Published:Updated:

தமிழ்நாடு அரசின் இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்... கட்டண விபரமும் விண்ணப்ப விதிமுறைகளும்!

இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்
இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் வழங்கும் இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்! கட்டணம் எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் செய்தித்துறையின் கீழ் சென்னை, தரமணியில் நிறுவப்பட்டிருக்கும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (Tamilnadu Government M.G.R. Film and Television Institute) தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பெற்ற கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிறுவனத்தில் இடம் பெற்றிருக்கும் இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகளுக்கான (Bachelor of Visual Arts) மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

திரைப்படக் கல்லூரி

சென்னை, மத்தியப் பாலிடெக்னிக்கின் ஒரு பகுதியாக 1945 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற இந்நிறுவனம் வளர்ச்சியடைந்த நிலையில், 1959 ஆம் ஆண்டில் திரைப்படத் தொழில்நுட்ப நிறுவனம் எனும் பெயரில் சிறப்பு நிறுவனமாகச் செயல்படத் தொடங்கியது. பின்னர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் என்று மறு பெயரிடப்பட்டது. அதன் பின்னர், எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது.

படிப்புகள்

இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்
இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் நான்காண்டு கால அளவிலான 6 இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

இடங்கள் விவரம்

1. இளங்கலை – காட்சிக்கலை (ஒளிப்பதிவு) (Bachelor of Visual Arts (Cinematography)) – 14 இடங்கள்

2. இளங்கலை – காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) (Bachelor of Visual Arts (Digital Intermediate)) – 14 இடங்கள்

3. இளங்கலை – காட்சிக்கலை (ஒலிப்பதிவு) (Bachelor of Visual Arts (Audiography)) – 14 இடங்கள்

4. இளங்கலை – காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) (Bachelor of Visual Arts (Direction and Screenplay Writing)) – 14 இடங்கள்

5. இளங்கலை – காட்சிக்கலை (படத்தொகுப்பு) (Bachelor of Visual Arts (Film Editing)) – 14 இடங்கள்

6. இளங்கலை – காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) (Bachelor of Visual Arts (Animation and Visual Effects)) – 14 இடங்கள் என்று மொத்தம் 84 இடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி மற்றும் வயது

மேற்காணும் பட்டப்படிப்புகளில் இளங்கலை – காட்சிக்கலை (ஒளிப்பதிவு) மற்றும் இளங்கலை – காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) பட்டப்படிப்புகளுக்கு +2 தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல்) / சிறப்புப் பாடமாகப் புகைப்படம் சார்ந்த தொழில் படிப்புகள் / அதற்கு இணையான படிப்புகள் / மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் (ECE) பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்
இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்

இளங்கலை – காட்சிக்கலை (ஒலிப்பதிவு) பட்டப்படிப்பிற்கு +2 தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல்) / சிறப்புப் பாடமாகப் வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது உள்நாட்டு மின்னணு உபகரணங்கள் சார்ந்த தொழில் படிப்புகள் / அதற்கு இணையான படிப்புகள் / மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் (ECE) பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்காணும் அனைத்துக் கல்வித்தகுதியிலும் பொது / பிற்பட்ட / மிகவும் பிற்பட்ட அல்லது சீர்மரபினர் குறைந்தது 40% மதிப்பெண்களைப் பெற்றிருப்பதுடன், ஜூலை 1 அன்று 24 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இவர்களுக்கு ஜூலை 1 அன்று 26 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை... விண்ணப்பிப்பது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விண்ணப்பம்

இப்படிப்புகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் குறிப்பேட்டை https://cms.tn.gov.in/sites/default/files/announcement/tngmgrfti_prospectus_application_2021_22.pdf எனும் இணைய முகவரிக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது இங்கே க்ளிக் செய்யவும்.

download

தகவல் குறிப்பேட்டில் கடைசியாக இருக்கும் விண்ணப்பப்படிவத்தை அச்சிட்டு எடுத்து, விண்ணப்பப் படிவத்தினை முழுமையாக நிரப்பி, தேவையான ஆவணங்களின் நகல்கள் மற்றும் விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணமாக “முதல்வர் (பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600113” பெயரில் சென்னையில் மாற்றிக் கொள்ளக்கூடியதாக, பொதுப்பிரிவினர் - ரூ.200/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.60/- என்று வங்கி வரைவோலை (Demand Draft) அல்லது வங்கியாளர் காசோலையாகப் (Bankers Cheque) பெற்று இணைத்திட வேண்டும். மேலும் அதனுடன், சென்னையில் வசிப்பவர் ரூ.18/- வெளியூர் ரூ.47/-, வெளிமாநிலம் ரூ.69/ எனும் மதிப்பிலான அஞ்சல் வில்லை ஒட்டிய 26X12 செ.மீ அளவுடைய சுயமுகவரியிட்ட உறையையும் இணைத்து “முதல்வர் (பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600113” எனும் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்
இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்
ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பிட வேண்டும். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு 9-9-2021 மாலை 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைத்திட வேண்டும். குறைபாடுடைய விண்ணப்பங்கள், விண்ணப்பிக்கும் பிரிவு (Course applied for…) நிரப்பப்படாத விண்ணப்பங்கள் போன்றவை நிராகரிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர் சேர்க்கை

விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் சென்னையில் நேர்காணல் நடத்தப்பெற்று, தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பெற்ற மாணவர்களின் பட்டியல் பயிற்சி நிறுவனத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படுவதுடன், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் தனியாக அஞ்சல் வழியில் தகவல் தெரிவிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், அனைத்துச் சான்றிதழ்களுடன் அரசு மருத்துவரிடம் பெற்ற உடற்தகுதிச் சான்றிதழையும் சமர்ப்பித்து மாணவர் சேர்க்கையினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

கல்விக்கட்டணம்

இக்கல்லூரியின் பயிற்சிக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.15000/-, சிறப்புக் கட்டணம் ரூ.2000/- வளர்ச்சிக் கட்டணம் ரூ.1000/- பிலிம் சொசைட்டி உறுப்பினர் கட்டணம் ரூ.500/-, செஞ்சிலுவைக் கட்டணம் ரூ.150- என்று மொத்தம் ரூ.18650/- செலுத்திட வேண்டும். முதலாமாண்டில் முன்வைப்புக் கட்டணம் (Caution Deposit) ரூ.500/-ஐச் சேர்த்து செலுத்த வேண்டும்.
இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்
இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்

இவை தவிர, பல்கலைக்கழகத்திற்குச் சேர்க்கைக் கட்டணம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக் கட்டணம் போன்றவற்றைத் தனியாகச் செலுத்த வேண்டியிருக்கும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பயிற்சிக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பிற கட்டணங்களைச் செலுத்திட வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களுக்கு மட்டும் விடுதி வசதி உண்டு. மாணவியர்களுக்கு விடுதி வசதி இல்லை.

கூடுதல் தகவல்கள்

இப்படிப்புகளில் சேர்வதற்கான மேலும் கூடுதல் தகவல்களை அறிய https://cms.tn.gov.in/ எனும் இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள தகவல் குறிப்பேட்டை https://cms.tn.gov.in/sites/default/files/announcement/tngmgrfti_prospectus_application_2021_22.pdf எனும் முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம் அல்லது 044 – 22542212 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு