Published:Updated:

`இனி இளங்கலை, முதுகலை பாடத்திட்டத்தில் இயற்கை விவசாயம் சேர்க்கப்படும்!' - ICAR அறிவிப்பு

Education (Representational Image) ( Pixabay )

கமிட்டி பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணியில் இருப்பதால், இந்த ஆண்டு பாடத்திட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை. விவசாயப் படிப்புகளில் அனைத்து இளங்கலை, முதுகலை படிப்புகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், விவசாய துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் பாடத்திட்டத்தை மறு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே இயற்கை விவசாயத்தை முக்கிய அங்கமாக பாடத்திட்டத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இயற்கை விவசாயம் என்பது இதுவரை தனித் தலைப்பாகக் கற்பிக்கப்படவில்லை. இயற்கை விவசாயம் பாடங்களின் ஒரு பகுதியாக மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தின் கூறுகளை பாடத்திட்டத்தில் இணைப்பது குறித்து டிசம்பர் 2021-ல், பேராசிரியர் ஜெயசங்கர் தெலங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்தின் (PJTSAU) துணைவேந்தர், பிரவீன் ராவ் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது; விரைவில் அறிக்கையை அக்குழு சமர்ப்பிக்கும் போது இயற்கை விவசாயம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

விவசாயம்
விவசாயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமிட்டி பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணியில் இருப்பதால், இந்த ஆண்டு பாடத்திட்டம்  நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை. வேளாண் படிப்புகளில் அனைத்து இளங்கலை, முதுகலை படிப்புகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயற்கை விவசாயம் என்பது உற்பத்தியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் செலவைக் குறைப்பதற்கு ஓர் அமைப்பாக இருப்பதால், இந்தத் துறையில் இளம் தொழில் வல்லுநர்கள் நன்கு அறிவாற்றலுடன் இருக்க வேண்டியது அவசியம் என இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் எஸ்.பி. கிமோதி தெரிவித்தார்.

College student (Representational Image)
College student (Representational Image)

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், இந்த பாரம்பர்ய தொழில்நுட்ப முறைகளை வேளாண் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டத்தில் இணைக்க உள்ளதாகவும் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism