Published:Updated:

தொடங்கியது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள்... எங்கே, எப்படி?

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டிருக்கின்றன.

தொடங்கியது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள்... எங்கே, எப்படி?

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான மாணவர்களை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் பயில நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கடந்த மாதம் தெரிவித்திருந்திருந்தார்.

கொரோனா வழிமுறைப்படி அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
கொரோனா வழிமுறைப்படி அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடப்பு ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயில 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அதில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாகத் தொடங்கப்படும் எனவும், மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து கல்வி பயில தயாராக வரவேண்டும் என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு என ஐந்தாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளுடன் கூடிய நான்கு நவீன வகுப்பறைகள்‌ மற்றும் ஆய்வகங்களில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர்கள் வகுப்புகளை எடுக்க உள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல் இயக்குநர் ஹனுமந்தராவ் பேசும்போது,

"ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான தற்காலிக வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு பெங்களூர் மங்களகிறியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 183 பேராசிரியர்களை நியமித்துள்ளனர்.

மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட காட்சி
மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட காட்சி

தற்போது ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அதிலிருந்து 8 பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்த உள்ளனர். தற்போது அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வில் ஈடுபட்டு வருவதால் சுழற்சிமுறையில் வகுப்புகளை நடத்த உள்ளனர்.

தினமும் 2 பேராசிரியர்கள் நேரடியாகவும் மற்றவர்கள் ஆன்லைன் மூலமும் வகுப்புகளை எடுக்க உள்ளனர். முதல் கட்டமாக உடற்கூறியல், சமூக அறிவியல், உடலியல், நுன்வேதியல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இரண்டு ஆண்டுகள் மட்டுமே ராமநாதபுரத்தில் இந்த வகுப்புகள் நடைபெறும். பின்னர் மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் மாற்றப்பட்டு அங்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்" எனக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமநாதபுரத்திற்கு ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை வர வாய்ப்புள்ளதா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு,

"ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரியில் மட்டும்தான் உள்ளது. ராமநாதபுரத்திற்கு கொண்டுவர வேண்டுமென்றால் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ம்ஸ் வகுப்பறைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

மதுரை எய்ம்ஸ் கல்லூரி செயல் இயக்குநர் ஹனுமந்தராவ்
மதுரை எய்ம்ஸ் கல்லூரி செயல் இயக்குநர் ஹனுமந்தராவ்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எய்ம்ஸ் இங்கே இருந்து மதுரைக்குக் கொண்டு செல்லப்படும். ஆனால் புதிதாகச் செய்யப்பட்ட அந்த வசதிகள் அனைத்தும் இங்கேயே இருக்கும். ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையானதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை. அப்படிப் பார்த்தால் அந்த வசதிகள் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே உள்ளது. எனவே இதனை எய்ம்ஸ் கல்லூரியாகச் செயல்படுத்துவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது" என விளக்கம் கொடுத்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism