Election bannerElection banner
Published:Updated:

`மிஸ் யூ மிஸ்!' ஊரடங்கிலும் ஆசிரியர்களை மறக்காத மாணவர்கள்... அவள் விகடனின் இலவச வெபினார்!

ஆசிரியர் தினம்
ஆசிரியர் தினம் ( Pixabay )

ஆசிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட், விளையாட்டுப் போட்டிகள் என்று வைத்து அசத்தும் மாணவர்கள் இந்த ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் ஆசிரியர்கள் தினத்தன்று தங்கள் ஆசிரியர்களை மிகவும் மிஸ் செய்தனர்.

ஆசிரியர் தின விழா, மற்ற பள்ளி விழாக்களைவிட மாறுபட்டது. குழந்தைகள் தின விழாவைவிட, குழந்தைகளுக்கு ஆசிரியர் தின விழாதான் ஃபேவரைட். ஏனெனில், ஆண்டு முழுவதும் தங்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் நன்றி செலுத்தும், தங்கள் அன்பைச் சொல்லும் ஒரு நாள் அது!

ஆசிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட், விளையாட்டுப் போட்டிகள் என்று வைத்து அசத்தும் மாணவர்கள் இந்த ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் ஆசிரியர் தினத்தன்று தங்கள் ஆசிரியர்களை மிகவும் மிஸ் செய்தனர் .

S.Yakshitha Sree
S.Yakshitha Sree

இதனால் அவள் விகடன் சார்பில், ஆசிரியர் தினத்தன்று குழந்தைகளுக்கு 'மிஸ் யூ மிஸ்' என்ற இலவச வெபினாரை நடத்தினோம். அதில் மாணவர்களுக்கு, தங்கள் ஆசிரியருக்கு ஒரு கிராஃப்ட் கிஃப்ட் செய்யக் கற்றுக்கொடுத்ததுடன், அதை இப்போது அவருக்கு போட்டோ எடுத்து அனுப்பியும், பள்ளிகள் திறந்தவுடன் நேரில் சென்று கிஃப்ட் செய்யும் ஐடியாவையும் கொடுத்தோம்.

250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இந்த வெபினாரில் பயிற்சி அளித்தவர், கைவினைக் கலைஞர் மற்றும் பயிற்சியாளரான ந.ஷியாமளா தேவி.

ஒரு மணி நேரப் பயிற்சியில், வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருள்களை வைத்து மூன்று கிராஃப்ட் பொருள்களை எளிமையாகவும் பொறுமையாகவும் செய்யக் கற்றுக்கொடுத்தார் சியாமளா தேவி.

'ஹேப்பி டீச்சர்ஸ் டே' என்று எழுதப்பட்ட பாப்-அப்- கிரீட்டிங் கார்டு, பென் ஸ்டாண்ட், போட்டோ பிரேம் என மூன்று கிராஃப்ட் பொருள்களைக் கற்றுக்கொண்டனர் குழந்தைகள். சிலர் வெபினார் நடந்துகொண்டிருக்கும்போதே ஸ்டெப் பை ஸ்டெப் ஆகப் பார்த்து அவற்றைச் செய்தனர். சிலர், குறிப்புகள் எடுத்துக்கொண்டு, பின்னர் செய்து, அந்தப் புகைப்படங்களை நமக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வெபினார் தங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறிய குழந்தைகள், 'அடுத்த வெபினார் எப்போ மிஸ்? என்ன கிராஃப்ட்..?' என்றனர் உற்சாகத்துடன்.

அறிவிப்பு வரும் குட்டீஸ்... அடுத்த கிராஃப்ட் வெபினாரில் இணைவோம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு