Published:Updated:

ட்யூஷன் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; கண்காணிக்க சிறப்புக் குழு; நீதிமன்றம் அதிரடி!

School students ( Anupam Nath )

``பணம் சம்பாதிக்கும் நோக்கில் டியூஷன் மற்றும் பகுதி நேர வேலை, போன்றவற்றில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

ட்யூஷன் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; கண்காணிக்க சிறப்புக் குழு; நீதிமன்றம் அதிரடி!

``பணம் சம்பாதிக்கும் நோக்கில் டியூஷன் மற்றும் பகுதி நேர வேலை, போன்றவற்றில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

Published:Updated:
School students ( Anupam Nath )

ராதா என்ற ஆசிரியர் தனது இடமாறுதல் கோரிக்கையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதுதொடர்பான தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வழங்கியபோது, ``பணம் சம்பாதிக்கும் நோக்கில் ட்யூஷன், பகுதி நேர வேலை, வேறு தொழில்களில் என ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு போதுமான தொகையை வழங்கியபோதிலும், ஏழை மாணவர்களுக்கான தரமான கல்வி ஆசிரியர்களால் வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களின் தரம், தனியார் பள்ளி மாணவர்களின் தரத்தோடு ஒப்பிடும் வகையிலும் இல்லை. எனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களுடைய பணி மற்றும் பொறுப்புகள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

School Student (Representational Image)
School Student (Representational Image)
Nikhita S on Unsplash

மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக ட்யூஷன் வகுப்புகளை எடுப்பதிலும், பகுதி நேர வேலைகள் செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை குழு அமைத்து கண்காணிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என நீதிபதி கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism