடன்பிறப்புகள்!

``நாங்கள் மிகவும் எளிமையான யுக்தியைப் பயன்படுத்தினோம். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் தட்டிக்கொடுத்தும், தேவைப்பட்டால் திட்டியும் படித்தோம். கேள்வித்தாளுக்கு பதில் எழுதும்போது என் பதிலை அவனும், அவன் பதிலை நானும் சரிபார்ப்போம்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ICAI - The Institute of Chartered Accountants of India) நடத்திய பட்டய கணக்காளர் (Chartered Accountant - CA) தேர்வு முடிவுகளை நேற்று வெளியானது. மிகவும் கடினமானதாக கருதப்படும் இந்தத் தேர்வில், 19 வயது இளம் பெண் நந்தினி இந்திய அளவில் முதல் இடத்தையும், அவரின் அண்ணன் சச்சின் அகர்வால் இந்திய தரவரிசை பட்டியலில் 18-ம் இடத்தயும் பெற்று அசத்தியுள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் மோரேனா மாவட்டம் விக்டர் கான்வென்ட் பள்ளியில் படித்த இருவரும், சி.ஏ தேர்வுக்கு ஒன்றாகத் தயாராகினர். தேர்வில் நந்தினி 614/800 மதிப்பெண் (76.75%) பெற்றுள்ளார். சச்சின் 568/800 எடுத்துள்ளார்.

Exams -Representational image
Exams -Representational image
Image by Karolina Grabowska from Pixabay
7-வது நாளாக மாணவர்கள் போராட்டம்; பாடப்பிரிவிலிருந்து பட்டுப்புழுவியல் துறை நீக்கப்பட்டது ஏன்?

பள்ளியில் இரண்டு வகுப்புகள் முன்னதாகப் படித்ததால், அண்ணனுடன் சேர்ந்து ஒரே வகுப்பில் படித்து வந்த நந்தினி தங்களின் வெற்றி குறித்துப் பேசும்போது, ``நாங்கள் மிகவும் எளிமையான யுக்தியைப் பயன்படுத்தினோம். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் தட்டிக்கொடுத்தும், தேவைப்பட்டால் திட்டியும் படித்தோம். கேள்வித்தாளுக்கு பதில் எழுதும்போது என் பதிலை அவனும், அவன் பதிலை நானும் சரிபார்ப்போம். நிறைய நேரங்களில் நான் நம்பிக்கை இழக்கும்போது அண்ணன்தான் எனக்கு உறுதுணையா இருந்தான்' என்கிறார்.

2017-ம் வருடம் பள்ளிப் படிப்பை முடித்த நந்தினி ஒரு தனியார் நிறுவனத்திற்குக் கட்டுரைகள் எழுதிக் கொடுத்து வருகிறார்.

தன்னை விட சிறு வயதிலேயே, இந்தப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள தங்கையைப் பாராட்டியுள்ள சச்சின், ``நந்தினி மிகவும் புத்திசாலி, எல்லா வெற்றிக்கும் தகுதியானவள். அவள் சிறப்பாகச் செயல்படுவாள் என்று தெரியும். பல வழிகளில் அவள் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறாள்'' எனக் கூறியுள்ளார்.

Exam (Representaional Image)
Exam (Representaional Image)
Image by F1 Digitals from Pixabay
`மாணவர்கள் வறுமையில் இருக்காங்க!' - விருது தொகையில் மாணவர்களுக்கு செல்போன் வழங்கிய ஆசிரியை

பாலின ரீதியாக அனைத்துப் பெண்களும் சந்திக்கும் பிரச்னைகள் தனக்கும் தொந்தரவு தருவதாகக் கூறிய நந்தினி, ``சமூகத்தில் ஆண்கள் அளவுக்குப் பெண்களுக்கு தங்களை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பெண்கள் ஓரிரண்டு முயற்சிகளில் தோல்வி அடைந்தாலே முயற்சியை கைவிடச் சொல்லி வற்புறுத்துவார்கள். ஆண்களிடம் இது மாதிரி எந்தக் கேள்வியும் கேட்கப்படவதில்லை. ஆணோ, பெண்ணோ... பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அவர்களது கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டும். அவ்வாறு எங்கள் இருவருக்கும் ஆதரவாக இருந்த எங்கள் பெற்றோருக்கு நன்றி'' என்கிறார் பெருமிதத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு