Published:Updated:

NIRF வெளியிட்ட தேசிய தரவரிசைப் பட்டியல்... எந்தெந்த தமிழகக் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன?

தேசிய தரவரிசைப் பட்டியல்
தேசிய தரவரிசைப் பட்டியல்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (National Institutional Ranking Framework - NIRF) வெளியிட்டிருக்கும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களின் விவரங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (National Institutional Ranking Framework - NIRF) எனும் அமைப்பு, இந்தியாவிலிருக்கும் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலை 2016-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள், இந்தத் தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் கல்லூரிகளில், தங்களுக்கேற்ற கல்லூரி ஒன்றைத் தேர்வு செய்து படிக்கலாம்.

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (National Institutional Ranking Framework - NIRF) 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பெற்றது. இந்த அமைப்பின் முதல் தரவரிசைப்பட்டியல் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று வெளியிடப்பட்டது.

அளவுருக்கள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு, கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் (Teaching Learning & Resources), ஆராய்ச்சி மற்றும் தொழில்முறைப் பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு முடிவுகள் (Graduation Outcomes), வெளிக்களம் மற்றும் உள்ளடக்கம் (Outreach & Inclusivity), அகப்பார்வை (Perception) எனும் ஐந்து வகையான அளவுருக்களை (Parameters) முதன்மையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப்பட்டியலைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது.

தேசிய தரவரிசைப் பட்டியல் அளவுருக்கள்
தேசிய தரவரிசைப் பட்டியல் அளவுருக்கள்

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் உட்பட மாணவர்களின் பலம், நிரந்தரப் பணியிலான ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆசிரியர் – மாணவர் விகிதம், முனைவர் பட்டம் அல்லது அதற்கு இணையான மற்றும் அனுபவம் கொண்ட பேராசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த அளவீடு, நிதி ஆதாரங்கள் மற்றும் பயன்பாடு போன்றவைகளைக் கொண்டதாகக் கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் எனும் வகையில் முதல் அளவுரு அமைந்திருக்கிறது.

வெளியீடுகளுக்கான ஒருங்கிணைந்த அளவீடு, வெளியீட்டகத் தரத்திற்கான ஒருங்கிணைந்த அளவீடு, அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் காப்புரிமை: வெளியிடப்பட்டது மற்றும் வழங்கப்பட்டது, திட்டங்களின் தடம் மற்றும் தொழிற்முறைப் பயிற்சி போன்றவைகளைக் கொண்டதாக ஆராய்ச்சி மற்றும் தொழில்முறைப் பயிற்சி எனும் வகையில் இரண்டாவது அளவுரு அமைந்திருக்கிறது.

பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான அளவீடு, முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அளவீடு போன்றவைகளைக் கொண்டதாகப் பட்டப்படிப்பு முடிவுகள் எனும் வகையில் மூன்றாவது அளவுரு அமைந்திருக்கிறது.

பிற மாநிலங்கள்/நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் சதவிகிதம் (பிரதேசத்தின் பன்முகத்தன்மை), பெண்களின் சதவிகிதம் (பெண்களின் பன்முகத்தன்மை), பொருளாதாரம் மற்றும் சமூக அடிப்படையில் பின்தங்கிய மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், கருத்து மற்றும் தகுதிகள் போன்றவைகளைக் கொண்டதாக வெளிக்களம் மற்றும் உள்ளடக்கம் எனும் வகையில் நான்காவது அளவுரு அமைந்திருக்கிறது.

கல்விச் சமநிலையாளர்கள் மற்றும் உடைமையாளர்கள், தர மதிப்பீடு போன்றவைகளைக் கொண்டதாக அகப்பார்வை எனும் வகையில் ஐந்தாவது அளவுரு அமைந்திருக்கிறது.

தரப்பட்டியல்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு, மேற்காணும் ஐந்து வகையான அளவுருக்களை முதன்மையாகக் கொண்டு, கல்வி நிறுவனத்தின் தரத்தினை மதிப்பீடு செய்து, பல்கலைக்கழகம் (University), கல்லூரி (College), மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), மேலாண்மை (Management), மருந்தாளுமை (Pharmacy), சட்டம் (Law), கட்டடக்கலை (Architecture), பல் மருத்துவம் (Dental) மற்றும் அனைத்தும் சேர்ந்தது (Overall) என்று பத்து பிரிவுகளின் கீழ் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது.

Research | ஆய்வு
Research | ஆய்வு

2021-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆய்வு நிறுவனங்கள் (Research Institution) எனும் புதிய பிரிவு சேர்க்கப்பட இருக்கிறது. தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு, இதற்கான விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தரவரிசைப் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் ஆய்வு நிறுவனங்களிலிருந்து குறைந்தது மூன்று ஆண்டு காலத்திற்கு 500 ஆய்வு வெளியீடுகள், அறிவியலுக்கான வலைத்தளத்திலோ (Web of Science) அல்லது ஸ்கோபஸ் (Scopus) எனும் மேற்கோள் தரவுதளத்திலோ வெளியாகி இருக்க வேண்டும் அல்லது குறைந்தது 1000 பேர் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2020-ம் ஆண்டு தரவரிசைப் பட்டியல்

இந்த அமைப்பின் 2020 ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலுக்குக் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்து கொண்ட கல்வி நிறுவனங்கள் – 3133, புதிதாகப் பதிவு செய்து கொண்ட கல்வி நிறுவனங்கள் – 1268 என்று மொத்தம் 4401 நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இவற்றுள் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்து கொண்டவர்களிலிருந்து 2913 நிறுவனங்கள், புதிதாகப் பதிவு செய்து கொண்டவர்களில் 858 என்று மொத்தம் 3771 நிறுவனங்கள் தர வரிசைப்பட்டியலுக்கான தகவல்களைச் சமர்ப்பித்திருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவற்றுள் அனைத்தும் சேர்ந்த பிரிவு – 1667, பொறியியல் – 1071, மேலாண்மை – 630, மருந்தாளுமை – 334, கட்டடக்கலை – 66, கல்லூரி – 1659, மருத்துவம் – 118 சட்டம் – 97, வேளாண்மை - 48 பல் மருத்துவம் – 115 என்று மொத்தம் 5805 நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன. இதே வரிசையில், மத்திய அரசின் கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகம் பிரிவில் அனைத்தும் சேர்ந்த பிரிவு – 90, பொறியியல் – 58, மேலாண்மை – 34, மருந்தாளுமை – 6, கட்டடக்கலை – 14, கல்லூரி – எதுவுமில்லை, மருத்துவம் – 2, சட்டம் – 7, வேளாண்மை – 1, பல் மருத்துவம் – 2 என்று மொத்தம் 214 நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்நிறுவனங்களில் வடக்கு மண்டலம் – 796, தெற்கு மண்டலம் – 2706, கிழக்கு மண்டலம் – 609, மேற்கு மண்டலம் – 1694 என்று மொத்தம் 5805 நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐஐடி - சென்னை
ஐஐடி - சென்னை

சிறந்த கல்வி நிறுவனங்கள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அனைத்தும் சேர்ந்த (Overall) பிரிவில் மொத்தம் 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இப்பட்டியலில் சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Indian Institute of Technology Madras) 85.31 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருக்கிறது. பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) 84.18 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்திலிருக்கிறது. இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் டெல்லி (81.33) - 3, மும்பை (80.75) - 4, காரக்பூர் (75.85) - 5, கான்பூர் (74.99) - 6, கவுகாத்தி (68.81) - 7 டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (68.76) - 8, இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ரூர்கி (68.48) - 9, வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (62.03) - 10 என்று முதல் பத்து இடங்களைப் பெற்றிருக்கின்றன.

தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (85.31) – 1, கோயம்புத்தூர், அமிர்தா விஷ்வ வித்யா பீடம் (60.74) – 13, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் (58.20) – 10, கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் (57.32) – 21, திருச்சிராப்பள்ளி தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (55.92) – 24, வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (53.89) – 28, சென்னை பல்கலைக்கழகம் (50.76) – 41, தஞ்சாவூர் சண்முகா கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (49.40) – 48, சென்னை, இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (48.59) – 51, சென்னை, எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (47.27) – 58, சென்னை, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (47.03) – 61, காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம் (46.85) – 64, சென்னை, சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுப்ட அறிவியல் நிறுவனம் (46.81) – 66, திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் (44.70) – 77, காஞ்சிபுரம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி (44.42) – 83, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (44.27) – 84, கோயம்புத்தூர், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (44.17) – 85, சென்னை, பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (44.03) – 87 என்று மொத்தம் 18 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

பல்கலைக்கழகங்கள்

Indian Institute of Science (IISc), Bengaluru
Indian Institute of Science (IISc), Bengaluru

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள பல்கலைக்கழகங்கள் பிரிவில் மொத்தம் 100 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) 84.18 புள்ளிகள் பெற்று முதலிடத்திலிருக்கிறது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், அமிர்தா விஷ்வ வித்யா பீடம் (62.27) – 4, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் (58.71) – 12, கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் (58.30) – 13, வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (55.22) – 16, சென்னை பல்கலைக்கழகம் (52.55) – 22, தஞ்சாவூர் சண்முகா கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (52.22) – 25, சென்னை, இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (51.32) – 28, சென்னை, எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (50.07) – 35, காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம் (49.02) – 36, சென்னை, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (48.77) – 39, சென்னை, சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (48.56) – 42, திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் (46.41) – 53, சென்னை, பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (45.67) – 59, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (45.58) – 60, திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனம் (42.57) - 72, சேலம், பெரியார் பல்கலைக்கழகம் (41.09) – 83, காந்திகிராமம் கிராமியக் கல்வி நிறுவனம் (40.65) – 91, காஞ்சிபுரம், செட்டிநாடு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (39.97) – 98 என்று மொத்தம் 18 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மீன்வளம் தொடர்பான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

பொறியியல் கல்லூரிகள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள பொறியியல் கல்லூரிகள் பிரிவில் மொத்தம் 200 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (89.93) முதலிடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் தவிர்த்து, தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (64.10) – 9, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் (59.89) – 14, வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (59.32) – 15, தஞ்சாவூர் சண்முகா கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (51.79) – 37, சென்னை, எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (50.95) – 41, காஞ்சிபுரம் சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி (49.26) – 44, கோயம்புத்தூர், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (47.21) – 49, சென்னை, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (46.77) – 51, திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனம் (43.71) - 60, மதுரை, தியாகராசர் பொறியியல் கல்லூரி (43.11) – 64, தஞ்சாவூர், இந்திய உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனம் (40.24) - 74, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் (39.40) – 80, கோயம்புத்தூர், குமரகுரு பொறியியல் கல்லூரி (39.24) – 82, கோயம்புத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (38.83) – 83, கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் (38.24) – 90, சென்னை, வேல்டெக் ரெங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (37.86) – 95, சிவகாசி, மெப்கோ பொறியியல் கல்லூரி (37.52) – 101, கோயம்புத்தூர், அரசு தொழில்நுட்பக் கல்லூரி (37.10) – 104, சென்னை, இராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (37.01) – 106, சென்னை, இந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (36.98) – 107, காஞ்சிபுரம், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி (36.91) – 108, சென்னை, பி.எஸ்.அப்துல்ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (35.41) – 123, பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரி (34.45) – 135, கோயம்புத்தூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி (33.79) – 142, சென்னை, சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (33.55) – 149, சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரி (33.53) – 150, கோயம்புத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி (33.43) – 152, திருவள்ளூர், ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி (33.24) – 155, காஞ்சிபுரம் புனித ஜோசப் பொறியியல் கல்லூரி (32.95) – 160, காஞ்சிபுரம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி (32.12) – 176, சென்னை, இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (31.63) – 182, கோவில்பட்டி, நேசனல் பொறியியல் கல்லூரி (31.36) – 189, சென்னை, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி (31.32) – 192 என்று மொத்தம் 34 பொறியியல் கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.

IIM - Ahmedabad
IIM - Ahmedabad

மேலாண்மைக் கல்லூரிகள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள மேலாண்மைக் கல்லூரிகள் பிரிவில் மொத்தம் 75 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (82.75) முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (61.77) – 14, திருச்சிராப்பள்ளி, இந்திய மேலாண்மை நிறுவனம் (60.79) – 15, சென்னை, கிரேட் லேக்ஸ் மேலாண்மை நிறுவனம் (55.80) – 23, திருச்சி தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (50.49) – 35, கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி (46.69) – 46, சென்னை, லயோலா வணிக மேலாண்மை நிறுவனம் (46.51) – 50, வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (45.89) – 55, சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் (44.81) – 59 என்று மொத்தம் 8 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மருந்தாளுமைக் கல்லூரிகள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள மருந்தாளுமைக் கல்லூரிகள் பிரிவில் மொத்தம் 75 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் டெல்லியிலுள்ள ஜாமியா ஹம்தார்ட் (80.50) எனும் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, ஜேஎஸ்எஸ் மருந்தாளுமைக் கல்லூரி (65.60) – 9, அண்ணாமலை நகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (59.88) – 12, சென்னை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (54.85) – 19, சென்னை, ஸ்ரீ இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (51.52) – 26, சென்னை, வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கல்வி நிறுவனம் (44.35) – 43, கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி மருந்தாளுமைக் கல்லூரி (42.21) – 51, சென்னை மருத்துவக் கல்லூரியின் மருந்தாளுமைக் கல்லூரி (40.93) – 57, கோயம்புத்தூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா துணை மருத்துவ அறிவியல் நிறுவனம் (38.17) – 66, கோயம்புத்தூர், கே.எம்.சி.எச். மருந்தாளுமைக் கல்லூரி (37.70) – 70 என்று மொத்தம் 9 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.

கல்லூரிகள்

சிறந்த கல்லூரிகள்
சிறந்த கல்லூரிகள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள கல்லூரிகள் பிரிவில் மொத்தம் 100 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் டெல்லியிலுள்ள மிராண்டா ஹவுஸ் (77.23) எனும் கல்லூரி முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, பிரசிடென்சி கல்லூரி (68.89) – 5, சென்னை, லயோலா கல்லூரி (68.03) – 6, கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (66.63) – 10, சென்னை கிறித்தவக் கல்லூரி (64.36) – 17, மதுரை, தியாகராசர் கல்லூரி (61.29) – 22, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (60.74) – 25, நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரி (59.98) – 27, கோயம்புத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (58.56) – 29, திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி (58.27) – 31, சென்னை, சமூகப் பணிக் கல்லூரி (57.99) – 33, கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரி (57.81) – 34, சென்னை, மகளிர் கிறித்தவக் கல்லூரி (56.78) – 38, திருச்சிராப்பள்ளி, பிசப் ஹீபர் கல்லூரி (56.65) – 39, சென்னை குயின் மேரிக் கல்லூரி (56.28) – 41, சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி (55.76) – 46, பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி (54.91) – 50, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி (54.67) – 52, விருதுநகர், செந்திக்குமார நாடார் கல்லூரி (54.63) – 53, திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி (54.53) – 54, சிவகாசி அய்ய நாடார் கல்லூரி (53.94) – 58, சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி (53.36) – 64, கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (53.32) – 65, திருச்சிராப்பள்ளி, ஹோலிகிராஸ் கல்லூரி (53.27) – 66, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி (53.08) – 68, கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (52.68) – 70, மதுரை, பாத்திமா கல்லூரி (52.20) – 74, நாகர்கோவில் மகளிர் கிறித்தவக் கல்லூரி (51.75) – 78, காரைக்குடி, அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி (51.55) – 80, கோயம்புத்தூர் சி.எம்.எஸ். அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி (51.49) – 82, கோயம்புத்தூர் டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (51.33) – 85, ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரி (51.25) – 87, நாமக்கல், மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (51.14) – 90 என்று மொத்தம் 32 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.

GATE 2022: ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் பட்டதாரித் தகுதித்தேர்வு - ஒரு வழிகாட்டல்!

மருத்துவக் கல்லூரிகள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் மொத்தம் 40 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (90.69) முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி (73.56) – 3, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசுப் பொது மருத்துவமனை (58.84) – 12, சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (57.90) – 13, கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியம் மற்றும் ஆய்வு நிறுவனம் (50.44) – 27, சென்னை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (49.06) – 31, சென்னை, சவீதா மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (46.49) – 34, அண்ணாமலை நகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (46.47) – 35 என்று மொத்தம் 7 மருத்துவக் கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.

சட்டக் கல்லூரிகள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள சட்டக் கல்லூரிகள் பிரிவில் மொத்தம் 20 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் பெங்களூரிலுள்ள இந்தியப் பல்கலைக்கழகத் தேசியச் சட்டப்பள்ளி (78.66) முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருக்கும் சட்டக் கல்லூரிகள் எதுவும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.

ஐஐடி கோரக்பூர்
ஐஐடி கோரக்பூர்

கட்டடக்கலைக் கல்லூரிகள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள கட்டடக்கலைக் கல்லூரிகள் பிரிவில் மொத்தம் 20 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் கோரக்பூர் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (80.46) முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (60.29) – 8, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி (50.30) – 17, சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் (48.73) – 18, சென்னை, இந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (48.50) – 20 என்று மொத்தம் 4 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.

பல் மருத்துவக் கல்லூரிகள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள பல் மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் மொத்தம் 30 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் டெல்லி மௌலானா ஆசாத் பல் மருத்துவ அறிவியல் நிறுவனம் (82.51) முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, சவீதா மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (72.34) – 4 சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (66.27) – 7, சென்னை, எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி (64.47) – 9, சென்னை, எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (54.02) – 27 என்று மொத்தம் 4 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.

கூடுதல் தகவல்கள்

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு வரிசைப்படுத்தியுள்ள அனைத்து வகையான கல்லூரிகள் குறித்தத் தகவல்களையும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்நிறுவனத்தின் https://www.nirfindia.org/ எனும் இணையதளத்திற்குச் சென்று பார்வையிடலாம்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு