Published:Updated:

2K kids: மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு... பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்!

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்
பிரீமியம் ஸ்டோரி
News
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்

சரவணன்.ர

இன்றைய தலைமுறையில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும், ஆண்களுக்கு நிகராகச் சாதித்து வருகிறார்கள். ஆனால், இயந்திரப் பொறியியல், அதாவது `மெக்கானிக் கல் இன்ஜினீயரிங்' துறை மட்டும் இன்றும் விதிவிலக்காகவே உள்ளது. சென்னை,

 சாய்ராம் பொறியியல் கல்லூரியின் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் என். வாசுதேவன், பெண்கள் இந்தத் துறையில் பணியாற்ற தடை ஏதும் இல்லை, அவர்கள் ஆர்வம்காட்ட வேண்டும் என்கிறார். அவரிடம் சில கேள்விகள்...

2K kids: மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு... பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்!

பெண்கள் ஏன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகளில் அதிகம் சேர்வது இல்லை?

அந்தக் காலத்தில் இருந்தே இயந்திரப் பொறியியல் என்பதை ஆண்கள் செய்யக்கூடிய வேலை என்றே நினைத்து வருகின் றனர். இத்துறைக்கு உடல் வலிமை மிகவும் முக்கியம் என்று கருது கின்றனர். எனவே, பெண்களுக்கு இத்துறை வேலைவாய்ப்புகளைத் தராது என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், அந்த ஸ்டீரியோ டைப்பை உடைத்து இன்று பல பெண்கள் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகளில் ஆர்வத்துடன் சேர்ந்து படிக்கிறார்கள், வேலைவாய்ப்பு பெறுகிறார்கள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இன்னும் விழிப்புணர்வு கிடைத்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

 என்.வாசுதேவன்
என்.வாசுதேவன்

பெண்களால் இந்தத் துறையில் சாதிக்க முடியுமா?

நிச்சயமாக. வலிமையானவர்கள்தான் இயந்திரப் பொறியியல் துறையில் வேலை செய்ய முடியும் என்ற தவறான கருத்து, பெண்கள் மீதும் திணிக்கப்பட்டது.

ஆனால், இன்றைய கணினி சார் இயந்திரப் பொறியியல் தாக்கத்தின் காரணமாக அந்தக் கருத்து தவிடுபொடி ஆகியுள்ளது. மதிகூர்மையும் நுண்ணறிவும் இருந்தால், ஆண், பெண் யாராக இருந்தாலும் இயந்திரப் பொறியியலில் வெற்றி பெறலாம்.

2K kids: மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு... பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்!

இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் என்னென்ன?

கருவிகள் மற்றும் இயந்திரங்கள், உற்பத்தி ஆலைகள், விமானம், கப்பல், போக்குவரத்து சாதனங்கள், மருத்துவ சாதனங்கள், ஆயுதங்கள் போன்ற பொருள்களின் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகிய தளங்களில் இயந்திரவியல் பொறியாளர்கள் பணி புரிவார்கள். இன்று பல பன்னாட்டு நிறுவனங்களும் இயந்திரப் பொறியியல் பட்டதாரிகளை பணியமர்த்த விரும்பு கின்றனர்.

இயந்திரப் பொறியியல் துறையில் வேலை வாய்ப்புள்ள சில அரசு நிறுவனங்கள்...

இப்போது சொல்லுங்கள்... இந்தச் சிறப்பான பணிவாய்ப்புகள் எல்லாம் ஆண்களுக்கு மட்டுமே சென்று சேரலாமா?

கெட், செட், கோ கேர்ள்ஸ்!