Published:Updated:

`மீம்ஸ் யுக்தியைக் கையாண்டேன்; ரெஸ்பான்ஸ் கிடைத்தது!'‍- மாணவர்களை ஆச்சர்யப்பட வைக்கும் ஆசிரியர்

அருண் சின்னதுரை
ஈ.ஜெ.நந்தகுமார்

``என்னுடைய மாணவர்கள் பலரும் முதல்நிலை பட்டதாரிகள். இதனால் அவர்களுக்கு கம்ப்யூட்டர் படிக்க ஆர்வம் இருந்தாலும் அதனுடன் கஷ்டமும் இருந்தது. இதனை மாற்ற வேண்டும் எனக் கடினமான பாடப்பிரிவுகளை எளிமைப்படுத்த மீம்ஸ் மூலம் நடத்துகிறேன்.''

மீம்ஸ்
மீம்ஸ்

கணினி பாடத்தை மீம்ஸ் மூலம் எளிமைப்படுத்தி மாணவர்களுக்கு வழங்கிவருகிறார், பேராசிரியர் பாண்டிக்குமார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ''11-வது வருடம் ஆசிரியர் பணியைத் தொடர்கிறேன். தற்போது மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் வேலைசெய்கிறேன்.

மீம்ஸ் பாண்டிக்குமார்
மீம்ஸ் பாண்டிக்குமார்

கம்ப்யூட்டர் ஆசிரியராக இருக்கும் எனக்கு, கம்ப்யூட்டர் மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய மாணவர்கள் பலரும் முதல்நிலை பட்டதாரிகள். இதனால், அவர்களுக்கு கம்ப்யூட்டர் படிக்க ஆர்வம் இருந்தாலும் அதனுடன் கஷ்டமும் இருந்தது. இதனை மாற்ற வேண்டும் எனக் கடினமான பாடப்பிரிவுகளை எளிமைப்படுத்த மீம்ஸ் மூலம் நடத்துகிறேன்.

கம்ப்யூட்டர் பாடத்தில் வரலாறு, விளையாட்டு, பொது அறிவு, நாட்டு நடப்பு, அரசியல் என்று பல்வேறு களங்களைக் கொண்டு சென்றுள்ளேன். இதனால்,, அவர்கள் ஆர்வத்தோடு கவனிப்பார்கள்.

வகுப்பறை
வகுப்பறை

டெக்னிக்கல் வார்த்தைகளை உடனே சொன்னால் புரியாது. ஒரு எடுத்துக்காட்டுடன் சொன்னால்தான் புரியும். அதற்காக, மீம்ஸ் யுக்தியைக் கையாண்டேன். மாணவர்களிடமிருந்து கிடைத்த ரெஸ்பான்ஸ் என்னையே ஆர்வமாக பாடம் எடுக்கவைத்தது. செமஸ்டர் தேர்வுகளிலும்கூட அவர்களது புரிதல் நேர்த்தியாக வெளிப்படத் தொடங்கியது.

அதனை அடிப்படையாகக்கொண்டு, மீம்ஸ் மூலம் 'இயக்க முறைமை' குறித்த நூல்' உருவாக்கியுள்ளேன். இன்னும் சில மாதங்களில், கணினி அறிவியலில் C+ பாடப்பிரிவும் என்னால் மீம்ஸ் முறைகளைக் கையாண்டு புத்தக வடிவில் வெளிவர உள்ளது.

மீம்ஸ்
மீம்ஸ்

கணினி அறிவியல் மட்டுமின்றி, அனைத்துப் பிரிவு பாடங்களும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கற்பித்தல் முறையோடு புத்தக வடிவில் மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார். பாடங்களை மீம்ஸ் மூலம் நடத்தும் ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.