Published:Updated:

NATA 2021: கட்டடக்கலைப் பட்டப்படிப்புச் சேர்க்கைக்கான தேசியக் கட்டடக்கலைத் திறனாய்வுத் தேர்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
NATA 2021 | கட்டடக்கலைப் பட்டப்படிப்பு
NATA 2021 | கட்டடக்கலைப் பட்டப்படிப்பு

இந்த நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டுகளில் இருமுறை நடத்தப்பெற்றன. இந்த ஆண்டு 10-4-2021 மற்றும் 11-7-2021 ஆகிய தேதிகளில் இரண்டு முறை இத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், மூன்றாவது வாய்ப்பாக வருகிற 3-9-2021 அன்று இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் கட்டடக்கலைக் குழு (Council of Architecture) அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றிருக்கும் ஐந்தாண்டு கால அளவிலான கட்டடக்கலைப் பட்டப்படிப்பில் (B.Arch) 2021-22 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்காகக் கட்டடக்கலைக் குழு (Council of Architecture) நடத்தும் தேசியக் கட்டடக்கலைத் திறனாய்வுத் தேர்வு (National Aptitude Test in Architecture – NATA 2021) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கல்வி மற்றும் வயது

10+2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் எனும் மூன்று பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது 10+3 எனும் கால அளவிலான பட்டயப்படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். மதிப்பெண் மற்றும் வயது வரம்பு குறித்தத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மூன்று நுழைவுத்தேர்வு

கட்டடக்கலைப் பட்டப்படிப்பு
கட்டடக்கலைப் பட்டப்படிப்பு

இந்த நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டுகளில் இருமுறை நடத்தப்பெற்றன. இந்த ஆண்டு 10-4-2021 மற்றும் 11-7-2021 ஆகிய தேதிகளில் இரண்டு முறை இத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், மூன்றாவது வாய்ப்பாக வருகிற 3-9-2021 அன்று இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. NATA 2021 தேர்வினை ஒருவர் இருமுறை மட்டுமே எழுத முடியும் என்பதால், இந்த ஆண்டு நடைபெற்ற இதற்கு முந்தைய இரு தேர்வுகளில் பங்கேற்றவர்கள் மூன்றாவது தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. ஒரு தேர்வில் மட்டும் பங்கேற்றவர்கள் மற்றும் புதிதாகப் பங்கேற்க விரும்புபவர்கள் மூன்றாவது தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பம்

இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.nata.in/ எனும் முகவரியிலான இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப முறையானது, இணைய வழியிலான விண்ணப்பம் (Application), படிமம் பதிவேற்றம் (Image Uploading) மற்றும் கட்டணம் செலுத்தல் (Fee Payment) எனும் மூன்று வகையான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

இத்தேர்வுக்குப் பொதுப்பிரிவினர் ரூ.2000/- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.1500/- என்று விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். இந்தியாவிற்கு வெளியே அரபு நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் மையங்களில் எழுத விரும்புபவர்கள் ரூ.10000/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22-8-2021. சமர்ப்பித்த விண்ணப்பத்தில் 16-8-2021 முதல் 22-8-2021 வரை திருத்தங்கள் செய்து கொண்டு சரியான விண்ணப்பத்தை அச்சிட்டு எடுத்துக் கொள்ள முடியும்.
கட்டடக்கலைப் பட்டப்படிப்பு
கட்டடக்கலைப் பட்டப்படிப்பு

நுழைவுத் தேர்வு

வருகிற 3-9-2021 அன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 29-8-2020 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோயில், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஒன்பது நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 158 நகரங்களிலும், அரபுநாடுகளில் துபாய் (UAE), மனானா (பக்ரைன்), தோஹா (கத்தார்), கைத்தான் (குவைத்) மஸ்கட் (ஓமன்), ரியாத் (சவூதி அரேபியா) ஆகிய 6 நகரங்கள் என்று மொத்தம் 164 நகரங்களில் இத்தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம்... பல்கலைக்கழகத்துக்கு ஒரு வேண்டுகோள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்வு முறை

3-9-2021 அன்று இந்தத் தேர்வின் முதல் அமர்வு காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலான 180 நிமிடங்கள் (மூன்று மணி நேரம்) நடைபெறும். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாகயிருப்பின், இரண்டாவது அமர்வு மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இத்தேர்வானது, பல தெரிவு வகை வினாக்கள் (Multiple-Choice Type - MCQ), பல தேர்வு வகை வினாக்கள் (Multiple Select Type - MSQ), முன்னுரிமைத் தெரிவு வகை (Preferential Choice Type - PCQ), எண்களிலான விடை வகை (Numerical Answer type - NAQ) மற்றும் சரியாகப் பொருத்துதல் வகை (Match the Following Type - MFQ) என்பது மாதிரியான கேள்விகளைக் கொண்டிருக்கும். 1 மதிப்பெண், 2 மதிப்பெண்கள் அல்லது 3 மதிப்பெண்களைக் கொண்டிருக்கும் 125 கேள்விகளுக்கு 180 நிமிடங்களில் (மூன்று மணி நேரம்) பதிலளிக்கக் கூடியதாக இருக்கும்.

இந்த நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் 8-9-2021 அன்று வெளியிடப்படும்.
கட்டடக்கலைப் பட்டப்படிப்பு
கட்டடக்கலைப் பட்டப்படிப்பு

மாணவர் சேர்க்கை

இந்த நுழைவுத் தேர்வுத் தகுதி மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, கட்டடக்கலைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியா முழுவதுமுள்ள கட்டடக்கலைக் கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றிருக்கும் ஐந்தாண்டு கால அளவிலான கட்டடக்கலைப் படிப்புகளில் (B.Arch) இந்திய / மாநில அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கேற்ப மாணவர் சேர்க்கையினைப் பெற முடியும்.

கூடுதல் தகவல்கள்

இந்த நுழைவுத்தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் கட்டடக்கலைக் குழுவின் https://www.nata.in/ எனும் இணையதளத்தினைப் பார்வையிடலாம் அல்லது nata.helpdesk2021@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் அல்லது இத்தேர்வுக்கான உதவி மேசை எண்களான 9560707764, 9319275557 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு