‘‘உனக்கு என்னவாகணும்னு ஆசை!’’ என்று பள்ளிக் குழந்தைகளிடம் கேட்டால்… ‘டாக்டர் ஆகணும்… இன்ஜீனியர் ஆகணும்… சயின்ட்டிஸ் ஆகணும்..’ என்று மழலைத்தனமாக வெரைட்டியாகப் பதில் வரும். ஆனால், ஐந்தாம் வகுப்பு மாணவனான ஆதித்யா எனும் அந்தச் சிறுவனிடம் கேட்டால்… ‘‘எனக்குக் கார் டிசைனராகணும்னு ஆசை!’’ என்று பதில் வந்தது. அதைக் கேட்ட பள்ளி ஆசிரியர்கள் மட்டுமில்லை; பெற்றோர்களும் நண்பர்களும்கூட வியந்து போயினர்.
வியப்புக்குக் காரணம் – யாருக்குமே கார் டிசைனுக்கு என்று தனிப்படிப்பு இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஆனால், ஆதித்யாவுக்குத் தெரிந்திருக்கிறது. காரணம், அவன் கலந்து கொண்ட ஒர்க்ஷாப். மோட்டார் விகடனும் ஆயா அகாடமி எனும் கார் டிசைன் பள்ளியும் சேர்ந்து நடந்தும் ஒர்க்ஷாப்பில், வெறித்தனமாக ஒரு ஃபோர்டு மஸ்டாங் காரை வரைந்து காட்டி, பாராட்டுப் பெற்றவன் ஆதித்யா.
இதை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விளையாட்டாகவே அவனுக்கு கார் பற்றிய ஆர்வம் ஊறிக் கிடக்கிறது. அவனுக்கு இத்தனைக்கும் வரையும் திறமைகூடப் பெரிதாகக் கிடையாது. அந்த ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்ட பிறகுதான் பென்சிலையே எப்படிப் பிடிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. நிச்சயம் அவன் கார் டிசைனர் ஆவேன் என்றே லட்சியம் செய்திருக்கிறான்.

இன்னொரு மாணவன் – ஒரு காரில் பாடி லைன், ஷோல்டர் லைன், விங் லைன், கேரக்டர் லைன், வீல் ஆர்ச் என்று காரின் கலைச்சொற்களாகப் பேசினான். இதற்குக் காரணம் – இந்த ஒர்க்ஷாப்.
கோவில்பட்டியைச் சேர்ந்த ஷரோன் ராமலிங்கம் எனும் மாணவன், இதற்கு ஆகப்பெரிய உதாரணம். சிறு வயதில் கடவுள் படங்களை வரைவதில் செம ஆர்வமாக இருந்த ஷரோன் ராமலிங்கம், இப்போது ஒரு மிகப் பெரிய கார் டிசைனர். சீனாவில் உள்ள எம்ஜி நிறுவனத்தில் ஸ்டைஃபண்ட் தொகையுடன் இன்டர்ன்ஷிப் செய்த ஒரே தமிழன்- ஷரோன் ராமலிங்கம். கூடவே, ஆடி TT கார் டிசைனரின் உதவியாளராகவும் இருந்திருக்கிறார் என்பது ஸ்பெஷல். இன்னும் சில மாணவர்கள் இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் என்று பல நாடுகளில் டிசைன் படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு ஒர்க்ஷாப்பைத்தான் இந்த இரண்டு நாள் விடுமுறையில் (2022, ஜூலை 9 –10) மாணவர்களுக்கு நடத்த இருக்கிறார் சத்தியசீலன். இவர் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர். இவர் கை வண்ணத்தில் ஆட்டோக்கள், டூ–வீலர்கள், கார்கள், ட்ரக்குகள், கமர்ஷியல் வாகனங்கள் என பலவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
வளவளவெனப் பேசி போர் அடித்து விடுவது மாதிரியான ஒர்க்ஷாப் இல்லை இது. இந்த ஒர்க்ஷாப், படிப்பு சம்பந்தமானதா.. பாடம் சம்பந்தமானதா என்றால் இல்லை. ஓவியம் சம்பந்தப்பட்டது; நமது க்ரியேட்டிவிட்டி சம்பந்தப்பட்டது; தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டது. ஒரு காரை ஜாலியாக வரைவது எப்படி… களிமண் மூலம் அந்த காரை க்ளே மாடல் ஆக்குவது எப்படி… இலியாஸ் எனும் சாஃப்ட்வேர் மூலம் அதை டெவலப் செய்வது எப்படி… அதை கான்செப்ட் மாடலாக்குவது எப்படி… அதற்கு உயிர் கொடுத்து சாலைகளில் ஓட வைப்பது எப்படி… என்பது வரை எல்கேஜி ரைம்ஸ் போல, செம ஃபன்னாக நடக்க இருக்கிறது இந்த ஒர்க்ஷாப்.
இதில் க்ளே மாடலிங்தான் மாணவர்களுக்கு செம ஜாலியாக இருக்கப் போகிறது. இதற்காகவே ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்புக் களிமண்ணை வரவழைத்து, அதில் தாங்கள் வரைந்த காரை க்ளே மாடலிங் செய்து தர மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இருக்கிறார் சத்தியசீலன்.

கார் டிசைனில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கப் போகிறது. எங்கே டிசைன் கோர்ஸ் படித்தால் என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும்; எந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் இதன் நிறைவாக இருக்கும்.
கார் ஆர்வலர்களுக்கு இது என்ஜாய்மென்ட்; மாணவர்களுக்கு இது வழிகாட்டி!